Saturday, October 29, 2016
Thursday, October 27, 2016
Vahan. Registered number and addresses
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.
0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.
எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.
விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:
TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை
நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155
தயவுசெய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே ;-
Rest properly. Live withot decease
கடைசியாக இரவு 9 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு நினைவிருக்கிறதா? கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும்நேரத்தின் சராசரி அளவு தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதைக் கவனித் திருக்கிறீர்களா?8 மணிக்குள் இரவு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால் 9 மணிக்குள் உறங்கிப்போவோம்.அது ஒரு காலம். 9 மணித் தூக்கம் 10 மணியாகி, நள்ளிரவாகி, இப்போது அதிகாலை வரை வந்துவிட்டது. அதிகாலை 3 மணி, 4 மணி வரைகூட விழித்திருக்கிறார்கள். இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது... என்பது எல்லாம் தனி. எந்த உடனடி காரணமும் இல்லாமல் தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக்கொண்டிருக்கின்றனர். இதன் விளைவுதான், இந்த 20 ஆண்டுகளில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள். இரவுத் தூக்கம் தள்ளிப்போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தவறான வாழ்வியல்முறைகளால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.நம் இரவுத் தூக்கம் எதனால் தள்ளிப்போகிறது...நமக்கு ஏன் தூக்கம் வருவதில்லை? இதற்கு `நமது உடல் பிரச்னைகள், மனக் கவலைகள்தான் காரணம்' என நினைக்கிறோம். இது முழு உண்மை அல்ல.உண்மையில் நாம் உறக்கத்தைத் தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடத்திலும், பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன. இரவுச் சந்தையில்தான் இப்போது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு `கோடி’கள் புரள்கின்றன. இரவுச் சந்தை என்பது, முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை. டிஜிட்டல் பொருட்களை நாம் சரியாக அணுகத் தெரியாமல் தடுமாறுவதையே வியாபாரம் ஆக்கிவருகிறார்கள்.அதிகரித்துவரும்`காஸ்ட் ஆஃப் லிவிங்' மற்றும் குடும்பக் கடமைகளைச் சமாளிக்க, தனக்குப் பிடிக்காத வேலைகளையும் செய்தாக வேண்டும். அதுவும் தொழிலாளர் சட்டத்தை மதித்து 8மணி நேர வேலை எல்லாம் கிடையாது. குறைந்தது 10 மணி நேரம் உழைக்க வேண்டும். அதில் டார்கெட்டை எட்டிப்பிடிக்க வேண்டும். மனஉளைச்சல் தரும் இந்த வேலையைச் செய்து விட்டு,வெளியே வந்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டும். சோர்வுடன் வீட்டுக்கு வந்து விழுந்ததுமே டி.வி-யை ஆன் செய்து விடுகிறார்கள். அந்த மாய உலகத்தில் விரியும் வண்ண வண்ணக் காட்சிகளில் மனம் மயங்குகின்றனர்.இளம்வயதினர் மட்டுமின்றி, பலரும் ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என மூழ்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சமூக வலை தளங்கள் எனும் உலகத்துக்குச் சென்றுவிட்டால் அங்கு அதற்கான வேடம் தரித்து பலர் பிஸியாகிவிடுகிறார்கள். முன்னர் எல்லாம் இரவு உணவு முடித்ததும் திண்ணையில் ஓரிரு மணி நேரம் நண்பர்களோடு உட்கார்ந்து பேசிவிட்டே உறங்கச் செல்வார்கள். வீட்டுத் திண்ணை வாட்ஸ்அப் ஆனது. வாட்ஸ்அப் உரையாடலில் நேரம் போவதே தெரிவதில்லை.சொந்த வீட்டில் இருப்பவர்களுடன்கூட, வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளங் களின் வழியே தொடர்புகொள்பவர்களும் இருக்கிறார்கள்.தினமும் நள்ளிரவைத் தாண்டிய சாட்டிங்குக்குப் பிறகு `குட்மார்னிங்' சொல்லி விட்டுத்தான் படுக்கைக்குச் செல்கிறார்கள்.இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து, `ஃபேஸ்புக்கில் போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ், வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா?' என அடிக்கடி செக் செய்து கொண்டே இருப்பதை `கம்பல்சிவ் பிஹேவியர்' எனச்சொல்லும் ஒருவகையான மன நலப் பிரச்னை என்றும், `கண்டிஷனல் இன்சோம்னியா' எனும் தூக்கமின்மை நோய் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். பலர் தினமும் காலையில் விழித்து எழுந்ததும் செய்யும் முதல் வேலை என்ன? தலையணை அருகே இருக்கும் மொபைலை எடுத்து இன்டர்நெட்டை ஆன் செய்து, வாட்ஸ்அப்பில் ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா எனப் பார்ப்பதுதான். நாம் எவ்வளவு தூரம் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகிவருகிறோம் என்பதை உடனடியாக உணரவேண்டிய தருணம் இது.இரவுத் தூக்கம் தடைபடுவதால் ஏற்படும் பிரச்னைகள்:நமது உடலுக்குள் மனசுழற்சிக் கடிகாரம் இருக்கிறது. பொதுவாக சூரிய உதயத்தின்போது எழுந்து உற்சாகமாக வேலைசெய்வதும், சூரியன் மறைந்த பின்னர் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் செல்வதும்தான் இயற்கையோடு இயைந்த வாழ்வு. ஏன் நாம் சூரிய வெளிச்சத்தில் மட்டும் இயங்க வேண்டும் என்பதற்கு அறிவியல் விளக்கமும் உண்டு. சூரியன் மறைந்த பிறகு, இருட்டு நேரத்தில்தான் மெலட்டோனின் முதலான பல ஹார்மோன்கள் நமது உடலில் சீராகச் சுரக்கும். நாம் இரவு நேரத்தில் உடலுக்கு ஓய்வு தந்து உறங்கும் போதுதான் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றம் உடலில் சீராக நடக்கும். நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான குரோத் ஹார்மோன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டீரான் போன்ற பிரத்யேக ஹார் மோன்கள் சமச்சீராகச் சுரக்கும். முறையற்ற இரவுத் தூக்கத்தால் ஹார்மோன்கள் சீராக உற்பத்திசெய்யப்படாமல் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. கடந்த சில வருடங்களாக குழந்தைப் பேறின்மை பிரச்னை இளம் தம்பதிகளிடம் அதிகரித்துவருகிறது. பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, ஆண்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைவு ஆகியவற்றுக்கு, முறையற்ற இரவுத் தூக்கமே முக்கியக் காரணம்.ஒழுங்கற்ற தூக்கத்தால் பயம், பதற்றம், சோர்வு ஆகியவை வருகின்றன. மனநலன் சார்ந்த பல பிரச்னைகள் வருவதற்கும் இதுதான் காரணம். இரவு நெடுநேரம் கழித்து உறங்குவதாலும், போதுமான நேரம் தூங்காததாலும், ஆழ்நிலை தூக்கம் அடையாமல் மேம்போக்காகத் தூங்கு வதாலும் மெள்ள மெள்ள உடற்பருமன், சர்க்கரை நோய், குறிப்பாக ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக் ஆகியவைவருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.எல்லோராலும் இயல்பாக உடனடியாகத் தூங்கிவிட முடிவதில்லை. ஒவ்வொருவருக்கும் தூக்கம் தடைபடுவதற்கு வெவ்வேறு காரணிகள் இருக்கின்றன. பொதுவாக, தூக்கத்தைப் பாதிக்கும் காரணி வெளிச்சம்தான். இருள்தான் மனிதர்களுக்குத்தூக்கத்தைத் தூண்டும். அதனால்தான் வெளிச்சத்தை அணைத்துவிட்டுத்தூங்குகிறோம். சமீப ஆண்டுகளாக இரவிலும் வெளிச்சம் கண்களைப் பறிக்கிறது. வீதிகளில் மட்டும் அல்ல, வீட்டுக்குள்ளும் இரவு வெளிச்சம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிட்டது. ஒரு காலத்தில் மின்சார விளக்கு மட்டும்தான் நமக்கு இரவு வெளிச்சம். பிறகு டி.வி வந்தது, கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், டேப்லெட் எல்லாம் வந்துவிட்டன. அனைத்தும் அதிஉயர் வெளிச்சத்தை உமிழ்கின்றன. இதனால் நமது தூக்கம் தள்ளிப்போகிறது.மொபைல் வெளிச்சம் தூக்கத்துக்குக்கடும் எதிரி. பலர் அறை விளக்குகளை அணைத்துவிட்டு மொபைலில் நோண்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். கண்களுக்கு அருகில் வைத்து மொபைலைப் பயன்படுத்தும் போது, அந்த வெளிச்சம் நமது கண்களையும் மூளையையும் பாதிக்கும்; தூக்கத்தைத் தாமதப்படுத்தும். ஒவ்வொருவருக்கும் வேலை நேரம் என்பது வித்தியாசப்படும். வேலைக்கு ஏற்ப தங்களது வாழ்வியல்முறையைஆரோக்கியமான வகையில் மாற்றிக்கொண்டால்பிரச்னை வராது.பொதுவாக இரவு 9 முதல் 11 மணிக்குள் உறங்குவதும். காலை ஐந்து முதல் ஏழு மணிக்குள் எழுவதும்தான் சிறந்தது. அதிகத் தூக்கம் எப்படி ஆபத்தோ, அதுபோல குறைந்த தூக்கமும் ஆபத்தானது. இரவு தாமதமாக உறங்கினாலும் காலையில் அலாரம் வைத்து சீக்கிரமாக எழுந்துவிடுவது தவறு. அனைவருக்கும் ஆறு மணி முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.நாம் அவசியம் நன்றாகத் தூங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். நேர மேலாண்மையைச் சரியாகக் கையாளத் தெரியாதவர்கள் தடுமாறுகிறார்கள். நண்பர்களுக்கு, மொபைலுக்கு, டி.வி-க்கு என நேரம் ஒதுக்குவதில் தவறு இல்லை. உங்கள் உடலுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.
நாம் - முதல் தலைமுறை
நாம் - முதல் தலைமுறை,
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
பரன் + பரை - ஏழாம் தலைமுறை,
பரன் + பரை = பரம்பரை
ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக,
பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை
முறையாக என்று பொருள் வரும்.
வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இதுவும் *தமிழுக்கும் தமிழருக்கும்* ஒரு தனிச் சிறப்பு!
Tuesday, October 25, 2016
ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி :
★****★****★****★****★
நீங்கள் மரத்தை நட வேண்டாம் , இந்த துளசியையாவது நடுங்கள் !!!
சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள் தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.
ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
இருப்பினும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க எளிமையாக வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம்.
அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும்
காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை அரச மரம், மூங்கில் மற்றும் துளசிச் செடி.
இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும்.
ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.
துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.
துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிற்போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும்.
பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பிபிஎம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பிபிஎம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க
72 கோடி அரச மரங்கள் (அல்லது)
720 கோடி மூங்கில் மரங்கள் (அல்லது)
7,200 கோடி துளசிச் செடிகள் தேவை.
இதில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் 16 துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.
🌿pls share all group's.🌿
முழுமைப்பேறு
வேதாத்திரிய சிந்தனைகள் :
===========================
" "
-------------------------------
அறிவு ஆறாம் நிலையை எய்த பின்னர்
அது முழுமை பெற்றுத் தனையறியும் மட்டும்
அறிவிற்கு அமைதிகிட்டா ; அவ்வப்போது
அது தேவை, பழக்கம், சூழ்நிலைகட் கொப்ப
அறிவேதான் காம முதல் அறு குணங்கள்
ஆகிவிளைவாய் இன்பதுன்பம் துய்த்து
அறிவுதன் மூலநிலை நோக்கி நிற்கும்
அதன்பிறகே முழுமைப்பெறும், அமைதி உண்டாம்.
- வேதாத்திரி மகரிஷி
மழை பொழிகிறது. அது வெள்ளமாக மாறுகிறது.
ஓடுகிறது. சிறுசிறு குட்டைகளில் நிரம்புகிறது.
அதன் பின் பெரிய பெரிய ஏரிகளிலும் நிரம்புகிறது.
அதன் வேகம் குறையவில்லை. காட்டாற்று
வெள்ளமாக மாறி ஓடிக்கொண்டே இருக்கிறது.
அணைகள் கட்டி சேமிக்கிறார்கள். நிரம்பிய பிறகு
மீண்டும் வேகமெடுத்து ஓடுகிறது. அதன் வேகம்
குறையவில்லை. இறுதியாக கடலில் போய்
கலக்கிறது. அதன் பிறகே அதன் வேகம் தனிகிறது.
ஏன் ? ஏனெனில் நீரின் மூலம் கடல்தான். எனவே
தன் மூலத்தோடு இணைந்தபிறகே அது அமைதி
பெறுகிறது. இது போன்றுதான் மனித மனமும்.
அதன் ஆதிநிலை எது என அறியாததால் புலனளவில்
தன்னைக் குறுக்கிக்கொண்டு அது தேவை, பழக்கம்,
சூழ்நிலைகட் கொப்ப, பேராசை, சினம், கடும்பற்று,
முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை,
வஞ்சம் எனும் ஆறு தீய குணங்களாகி, விளைவாக ஐந்து
பெரும் பழிச் செயல்களாகிய பொய், சூது, களவு, கொலை,
கற்பழிப்பு எனும் நிலைகளில் இயங்கி, இன்பம், துன்பம்
ஆகியவற்றை மாறிமாறி அனுபவித்து நிறைவு பெறாமல்
துன்பமடைகிறது. சோர்வடைகிறது. அது தனது ஆறாம்
அறிவின் சிறப்பை உணர்ந்து, தன்னைப் பற்றி சிந்தித்து,
தனது மூலநிலையை அறிந்து அந்த பரம்பொருளோடு
தன்னை இணைத்துக்கொள்ளும்போது அமைதியடைகிறது.
ஆனந்தமடைகிறது. நிறைவு பெறுகிறது. முழுமையடைகிறது.
தன்னையறிந்து அந்நிலையில் விழிப்போடு இருந்து பிற
உயிர்களிடத்தில் அன்பும் கருனையுமாக வாழும் வகையில்
எண்ணம், சொல், செயல்களை ஒழுங்குபடுத்தி
செயல்படுவதே முழுமைப்பேறு.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
அம்மா! அம்மா!*
*
*✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :*
*கடைசி உருண்டையில்தான் எல்லா*
*சத்தும் இருக்கும்,*
*இத மட்டும்* *வாங்கிக்கோடா*
*கண்ணா!*
*✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான்*.
*✏ தன் 'அம்மா' தனக்கு* *என்னவெல்லாம்*
*செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.*
*அவன் அதை உணரும்போது*, *அவள் உயிரோடு இருப்பதில்லை.*
*✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.*
*
*✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.*
*✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.*
*✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!*
*✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.*
*✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'*
*✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்*
*✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்*
*✒ தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!*
*✏ அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக்* *கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித்* *தந்த அந்த (தொட்டில்)* *வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.*
*நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு*
*✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?*
*✒ 'அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.*
*✏ ஆயிரம் கைகள் என்* *கண்ணீரைத் துடைத்துப்*
*போனாலும், ஆறாத* *துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.*
*✒ கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.*
*✏ நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!*
*✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!*
*✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை*
*என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை*.
*✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.*
*✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை*.
*✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!*
*✏ 'அம்மா...!*' *அன்று நம்* *தொப்புள்கொடியை* *அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின்* *தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு* *விழா ரிப்பன்!*
*என் நண்பர் அனுப்பியது*
பிச்சைக்காரர்களை ஒழிக்க அறநிலைய சொத்துக்கள்
உலக சமாதானம் – WORLD PEACE
================================
பிச்சைக்காரர்களை ஒழிக்க அறநிலைய சொத்துக்கள்
---------------------------------------------------------------------------------------
வேலையில்லாக் குறைபாட்டால் வயோதிகத்தால்
வியாதியினால் வருமானம் ஏதுமின்றி
மூலைமுடுக்குகளில் வாழ் பிச்சைக்காரர்
முழுஅளவில் வளைத்தாங்காங்குள்ள தர்ம
சாலைகளில் நிரப்பி யவரர்வர்க்கு ஒத்த
சாப்பாடு தொழில் கொடுக்க உலகில் உள்ள
சோலைசூழ் கோயில் மடம் ஆதினங்கள்
சொத்து பயன்படும் சிறந்த முறைவகுப்போம்.
மனித இனம் வாழ்வில் பலதுறைகளில் பெரும் அளவாக முன்னேற்றம் அடைந்திருக்கிறது. எனினும் இன்னும் சில நாடுகளில் பிச்சை வாங்கிச் சாப்பிட்டு ஜீவித்து வருகிறார்கள். இதற்குக் காரணம், வறுமை, வியாதி, பழக்கம் இவைகளே யாகும். இந்த நிலையை மாற்ற வேண்டியது அறிஞர்களின் பொறுப்பே ஆகும்.
இன்று பல அறநிலையங்களில் அளவற்ற சொத்துக்கள் குவிந்து இருக்கின்றன. பக்தர்களின் அறிவு நிலையைப் பயன்படுத்தும் முறைகளுக்குக்காக அவசியமான தொகையை ஒதுக்கி வைத்து, மீதித் தொகையைக் கொண்டு, எந்த நிலையத்தால் எத்தனை பிச்சைக் காரர்களைப் போஷிக்க முடியும் என முதலில் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சட்டத்தின் உதவியால் பிச்சை வாங்குவதையும் பிச்சைபோடுவதையும் குற்றமாக்கி விடவேண்டும். கைது செய்யப்படும் பிச்சைக்காரர்களை ஆங்காங்கே பாழடைந்து கொண்டு வரும் சத்திரங்களில் நிரப்பி, அவரவர்களின் உடல், பலம், வயது இவைகளுக்கேற்றபடி கல்வி, தொழில் இவைகளைப் போதித்து, உணவு கொடுத்து வர வேண்டும். இந்த முறையைத் தொடர்ந்து பத்து வருடங்கள் அமுல் நடத்தினால் உலகில் எந்த நாட்டிலும் பிச்சைக்காரர்கள் இல்லாமல் செய்துவிடலாம். உலகில் எந்தப் பாகத்திலேனும் ஒரு மனிதன் பிச்சை கேட்டு வாங்கி யுண்ணும் நிகழ்ச்சி மனித இனத்திற்கே அவமானச் சின்னமாகக் கருதப்பட வேண்டும்.
பிச்சைக்காரர்களில் குஷ்ட ரோகிகளின் நிலைமைதான் மிகவும் பரிதாபத்திற்கு உரியது. அவர்களைப் பிரித்து விசாலமான தனி இடங்களில் வாழ வைக்க வேண்டும். அவர்களிடம் ஆண் – பெண் தொடர்பு உணர்ச்சி அதிகமாக இருக்கும். அவர்களிடமிருந்து சந்ததிகள் தோன்றாமலிருக்க விந்து நாதத்தில் ரசாயன மாறுபாடுகளை ஏற்படுத்த சுகாதார நிபுணர்களால் முடியாததல்ல. கண்பார்வைக்கே அருவருப்பும் துன்பமும் அளிக்கக்கூடிய இந்த நோய், அது பற்றி இருப்போர்களை எவ்விதமாக துன்புறுத்தும் என்பதை யூகிக்கும்போது, இந்த நோயை ஒழிக்கும் முயற்சியில் அறநிலையங்களின் பணத்தைச் செலவிடுவது அனைவருக்கும் சம்மதமே அளிக்கும்.
கடவுளுக்கு என ஒதுக்கப்பட்ட பணத்தை வேறுவழியில் செலவு செய்யலாமா? என சில அன்பர்கள் கேட்கக்கூடும். கடவுளை மனிதர்கள் காப்பாற்ற வேண்டுமென்பதோ, பாதுகாக்க வேண்டுமென்பதோ அறியாமையாகும். கடவுள் என்ற நிலையை மனிதன் அறிந்து தெளிவாகவும் அன்பாகவும் வாழ, மனிதர்களைப் பக்குவம் செய்யவே அறநிலையங்கள் தோன்றின. பின்னர் பல பொருட்களின் வியாபாரச் சந்தையைக் கூட்டி வியாபாரிகள் அந்தச் சமயத்தில் மக்களுக்கு உற்சாக மூட்ட ஆலயங்களை அவர்கள் செலவில் அலங்கரித்து திருவிழாக்களும், உற்சவங்களும் ஏற்படுத்தி விட்டார்கள். இன்று மிகச் சிறந்த முறையில் பல பொருள்களின் கண் காட்சிகள் உலகெங்கும் நடந்து வருவதால் இதற்கென ஏற்பட்ட உற்சவங்கள் தேவையில்லை. ஆகையால் பக்தர்களின் வழிபாடுகளுக்கு வேண்டிய அவசியமான செலவுகளுக்காக ஒரு அளவு தொகையை ஒதுக்கி வைத்துக் கொண்டு, மற்ற சொத்துக்களையும், ஆபரணங்களையும் பிச்சைக்காரர் பிரச்சனையை தீர்க்கவும் தொழில் பள்ளிகளை ஏற்படுத்தவும் செலவிட்டு சமூக நலத்தைப் பெருக்கலாம்.
எந்த வகையிலோ குறுகிய நோக்கம் உடையவர்கள் கூட இந்தத் திட்டத்தை ஒப்புக்கொள்வார்கள் என நம்புகிறேன். இந்தத் திட்டத்தின் ஆரம்பத்தில், கடவுளை மனிதன் பாதுகாக்க வேண்டும் என்ற கற்பனையாகக் கொள்ளும் அறியாமையைப் போக்கவும், அந்தக் கடவுள் தத்துவத்தை அனைவருக்கும் தெளிவு படுத்தவும் சிந்தனையாளர்களின் பிரசாரம் அவசியமாகும்.
- வேதாத்திரி மகரிஷி
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !