Friday, September 30, 2016

ஏலக்காயில் இவ்ளோ இருக்கா?

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை...

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

http://www.koodal.com/health/paati_vaidyam.asp?id=749&title=cardamom-as-a-medicine-home-remedies

அனுபவ வீட்டு மருத்துவக் குறிப்புகள்!!-மின்னூல்

நம் முகநூல் நண்பர் திரு.பொன்.தங்கராஜ் அவர்கள் கடந்த 2 வருடங்களாக எனக்கு ஈமெயிலில்அனுப்பித் தந்த அனுபவ வீட்டு மருத்துவக் குறிப்புகள் அனைத்தையும் தொகுத்து இந்த சிறிய மின்னூலாக வெளியிடுகிறேன்.நண்பர் திரு.பொன்.தங்கராஜ் இப்போது சென்னைவாசி.BSNL அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.இயற்கை விரும்பி.மாற்று மருத்துவம் மற்றும் இயற்கை-சித்தமருத்துவம் சம்பந்தமாக அவரிடம் உள்ள தகவல்களை அவருடைய நண்பர்கள் அனைவருக்கும் ஈ மெயிலில் அனுப்புவதை சேவையாக செய்து வருகிறார்.

  நான் பகிரும் நிறைய ஆன்மீக விஷயங்கள்/ஜோதிடம்/பரிகாரங்கள் போன்ற விஷயங்களில் அவர் நிறைய எதிர்மறை விமர்சனங்களை வழங்கி இருந்தாலும்,அதையும் தாண்டி,நண்பர் பொன்.தங்கராஜ் மீது நானும்,என்மீது அவரும் மிகவும் அன்பும்,மரியாதையும் வைத்து உள்ளோம்.ஓரிருமுறை தொலைபேசியில் மட்டுமே பேசி உள்ளோம்.இதுவரை ஒருவரை ஒருவர் நேரி பார்த்ததும் இல்லை.இருப்பினும்நண்பர் பொன்.தங்கராஜ் மீது எனக்கு மிகயான அன்பும் மரியாதையும் உண்டு.விரைவில் சந்திக்க இறைவன் அருள் புரியட்டும்.
============================================

நண்பர் இன்று அனுப்பிய மெயில் இது :-

மருத்துவக் குறிப்புகள்
இந்த முக நூல் பக்கத்தில் நான் பதிவிட்டிருக்கும் அனைத்து மருத்துவக் குறிப்புகளையும் உங்கள் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளவும் பலஆயிரம் பேரை இந்த மருத்துவக்குறிப்புகள் சென்றடையட்டும் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
சித்தர்கள் தாங்கள் அறிந்து தெரிந்த மருந்துகளை சுய நலத்துடன் மறைத்து வைக்காமல் எல்லோரும் பயன் படும்படி எழுதி வைத்து சென்றுள்ளார்கள்
அப்படிப் பட்ட சித்தர்களின்  மருத்துவக் குறிப்புகளை சில தன்னலமற்ற சித்த இயற்கை மருத்துவர்கள் நூல்கள் வாயிலாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் நான் நேரிடையாக சந்திக்கும்போதும் கூறியவற்றின் தொகுப்பே இந்த முக நூலில் கொடுத்துள்ளேன்
இது என்னோடு மட்டும் நின்று விடக் கூடாது
மக்கள் தாங்களே தங்கள் நோய்க்கு தங்கள் அருகாமையில் இயற்கை தந்திருக்கும் மூலிகைகளைக் கொண்டு மருத்துகளைத் தயாரித்து நோய் நீங்கி
நலம் பெற்று வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்
இதை நூலாக ஆக்கி பணம் சம்பாதிப்பது எனது நோக்கமல்ல
ஆகவே மின்  நூலாக்கி எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்க செய்யவேண்டும் என்பதே எனது எண்ணம்
எந்தப் பணத்தையும் எதிர்பார்க்காமல் பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் நம் முன்னோர்கள் அவர்களின் சந்ததியினர் பயன்பாட்டுக்கென  விட்டு சென்ற இந்த அரிய மருத்துவக் குறிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில்
பொன் . தங்கராஜ்
==============================================

நண்பர் அனுப்புவதற்கு முன்பாகவே,நான் இதையெல்லாம் தொகுத்து,மின்னூலாக தயார் செய்து
உள்ளேன்.என்ன ஒரு ஒற்றுமை!இந்த மின்னூலை நம் முகநூல் நண்பர்கள் அனைவரும் படித்து/பதிவிரக்கம் செய்து,அனைவருக்கும் பகிரவும்.

என்றும் உங்கள் உறவை வேண்டும்,
உங்கள் டாக்டர்.பாஸ்கர் ஜெயராமன்
09341966927  / 09738557242(வாட்ஸ் அப்)

மின்னூல் பதிவிரக்கம் செய்ய :-

https://drive.google.com/file/d/0B42v-GeMi-hedFdCTlB3cklDWUk/view?usp=sharing

வாழ நினைத்தால் வாழலாம்

'' வழியா இல்லை பூமியில்''..
..''மஹாளய அமாவாசை'':

''எமனேஸ்வரம் சொர்ணகுஜாம்பிகை உடனுறை
மல்லிகார்ஜுனேஸ்வரர், எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்'' .ஆலய தொடர்புக்கு
;9486013533...இத்தலத்தில் அமாவாசை நாட்களில் விநாயகர்,முருகர்,
மல்லிகார்ஜுனேஸ்வரர், எமனேஸ்வரமுடையார் ,சொர்ணகுஜாம்பிகை,பைரவர்
சன்னதிகளில் தீபம் ஏற்றி,நம் முன்னோர்களின் அதாவது பித்ருக்களின் நினைவாக
''மோட்ச தீபம்''ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இனம்புரியாத நோய்கள்,
உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும்
திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள்குழப்பம், கடன்
தொல்லை,தரித்திரம்,சேமிக்க முடியாத சம்பாத்தியம் போன்ற குறைகளுக்கு ஒரு
சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை
செய்வதுதான்.அதுவும் மஹாளய நாட்களில் செய்ய முடியதாவர்கள் மஹாளய அமாவாசை
நாட்களில் மட்டுமாவது செய்வது சிறப்பு.அன்று இத்திருக்கோயிலில் முறைப்படி
மோட்ச தீபம் ஏற்றி வழிபடலாம்.[புரட்டாசியில் வரும் அமாவாசை, மஹாளய
அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முன்னர் வரும் 15
நாட்களை மஹாளய பட்சம் என்று சொல்வார்கள்.பிற மாதங்களில் வரும் அமாவாசை
நாட்களில் முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக
அமையாதவர்களும் கூட இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில்
முன்னோர் வழிபாடு செய்ய, பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி புண்ணியம்
அடைவர். ]பரமக்குடியில் இருந்து நயினார்கோயில் செல்லும் பாதையில் 3
கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்து உள்ளது.இத்தல பைரவர் நாய்
வாகனம் இல்லாமல் எமதர்மனின் ஆயுதமான தண்டத்தை கையில் ஏந்தி
உள்ளார்.இவருக்கு சிகப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பு.கி.பி.1220
ல் பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட ஆலயம்
இது.வரசித்தி விநாயகர்,அரசமர நாகர்,ராஜ கணபதி,வள்ளி தெய்வானை உடனுறை
முருகப்பெருமான்,நடராஜர் சன்னதிகளும் சிறப்பு மிக்கவை.பித்ருக்களின்
பரிபூரண ஆசி நமக்கும் ,நம் சந்ததிகளுக்கும் கிட்ட இத்தலம் வந்து அமாவாசை
நன்னாளில் மோட்ச தீபம் ஏற்றுவோம்.வறுமை,தரித்திரம்,வரவு இருக்கும் ஆனால்
செலவு செல்லும் வழி தெரியாத வண்ணம் சேமிப்பு இல்லாமை,சேமிக்க இயலாமை
,உடல் நோய்கள்,விபத்து,காரிய தடைகள்,குழந்தைகள் உடல்
குறைபாடுகள்,குழந்தைகள் கெட்ட வழியில் செல்லுதல் முதலிய அத்தனைக்கும் ஒரே
காரணம் தான்.ஆம்!''பித்ரு வழிபாடு''செய்யாமை..உண்மை இப்படி இருக்க,''ஐயோ
இந்த உலகத்தில் வாழ முடியவில்லையே,பிரச்சனைமேல் பிரச்சனை வருகிறது,கடன்
தொல்லை,குழந்தைகள் சரி இல்லையே,குழந்தைகள் மன வளர்ச்சி சரி இல்லையே,மண
வாழ்க்கை மனம்[மணம்] இல்லையே''என்றெல்லாம் புலம்பி தவிப்பவர்கள் அமாவாசை
நாட்களில் இத்தலம் வந்து நம் முன்னோர்களை நினைத்து மோட்ச தீபம் ஏற்றி
வழிபட பித்ருக்கள் மகிழ்வர்,நம் வாழ்வு சிறக்கும்.வாழ்வின் சொல்லொணா
துயரங்கள் அகலும்..குடும்பம் வாழையடி வாழையாய் விருத்தி அடையும்.ஆம்!வாழ
நினைத்தால் வாழலாம்..பித்ரு வழிபாடு முறைப்படி செய்து வந்தால்...வழியாய்
இல்லை பூமியில்?...பூமியில் வழி இருக்கிறது...அதுவே அமாவாசை நாட்களில்
பித்ருக்களுக்கு ஆராதனை செய்து மோட்ச தீபம் ஏற்றுவது....
நன்றி:- சிவா,வாட்ஸ் அப்

ஒரு குட்டிக் கதை.ஆனால் ரொம்பப் பெரிய விஷயம்....

.................................!!!

அது ஒரு சின்ன கிராமம்.

அந்த கிராமத்திலே ஒரு கிருஷ்ணன் கோவில்.
அந்த கோவிலில் திருவிழா.

அந்த கிராமத்து மக்கள் எல்லாம் அங்கே கூடி இருந்தாங்க. ஒரு கதை சொல்லற பாகவதர் கிருஷ்ணனின் அருமை பெருமையெல்லாம் கதையா சொல்லி கிட்டு இருந்தார்.

இந்த சமயம் பார்த்து ஒரு திருடன் ஊருக்குள்ள திருட வந்தான். இந்த ஊர்ல உள்ள அத்தனை பேரும், கோவில்ல இருக்காங்க. நமக்கு நல்ல வேட்டைதான். வீட்டுக்கு வீடு புகுந்து கண்ணுல அகப்பட்டதை சுருட்ட வேண்டியதுதான் அப்படின்னு திட்டம் போட்டு வீடு வீடா புகுந்தான்.

அவன் கெட்ட நேரம் ஒரு வீட்டுல கூட, உருப்படியா ஒன்னும் இல்லை.

என்னடா இது.......... இந்த ஊர்ல எல்லா பயலும் பிச்சைகாரனா இருப்பான் போலிருக்கே. அப்படின்னு யோசிச்சு கிட்டே கோவில் பக்கம் வந்தான்.

அங்கே யாராவது ஒரு ஏமாளி பய சிக்காமலா போய்டுவான் என்பது அவன் எண்ணம்.

பாகவதர் சுவாரஸ்யமா கிருஷ்ணன் கதையை சொல்லி கிட்டு இருந்தார்.

குழல் ஊதும் கிருஷ்ணன் இருக்கானே.... கொள்ளை அழகு. அவன் கழுத்துல தங்க மாலை போட்டு இருப்பான். இடுப்புல பட்டையா ஒட்டியாணம் மாதிரி வைரம் பதிச்ச பெல்ட் போட்டு இருப்பான்.
காதுல வைர கடுக்கன். கையில தங்க காப்பு. கால்ல முத்து பதிச்ச தண்டை. அட அட அட .... அப்படியே கண்ணனை பார்க்க கண் கோடி வேண்டும்.
இப்படி... கண்ணன் அழகை வர்ணிச்சார் பாகவதர்.

இதை கேட்டான் திருடன். அவனுக்கு கண்ணன் யாருன்னு எல்லாம் தெரியாது. அவனுக்கு தெரிஞ்சது எல்லாம் திருட்டு வேலை மட்டும்தான்.

அடடா... அந்த பாகவதர் யாரோ ஒரு பணக்கார வீட்டு பையனை பற்றி சொல்றார். அவன் யார் வீட்டு பையன்னு கேட்டு, நம் கை வரிசையை கட்ட வேண்டியதுதான். அப்படின்னு கதை முடியுற வரை காத்திருந்தான்.

கதை முடிஞ்சுது.. ஊர் மக்கள் எல்லாம் போன பிறகு, மெல்ல பாகவதர் பக்கம் வந்தான் திருடன்.
ரொம்ப நேரமா ... ஒரு பையனை பற்றி சொன்னிங்களே அவன் யார். எங்கே இருப்பான். உடனே சொல்லு. இல்லை உன்னை இந்த கத்தியாலேயே குத்தி கொன்னுடுவேன் அப்படின்னு மிரட்டினான்.

பாகவதருக்கு கை கால் எல்லாம் வெட வெடன்னு ஆரம்பிசுடிச்சு. கடவுளே இது என்ன சோதனை. நான் அந்த மாய கண்ணனை பற்றி அல்லவா கதை சொன்னேன். இந்த முட்டாள் திருடன் அதை உண்மைன்னு நம்பி வந்து கேட்கிறானே.
அப்படின்னு யோசித்தவர்...

அவனிடம் தப்பிக்க.... அதோ தெரியுதே சோலை, அந்த சோலை பக்கம் தான் அந்த கண்ணன் விளையாட வருவான். போய் பிடிச்சுகோன்னு சொல்லி அப்போதைக்கு தப்பிச்சுட்டார்.

திருடனை பொறுத்தவரை பாகவதர் சொன்னது உண்மைன்னு நம்பினான். கண்ணன் வருவான் அப்படின்னு சோலைல போய் ஒளிஞ்சு இருந்தான்.
அவன் நினைவு எல்லாம்... கண்ணன் எப்போ வருவான்... கண்ணன் எப்போ வருவான் என்பதாகவே இருந்தது.

உண்மையா பாகவதர் சொன்ன மாதிரி கண்ணன் வந்தான். பாகவதர் சொன்ன மாதிரி நகை எல்லாம் போட்டு இருக்கானான்னு திருடன் பார்த்தான்.
உண்மைதான்... அவர் சொன்ன அத்தனை நகையும் கண்ணன் போட்டு இருந்தான்.

மெல்ல சின்ன கண்ணன் பக்கம் போய்... அடேய் தம்பி... உன் நகை எல்லாம் அழகா இருக்கு. அதை எனக்கு தருவியான்னு கேட்டான். கண்ணன் உடனே எல்லாத்தையும் கழட்டி கொடுத்துட்டான்.
நல்ல பையன்னு சொல்லிட்டு திருடன் நகையை எல்லாம் ஒரு மூட்டையா கட்டி எடுத்து கிட்டு பாகவதரை தேடி வந்தான்.

தன் வீட்டு வாசலில் இருந்த பாகவதர் தூரத்தில் வரும் திருடனை பார்த்துட்டார்.

அவருக்கு மறுபடியும் கை கால் எல்லாம் ஆட அரம்பிசுடிச்சு. திருடன் போய் சோலைல பார்த்திருப்பான். கண்ணன் வந்திருக்க மாட்டான். அந்த கோபத்தோட வருவான். இவன் கிட்டே இருந்து எப்படி தப்பிக்கிறது... அவனும் நம்மளை பார்த்துட்டான் .. அப்படின்னு யோசிக்கும் போது, திருடன் பக்கத்துல வந்து ரொம்ப நன்றி... ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல வேட்டைன்னு சொன்னான்.

பாகவதருக்கு பயம் போயிடிச்சு. என்னப்பா சொல்றேன்னார்.

உண்மைதான்... நீங்க சொன்ன மாதிரி சின்ன கண்ணன் வந்தான். என்ன அழகு. என்ன சிரிப்பு, அவனை அப்படியே பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.
நான் கேட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம அப்படியே கழட்டி கொடுத்துட்டான். இதோ அந்த நகை எல்லாம் இருக்கு. உனக்கு கொஞ்சம் பங்கு தரவான்னு கேட்டான்.

பாகவதரால நம்பவே முடியலை. என்ன சொல்றேன்னார். அவனை பார்த்தியான்னு கேட்டார்.

ஆமாம் சாமி. உங்களுக்கு சந்தேகம் இருந்தா என் கூட வாங்க ... அந்த சோலைலதான் இன்னும் விளையாடி கிட்டு இருக்கான். வாங்க கட்டுறேன்னு சொன்னான்.
நம்பவே முடியாம பாகவதர் அவன் கூட போனார். சோலை கிட்டே வந்ததும் அதோ.... பாருங்க... சின்ன கண்ணன்... நீல வண்ணன் விளையாடிகிட்டு இருக்கான் பாருங்கன்னு சொன்னான்.

பாகவதர் கண்ணுக்கு எதுவுமே தெரியலை. சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டது.

இது என்ன சோதனை... என் கண்ணுக்கு தெரியலை... கேவலம் இந்த திருடன் கண்ணுக்கு தெரியுறியா கண்ணானு பாகவதர் அழவே ஆரம்பிச்சுட்டார்.

அப்போ .. அந்த திருடன் கையை பிடிங்கோனு ஒரு குரல் கேட்டது. உடனே அவன் கையை பிடிச்சார். நீல வண்ண கண்ணன் அவர் கண்ணுக்கு தெரிஞ்சார்.

கண்ணா... இது தர்மமா... என் நினைவு தெரிந்த நாள் முதல் உன் கதையை சொல்றேன். அதை தவிர வேற எதுவுமே எனக்கு தெரியாது. இது வரை எனக்கு தரிசனம் தராத நீ.... இந்த திருடன் கண்ணுக்கு தெரிகிறாய்.

அவன் கையை பிடித்த பிறகுதான் நீயே எனக்கு தெரிந்தாய்.

பாகவதரே.... உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால்... இத்தனை ஆண்டு காலம் என் கதையை சொன்னாலும், நான் வருவேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்ததே இல்லை.

நான் இருக்கேனா இல்லையா என்பதே உங்களுக்கு சந்தேகம்தான்.

ஆனால் இந்த திருடன் அப்படி இல்லை. நான் இருக்கேன் என்று நம்பினான். நான் வருவேன் என்று நம்பினான். அதனால் வந்தேன்.

கடவுள் பத்தி என்பதே நம்பிக்கைதான் என்று சொல்லி விட்டு கண்ணன் மறைந்து விட்டான்.

நன்றி:- சிவா,வாட்ஸ் அப்

உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்கள் நீங்க உடல் பலம்  உடல் காய கற்பமாக மாற

நீர் முள்ளி    . ............... பத்து கிராம்
வெள்ளரி விதை ........ . ............... பத்து கிராம்
மணத் தக்காளி வற்றல் ........ . ............... பத்து கிராம்
சோம்பு ........... . ............... பத்து கிராம்
சரக் கொன்றைப் புளி ......... . ............... பத்து கிராம்
திரிபலா சூரணம்   .  முப்பது கிராம்
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து தூளாக்கி எடுத்து நூறு மில்லி கொதிக்கும் நீரில் பத்து கிராம் அரைத்து வைத்துள்ள தூளைப்  போட்டு நன்கு கொதிக்க வைத்து முப்பது மில்லி தீநீராக்கி இறக்கி வடிகட்டி காலை உணவுக்குப் பின் ஒரு மனி நேரம் கழித்துக் குடிக்க வேண்டும்
வாரம் இருமுறை குடித்தால் போதும் நோய் இல்லாதவர்களும் குடிப்பது நல்லது

Pon.Thangaraj

கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?*


சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.
அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரணம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.
இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.
தொழிலாளர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதிடென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுப்பது.
இதை கற்றுத்தறவந்தவர், இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.
அவர் சொன்னதாவது:
முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.
உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…ஆங்கிலத்தில் துவங்கினார்..
_மை ஐஸ் ஆர் ரிலாக்ஸிங்
_மை நோஸ் ஆர் ரிலாக்ஸிங்
_மை மௌத் இஸ் ரெலாக்ஸிங்
_மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸிங்
என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.
இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.
பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருத்தையும் கேட்டார்.
என் முறை வந்தது. நான் சொன்னேன்…”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!” என்றேன்.
ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்” என்று கேட்டார்.
நான் சொன்னேன் “சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.
மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.
நானும் சொல்லத் துவங்கினேன்.
*கந்தர் சஷ்டி கவசம்* சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.
உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.
*கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!*
*விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க!*
*நாசிகளிரண்டும் நல்வேல் காக்க!*
*பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க!*
*கன்னமிரண்டும் கருணைவேல் காக்க!*
*என் இளங்கழுத்தை இனியவேல் காக்க!* .
என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.
இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
இப்படி மூளையின் தனி கவனத்திற்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.
மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.
இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.
கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.
இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?
கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் சரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.
இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான நன்மைகள் உள்ளன.
ஆனால் ஆராயாமலே தற்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.
ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”.
இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.
அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!
*காக்க காக்க கனகவேல் காக்க!*
*நோக்க நோக்க நொடியில் நோக்க!*
*இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்*