ம் !!
முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும்.
(சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும். அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள் செய்வினை பறதோடிவிடும்
. யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.
http://newstig.com/news/general/5567/Repellent-spell-simple-remedy-
செய்வினை போக்கும் யோக நரசிம்மர் !
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சீனிவாச பெருமாள் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இங்கு யோக நரசிம்மர், பால நரசிம்மர், கருடாழ்வார். ஆழ்வார்கள், நவநீதகிருஷ்ணன், ஆகியோருக்கு தனித்தனியே சன்னதிகள் உள்ளன. இங்கு வீற்றிருக்கும் யோக நரசிம்மர் இயந்திரத்தோடு காட்சி தருகிறார்.
வேறு எந்த கோவில்களிலும் இப்படி இயந்திரத்தோடு யோக நரசிம்மர் காட்சி தருவதில்லை. இயந்திரத்தோடு காட்சி தருவதால் செய்வினை போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வணங்கினால் பலன் நிச்சயமாம்.
No comments:
Post a Comment