Wednesday, March 16, 2016

வர்மக்கலை மருத்துவம்"

" வர்மக்கலை மருத்துவம்"

"வர்மக்லையின் வரலாறு":

        தமிழக பாரம்பரிய மருத்துவ முறைகளுள் ஒன்றான வர்மக்கலை சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஆதி முதல் சித்தனாம் சிவபெருமான் தன மனைவி பார்வதிக்கும் தன்னுடன் இருக்கும் நந்திக்கும் வர்மத்தைக் கற்றுக் கொடுத்தார். பார்வதி தன் மகன் முருகனுக்கும் முருகன் அகத்தியருக்கும், போகமுனிக்கும் கற்றுத்தந்தார். அகத்தியர் புலத்தியருக்கும் தேரையருக்கும் கற்றுதந்தார், போகமுனி புலிப்பணிக்கும் கொங்கனவருக்கும் கற்றுத்தந்து இவ்வர்மக்கலையை வளர்த்துள்ளனர். தமிழ்பெருமக்கள் இக்கலையை ஒரு தற்காப்புக்கலையாகவும் நோய் நீக்கும் மருத்துவ கலையாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

"சக்திகூர் அடங்கல் வர்மம்'":

         கால் பாதத்தின் நடுமையத்தை அளந்து இரண்டு விளிம்புகளிலும், ஒரு விரல் உட்புறமாக அமைந்து உள்ளது.

"இயக்கம் முறை":

         நடு மூன்று விரல்களால் அழுத்தம் தர வேண்டும். அதிகமாக அழுத்தக்கூடாது. இரத்தப்போக்கு நிரந்தரமாக ஆகாமல் போய்விடும். உள்ளங்கை இரண்டும் படங்காலில் பதித்து வைத்து அழுத்தவும்.

"பயன்கள்:"

       மயக்கத்தை ஒழுங்கு செய்யும், தலை ஆற்றலை சரி செய்யும். பெண்களின் அதிக  உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் தளர்ச்சியை நீக்கும்.

                      
                                    நன்றி
                             வர்மக்கலை ஆசான்
                                எஸ்.கோபாலகிருஷ்ணன்
                                தீத்திபாளையம்
                                கோவை
                                 +919894285755

No comments:

Post a Comment