Tuesday, March 15, 2016

மகரிஷியின் சூப்பர் கவிதை

மகரிஷியின்  சூப்பர்  கவிதை
BIST - CHD Bangalore
Prof. Madhavan - 9886067232

"இறைநிலையோடு எண்ணத்தை கலக்க விட்டு,
ஏற்படும் ஓர் அமைதியில் விழிப்பாய் நிற்க
நிறைநிலையே தானாக உணர்வதாகும்,
நித்தம் நித்தம் உயிர் உடலில் இயங்கும் மட்டும்,
உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்கொள்ள,
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்,
கரை நீங்கி அறிவு மெய்ப்பொருளாகும்,
கரைந்துபோம் தன்முனைப்பு காணும் தெய்வம்”  -  மகரிஷி
இவ்வளவு எளிமையாக விளக்கம் கூறி நம்மை செம்மை படுத்திவிட்டார் மகரிஷி.

எல்லா யோக மார்க்கங்களும் முயற்சியை மையமாக வைத்து தான்.  நாமும் எதுவரை  முயச்சி செய்ய வேண்டும் என்றால்,  இறைநிலையோடு எண்ணத்தை கலக்க விடும் வரை முயற்சி செய்தால் போதும்.  இதில் நம்மை முழுமையாக உணர்வு ரீதியாக நம்முடைய உணர்வை அகன்ற நிலைக்கு கொண்டு போகப்போக ஒரு கட்டத்தில் தானாக விரிய முடியாமல், விரிந்து செல்வதற்கு இடமும் இல்லாமல் ஒரு நிலைக்கு மனம் வரும்.  அப்போது அந்நிலையில் ஒரு அமைதி நிலை ஏற்படும்.  அந்நிலையில் மனம் விழிப்போடு நின்றால் அமைதியில் மனம் உறைந்து காணாமல் போகும்.  அமைதி என்பது கற்பிப்பது அல்ல, கற்பிக்கப் படுவதும் அல்ல.  உருவாக்குவதும் அல்ல,  உருவாக்கப் படுவதும் அல்ல.  தானாய் தானே நிலை பெறுவதே அமைதி நிலை.  இது தான் மௌன நிலையம் ஆகும்.  இந்த நிலையை வார்த்தையால் விளக்கிக் சொல்லவே முடியாது.  அப்படி சொன்னால், அது பொய் தான்.  இங்கு தான் ‘தியானம்’ என்று ஒன்று மலரவே ஆரம்பிக்கிறது.  இதற்க்கு முந்தைய நிலை வரை மனம் ஓர்மை படுவதற்கு ஒரு பயிற்சி முறை தானே தவிர, அவைகள் தியானமாக கருதுவது தவறு. 

தியானம் என்பது ஒரு செயல் அல்ல. தானாக நிகழ்வது.  ஏன் விழிப்பாய் நிற்க வேண்டும் என்றால், இங்கு கூட நம்முடைய கர்ம வினை நம்முடைய உணர்வு தளத்தை தாக்குவதற்கு தயாராக இருக்கும்.  நம்மை அங்கேயே தங்க வைபதற்கு தன்னுடைய முழு முயற்சியோடு செயல்படும்.  அதனால், விழிப்போடு இருப்போமேயானால்,  இங்கு என்ன இருக்கிறது? என்றால், முன்னால் உற்பத்தியான சுத்தவெளி என்ற நிலையைக் கடந்து, நம்மால் உருவான எண்ணமற்ற, சூன்யமான அரூபமான எங்கும் முடிவில்லாத, உணர்வு தளம் வரும்.  அதுதான் சுத்தவெளி உணர்வு.  இந்த ஆகாய பெருவெளியில் வெறும் உணர்பவன்  மற்றும் உணரப்படும் சூன்ய பெருவெளி மட்டுமே இருக்க முடியும். 

முதலில் நாம் உருவாக்கிய வெளி.  பிறகு அதுவே நமக்குள் தானாக மலர்ந்த ஒரு விஷயம்.  இது தானாக சித்தியான ஒரு நிலை.  அமைதி வந்துவிட்டால் தேடுதல் நின்று விடும்.  தியானத்தின் மீதான ஈர்ப்பும், கவர்ச்சியும் விட்டு விலகிவிடும்.  இந்த இடத்தில் தான் நிறைய பேருக்கு குழப்பம் உண்டாகும் இடம்.  அதனால் இதன் அருகில் வந்தவுடனயே அது தான் சுத்தவெளி அனுபவம் என்று உறுதி செய்து கொண்டு அதில் இன்னும் ஆழ்ந்து போகாமல், அடுத்த அடுத்த மார்கங்களை நோக்கி நகர ஆரமித்து விடுகிறார்கள்.  இந்த இடத்திற்கு வந்துவிட்டோமானால் சர்வ கல்பத்தை நெருங்கி விட்டோம் என்று பொருள்.  இந்நிலையில் நாம் இன்னும் ஆழ்ந்து நம்மை இழக்க தயாராகிவிட்டால் சர்விகல்ப நிலை.  இந்த உணர்வை உணர்வது யார்?  எது?  உடலா? இல்லை மனமா? உயிரா?  தெரியாது.  ஆனால் உணர்வு மட்டும் இருக்கும்.  ஆக, நம்மால் உணரப்படும் அந்த எல்லையற்ற மௌனம், தெய்வீக வெளி, இந்நிலையில் தான் “நிறைநிலை” என்ற அடுத்த கட்டம் நிகழும்.  இந்த வார்த்தைகள் எல்லாம் மகரிஷி யோசித்து எழுதவில்லை.  அது (இறை) அவராக தன்னை வெளிப்படுத்தி வந்தவைகள் தான்.  இது தான் தற்செயல் இயக்கம்.  ஏனெனில், மகரிஷி என்ற ஒரு தனி மனிதன் அங்கு இல்லை.  செயல் மட்டுமே இருக்கிறது, செய்பவன் இல்லாமல் இருக்கிறது.  இது தான் “நிறைநிலையே தானாக உணர்வதாகும்”.  உணரப்படும் காணாமல் போய்விட்டது.  உணர்பவனும் காணாமல் போய்விட்டான்.  அதனால் தான் “நரன் என்ற சிற்றறிவை நான் கடந்த போது நான் நீயாய் கூர்தலறம் வந்தியல்பு அறிந்தேன்” என்று கூறுகிறார் மகரிஷி.  ஆக, இயல்பில் அறிவதற்கு ஒன்றுமே இல்லை.  நான் உருவாகினதும் போய்விட்டது.  என்னுள் உருவானதும் போய்விட்டது.  நான் நானாகவே நிற்கிறேன்.  அனால், பழைய நான் இல்லை.  கவனித்த நான் காணாமல் போய்விட்டேன்.  அப்போ இருப்பது என்னவென்றால் அது தான் “தான்”
(தானாய், சுயமாய், இறையாய்) என்ற முழுமை நிலை.
வாழ்க  வளமுடன்.

No comments:

Post a Comment