Saturday, March 19, 2016

சூப்பி

#

தேவையானவை: துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, பால் - அரை டம்ளர், பூண்டு - 2 பல், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, பிரியாணி இலை, கீறிய பச்சை மிளகாய் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் துவரம்பருப்பு வேக வைத்த நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும், பூண்டை தட்டிப் போடவும். பின்னர் பால் சேர்த்துக் கலந்து உடனே இறக்கி பரிமாறவும். விருப்பப் பட்டால், பீன்ஸ், காலிஃப்ளவர், கேரட் சேர்த்துக் கொள்ளலாம்.

#கார சட்னி

தேவையானவை: சின்ன வெங்காயம் - ஒரு கப், தக்காளி - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 8, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தோல் உரித்த சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.
குறிப்பு: வெங்காயம், தக்காளியை வதக்கத் தேவையில்லை. செட்டிநாட்டு டிபன் வகைகளின் சுவையைக் கூட்டுவதில் இந்த கார சட்னிக்கு முக்கிய இட முண்டு.

#பால் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு, பொடித்த வெல்லம் - தலா 2 கப், தேங்காய் - ஒன்று, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, கொழுக்கட்டை உருட்டும் பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால் தனித்தனியே எடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள இரண்டாம் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். அதில் உருட்டி வைத்துள்ள உருண்டை களைப் போட்டு வேகவிடவும். உருண்டைகள் வெந்ததும், முதல் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

#பீட்ரூட் வடை

தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், சோம்பு, சீரகம், மிளகு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பருப்பு வகைகளை முக்கால் மணி நேரம் ஊறவிட்டு, அவற்றுடன், மிளகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய பீட்ரூட், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொரித்தெடுத்தால்... சுவையான, செட்டிந£ட்டு ஸ்பெஷல் பீட்ரூட் வடை தயார்.

#வெஜிடபிள் பொங்கல்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், தக்காளி, கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 5, பச்சைப் பட்டாணி - கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பட்டை - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று,  முந்திரி - 10, நெய் - தேவையான அளவு, எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பை சுத்தம் செய்து, மூன்றரை டம்ளர் நீர் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து குழைய வேகவிடவும். காய்கறிகள் அனைத்தை யும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய், எண்ணெயை சூடாக்கி, மிளகு, சீரகம், பட்டை, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்த காய்கறி கல வையை, குழைய வேகவைத்த அரிசி - பருப்புடன் சேர்த்துக் கிளறி, நெய் ஊற்றிக் கலந்தால்... வெஜிடபிள் பொங்கல் தயார். இதை சூடாகப் பரிமாறவும். தேங்காய் சட்னி  இதற்கு சிறந்த காம்பினேஷன்.

http://vasukimahal.blogspot.in/

No comments:

Post a Comment