Sunday, March 20, 2016

தவத்தின் பயன்கள் பத்து:


.

.

1) மனித வாழ்வின் பெருநிதியாகிய கருமையத்தை தூய்மையாகவும்,  வலுவுடையதாகவும்,  அமைதியும் இன்பமும் பெருக்கும் திறனுடையதாக்கவும் உதவுகிறது.

2) மனிதனின் இறையுணர்வும், உயிர் விளக்கவும், அறநெறி நின்று வாழும் தன்மையும் உண்டாக்கும்.

3) மனத்தின் விரியும் தன்மை பெருகுகிறது.

4) எண்ணம், சொல், செயல்களில் தவறு செய்யா விழிப்பு நிலை மேலோங்குகிறது.

5) அறிவின் திறன்கூடி அதன் கிரகிக்கும் சக்தி கூடுகிறது.

6) ஒத்துப் போதல்,  சகித்துக் கொள்ளுதல் போன்ற பண்புகள் மலர்கின்றன.

7) அவ்வப்போது செய்துவிடக் கூடிய தவறுகளையும், நம்மிடம் இருக்கக் கூடிய தீய குணங்களையும் களைந்து தூய்மையைப் பெருக்கிக் கொள்ள துணைபுரிகிறது.

8) ஆக்கப் பூர்வமான செயல்களை ஆற்றும் திறன் ஓங்குகிறது.

9) தன் அமைதி, குடும்ப அமைதி, சமுதாய அமைதி மூலம் உலக அமைதிக்கு வழி வகுக்கிறது.

10) நடக்கக்  கூடியதையே நினைக்கச் செய்து நினைத்ததையே நடக்கச் செய்கிறது.
.

வாழ்க வையகம்           வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"மனம் தன் திறமையையும் வல்லமையையும்
பெருக்கிக் கொள்ளும் பயிற்சியே 'குண்டலினி யோகம்".
.

அறிவின் நிலையுணர் :

"அறிவயறியுங்கால் அரூபநிலை உயிர் விளங்கும்
அறிவாக உயிர் ஆற்றும் அற்புதங்கள் விளக்கமாம்."
.

அறிவின் நான்கு நிலைகள் :

"அறிவறிய வேண்டு மெனில் புலன் கடந்து
அறிந்துள்ள அத்தனையும் கடந்து நின்று
அறிவிற்கு இயக்ககளப் பொருள் பரம
அணுவான உயிர்நிலையை உணரவேண்டும்.
அறிவங்கே உயிராகும் துரியமாகும்
அந்நிலையும் கடந்துவிடத் திரியாதீதம்
அறிவிந்த நான்கு நிலைகளில் அவ்வப்போ
அனுபவமாய் நின்று நின்று பழக வெற்றி."
.

தவம்:

"தெய்வ அறிவே திருந்திய அறிவாம்;
உய்யும் நல்வழி உள்ளுணர் தவமே;
செய்யும் வினைகளைச் சீரமைத்திட
ஐயமில்லை அறும் பிறவித்தொடர்."
.

இயற்கை முறை தவம் (Simplified Kundalini Yoga) :

"ஒன்றி ஒன்றி நின்று அறிவைப் பழக்க
உறுதி, நுட்பம், சக்தி இவை யதிகமாகும்
அன்று அன்று அடையும் அனுபவங்கள் எல்லாம்
அறிவினிலேநிலைத்து விடும்.  ஆழ்ந்து ஆய்ந்து
நன்று என்று கண்டபடி செயல்கள் ஆற்றும்
நற்பண்பு புலன்களுக்கு அமைந்து போகும்
என்றென்றும் கருவிடத்தே அறிவை ஒன்றும்
இயற்கைமுறை சிறப்புடைத்து  ஈதே தவமாம்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment