Saturday, March 19, 2016

முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க இயற்கையான 5 வழிகள் !   


பெண்களின் அழகு பிரச்சனைகளில், முகத்தில் வளரும் முடியும் ஒன்று. இத்தகைய முடிகள், முகத்தை கருமையாகவும், அசிங்கமானதாகவும் வெளிப்படுத்தும். அதிலும் அவர்களுக்கு வாய்க்கு மேல் வளரும் முடிகள் மீசை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் என்பதால், சிலரின் கிண்டல் கேலிகளுக்கு ஆளாகா நேரிடும். இத்தகைய ரோமங்களை போக்குவதற்கு பெண்கள் நிறைய செயற்கையான வழிகளை பின்பற்றி வந்தாலும், அவற்றில் பெரும்பாலான முறைகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுவதில்லை என்பதே உண்மை.

எனவே எப்போதும் தற்காலிக பயன்களைத் தருபவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தாமதமாக பயன்களை வெளிப்படுத்தினாலும் நிரந்தர பயன்களை அளிக்கக்கூடிய இயற்கை பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை பின்பற்ற முயற்சி செய்யுங்கள். இப்போது முகத்தில் வளரும் முடிகளைப் போக்க உதவியாக இருக்கும் சில இயற்கையான முறைகள் பற்றி இங்கு காண்போம்...

சிறிதளவு சர்க்கரையுடன், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் கீழிருந்து மேலாக தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம்.

மஞ்சள் தூளுடன், உப்பு சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் பால் விட்டு கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முகம் பளபளப்புடன் இருப்பதோடு, முகத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து விடும்.

சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும். இந்த கலவையை சுமார் ஒரு 10 நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து, காய்ந்த பின்பு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும். இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு மூன்று முறை செய்வது நல்லது.

சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக குழைத்து இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்களின் வளர்ச்சியும் படிப்படியாக குறையும்.

ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். குறிப்பாக முடி உள்ள இடத்தில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடும்.

ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். குறிப்பாக முடி உள்ள இடத்தில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடும்

No comments:

Post a Comment