ரெடிமிக்ஸ் பொடிகள் !!!
'டைம் மேனேஜ் மென்ட்' என்பது, வேலைக்கு செல்பவர் களுக்கு மட்டுமல்ல... இல்லத்தரசிகளுக் கும் அவசியம். சமையல் அறையில் செல விடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு... வீட்டை அழகு படுத்துவது, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, ரிலாக்ஸ் பண்ணுவது போன்றவற்றுக்கு பயன்படுத்த உதவும் வகையில் '30 வகை ரெடி மிக்ஸ்' ரெசிபிகள்.
''ரெடி மிக்ஸ்களை சுத்தமான, ஈரமில்லாத, காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைப்பது முக்கியம். வீட்டிலேயே செய்வதால்... ருசியில் அசத்தலாக இருப்பதுடன், நிறைய நாட்களுக்கு ஸ்டாக் வைத்து பயன்படுத்தலாம்''
பாதாம் மில்க் ரெடி மிக்ஸ்
தேவையானவை: பாதாம் பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், குங்குமப்பூ - 15 இதழ்கள், பாதாம் எசென்ஸ் - 2 துளிகள்.
செய்முறை: பாதாம்பருப்பை சுடு நீரில் ஊற வைத்து தோல் நீக்கி, நிழலில் உலர வைத்து, வெறும் கடாயில் சூடுபட வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். அத்துடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து பொடி செய்யவும். பிறகு, பாதாம் எசென்ஸ் விட்டு நன்கு கலந்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
தேவைப்படும்போது ஒரு கிளாஸ் சூடான பாலில், ஒரு ஸ்பூன் பாதாம் பொடி கலந்து பருகலாம். பாலில் பாதாம் மிக்ஸை தேவையான அளவு கலந்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் கொடுக்கலாம்.
குறிப்பு: பாதாம் பருப்பை தோல் உரிக்காமல், வெறும் கடாயில் சூடுபட வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.
பிடிகொழுக்கட்டை ரெடி மிக்ஸ்
தேவையானவை: பச்சரிசி ரவை - 2 கப், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, இஞ்சித் துண்டுகள் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றலை கிள்ளிப் போடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து, வறுத்தவை அனைத்தையும் பச்சரிசி ரவையில் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து வைத்தால்... பிடிகொழுக்கட்டை ரெடி மிக்ஸ் தயார்.
பிடிகொழுக்கட்டை தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்துக் கொள்ளவும். ஒரு பங்கு ரெடிமிக்ஸுக்கு 2 பங்கு என்ற அளவில் தண்ணீரை எடுத்து கொதிக்கவிடவும். தண்ணீரில் ரெடி மிக்ஸை தூவி கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகள் பிடித்து வைக்கவும் (நீளவாட்டிலும் தயார் செய்யலாம்). அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: இதை குறைந்த நேரத்தில் தயார் செய்துவிடலாம். ஆவியில் வேக வைப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும்.
பச்சடி ரெடி மிக்ஸ்
தேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு - ஒரு கப், கடுகு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சித் துண்டுகள் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஆறியதும் நைஸாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து வறுத்து எடுத்து, ஆறியதும் உளுத்தம்மாவில் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இதுதான் பச்சடி ரெடி மிக்ஸ்.
குறிப்பு: பச்சடி தேவைப்படும்போது ஒரு கப் தயிரில் 2 டீஸ்பூன் அளவு ரெடி மிக்ஸ் பவுடர் சேர்த்துக் கலக்கவும்.
பாயசம் ரெடி மிக்ஸ்
தேவையானவை: சேமியா - ஒரு கப், ரவை - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 10, நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் நெய் விட்டு, சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். ரவை, சேமியாவை வறுத்து, ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்த்து, சர்க்கரையையும் சேர்த்துக் கலந்து, சுத்தமான டப்பாவில் போட்டு வைக்கவும்.
பாயசம் தேவைப்படும்போது இந்த மிக்ஸில் தேவையான அளவு எடுத்து, பால் கலந்து கொதிக்கவிட்டு, பாயசம் தயார் செய்யலாம்.
No comments:
Post a Comment