மூலம். ஆசனவாய் வழியாய் கனலேறி தூவாரப்பட்டு 9 விதமான மூலத்தையும் பற்பல வியாதிகளையும் பிறப்பிப்பது.
உள்மூலம், பிறமூலம், இரத்தமூலம், சீழ்மூலம், மூலபாண்டு, முளைமூலம், வாதபித்தசிலேத்துமமூலம்என 9வகைப்படும்
மூலம்வரும்காரணம்.
காயத்தில்மூலம்கண்டவிதம்கேளு பாயொத்த தீவனம்பரிந்தே அடக்கிடினும் வாயைமயக்க மலத்தை அடக்கிடினும் ஓயற்ற குண்டலிக்குள்புகும் வாயுவே
உள்மூலக்குணம்:அபானத்துள்தசைபோலவளர்ந்திருக்கும்.மலத்தைஇறுக்கும்.மந்திக்கும்.இரத்தம் மலத்தில் விழும். இடையில் வயிறுவலிக்கும். பலங்கெடும். தேகம் வரளும். பிறமூலக்குணம்:அஸ்தியில்அனல்ஏறிஅபானவழியில்கத்திபோல்சதைவளர்ந்துஉள்ளும்புறமுமாயிருக்கும்.அபானங்கடுக்கும்.தினவெடுக்கும்.உதிரம்விழும்
சீழ்மூலத்தின்குணம்:தேகத்தில்அக்னிஅதிகரித்தால்அடிவயிறுநொந்துபுண்ணாகிச்சீழ்தோன்றிமலத்துடன்சிறுத்திரங்கும்,அபானங்கெடுக்கும்.மயக்கங்காணும்.வாயுஅதிகரிக்கும்.மலங்கழியும்போதுஅபானம்எரிந்துசீதமும்இரத்தமும்விழும்.நாபியைச்சுற்றிவலிக்கும்
இரத்தமூலக்குணம்:தொப்புளைச்சுற்றிவயிறுவலித்துநொந்துஇரத்தம்விழும்.மூலம்வெளியில்தள்ளும்.மலம்சிக்கும்.அடிவயிறுஇரையும.கைப்பையும்புளிப்பையும்மிகவிரும்பும்.அன்னஞ்செல்லாது.உடல்வெளுத்துவற்றும்.அபானங்கடுத்துஎரியும்.வெப்புதோன்றும்
இரத்தமூலப்பாண்டுக்குணம்:பித்தம்உடல்எங்கும்பாய்தலால்தேகம்வெளுத்துஊதும்.இரத்தம்உருண்டுதிரண்டுவயிற்றில்தங்கிபிதிர்போல்மிகவிழும்.தொப்புளைசுற்றிவலிகாணும்.மேல்மூச்சுஇளைப்புகாணும்.அடிவயிறுஇரையும்.மலஞ்சிக்கும்.அன்னஞ்செல்லாது.கைப்பையும்புளிப்பையும்மிகவிரும்பும்
மூலவாயுக்குணம்:மந்திக்கும்,உடல்வெளுக்கும்,வயிறுசதாகாலமும்இரைந்துகொண்டேஇருக்கும்
பவுத்திரம்-மூலத்தில்வாயுகண்டு,மேகநீர்உண்டாகிபுரையோடிகண்விட்டுசீழ்ப்பாச்சல்கண்டுமுளைவிழுதல்
குணம்:போகத்தினால்கனல்மிகுந்துமேகம்உண்டாகிபீஜத்திற்க்கும்அபானத்திற்க்கும்இடையில்கொடியின்அடிநரம்பிலாவது,அதன்வலம்இடப்புறத்திலாவதுஅண்டத்திலாவதுஅபானவாயுவிலாவதுநமைச்சல்எடுத்துவீங்கிநொந்துகொப்புளித்துசீழும்சலமும்வடியும்.
புரையோடிநரம்புஅழுகிகண்விழுந்துஅதனவழியேநீரும் மலமும்இறங்கும்அல்லதுஅபானவாயில்கழற்காய்போலும்,குமிழ்முளைபோலும்,கல்போல்புடைத்துப்பழுத்துசீழ்வடியும்,புரையோடும்,வேதனைகாணும்.மலசலம்சிறுக்கும்அபானம்கடுத்துஎரியும்.கைகால்காந்தும்,கடுத்துஉளையும்,நித்திரைசற்றும்வரா.உடல்மெலியும்,அன்னஞ்செல்லாதுஆயாசம்களைப்புஉண்டாகும்
1. திரிபலாச்சூரணமாத்திரை 3,தினம்3வேளை,வெந்நீருடன் கொள்ள மூலம் கட்டுப்படும்
2. 2.பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2,இம்பூரல்மாத்திரை2 தினம்3வேளை சாப்பிட இரத்தமூலம் குணமாகும்
3. மூலக்குடோரித்தைலம் 1015மிலி,50மிலி வெதுவெதுப்பான பாலில் இரவு கொள்ள மூலம் கட்டுப்படும்
4. திருநீற்றுப்பச்சை விதையை ஊறவைத்து,நீரைப்பருகிவர இரத்தமூலம் குணம்கும்
5. அருகம்புல் கைப்பிடியரைத்து,200மிலி காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து பருகிவர மூலம் ,இரத்தமூலம் கட்டுப்படும்
6. 1கிராம் குங்கிலியத்தை தூள்செய்து,200மிலி பாலில் கலந்து பருக இருமல்,மார்புச்சளி, இரத்தமூலம் கட்டுப்படும்
7. தான்றித்தோடு கருகாமல், லேசாக வறுத்து,பொடித்து 1கிராம்,சிறிது சர்க்கரை சேர்த்து,200மிலி மோரில் தினமிருவேளை பருகிவர இரத்தமூலம் குணமாகும்
8. பிரண்டைதுவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவர.இரத்தமூலம் குணமாகும்.வயிற்றுப்பூச்சி கட்டுப்படுத்தும்.
9. மாதுளை பூச்சாறு 15மிலி, சிறிது கற்கண்டு சேர்த்து காலையில் பருகிவர இரத்தமூலம் கட்டுப்படும்
10. .கொன்றைப்பூ 2 0 0கிராம்,மையாக அரைத்து மோரில்கலநது சாப்பிட சர்கித்தைலம் 10-15மிலி, 50மிலி வெதுவெதுப்பான பாலில் இரவு கொள்ள மூலம் கட்கரைவியாதி தீரும்்டுப்படும்
11. துத்திஇலையை வி.எண்ணையில் வதக்கி கட்ட மூலம்,பவுத்திரம்,ஆசனவாய் கடுபபு குணமாகும்
12. .துத்திஇலையை பருப்பு சேர்த்து சமையல்செய்து சாப்பிட்டுவர மூலம் குணம் ஆகும்.
13. 10கிராம் நாயுருவி இலையையரைத்து,10மிலி ந.எண்ணையில் கலந்து,தினம்2வேளை சாப்பிட இரத்தமூலம் குணமாகும்
14. தேற்றான்கொட்டைசூரணம் 1கிராம்,பாலில் கலந்து,தினம்2வேளை பருகிவர neerkattu, neer erichal, vellai, moolam theerum.
15. சின்னவெங்காயத்தை சன்னமாயரிந்து பாலில் காய்ச்அழுத்தம்,நீரிழிவு குணமாகும்சி சீனிசர்க்கரை கலந்து சாப்பிட்டுவர இரத்தமூலம் கட்டுப்படும்
16. புளியங்கொட்டையை 3நாள் ஊறவைத்து,4ம்நாள் மேல்தோல் நீக்கி,பொடித்து,2மடங்கு சர்க்கரை சேர்த்து காலை சாப்பிட்டுவர மூலக்கடுப்பு தீரும்
17. சேனைக்கிழங்கு,வெங்காயம் சேர்த்து வேகவைத்து,பசுநெய் கலந்து சாப்பிட்டுவர மூலம் குணமாகும்
18. இம்பூரல்மாத்திரை2, தினம்3வேளை சாப்பிட்டுவர மூலம் கட்டுப்படும்
19. சின்னவெங்காயத்தை சன்னமாயரிந்து,வதக்கி,சீரகம்,கற்கண்டு தூள்கலந்து,கடுகு தாளித்து, நெய்யுடன்,சோற்றில் பிசைந்து சாப்பிட்டுவர மூலம் குணமாகும்
20. துத்திஇலை,பச்சரிசிமாவு தேவைக்கேறப எடுத்து களிபோல் கிளறிக் கட்ட மூலமுளை,மூலக்கடுப்பு தீரும்
21. குங்கிலிய வெண்ணையை மேலேபூச மூல எரிச்சல் தீரும்,
22. கால்படி பசும்பாலில் 3 எலுமிச்சம்பழச்சாறுவிட்டு சிறுகுச்சியால்கிளற, தெளியும் நீரைப்பருக ஆசனகடுப்பு நீங்கும்
23. வேப்பம்பட்டைசூரணம்10கிராம்,பாலில் சாப்பிட்டுவர மூலம்,மலக்கட்டு,குன்மவலி நீங்கும்
24. அத்திப்பிஞ்சை வற்றலாகவோ,காயாகவோ சமைத்துச்சாப்பிட்டுவர மூலநோய்கள் குணமாகும்
25. அந்தரத்தாமரைஇலையை நீரிலிட்டுக்கொதிக்கவைத்து,10நிமிடம் ஆசனவாயில் ஆவிபிடிக்க மூலமுளை அகலும்
26. அந்தரத்தாமரைஇலைச்சாறு25மிலி,தேனுடன் தினம்2வேளை பருக மார்பினுள் கிருமிக்கூடுகள்,நீர்ச்சுருக்கு,மூலம்,சீதபேதி,இருமல் தீரும்
27. அந்தரத்தாமரைஇலைச்சாறு500மிலி,ந.எணணை1லி,சிறுதீயில் காய்ச்சி,கிச்சிலிகிழங்கு சந்தனத்தூள்,வெட்டிவேர்,சாம்பிராணி,கஸ்தூரிமஞ்சள்,வகைக்கு10கிராம்,பொடித்துப்போட்டு, வாரமொருமுறை தலைமுழுகிவர உட்சூடு,கண்ணெரிச்சல்,மூலநோய் தீரும்
28. அந்ணரதாமரைஇலையையரைத்துக்கட்ட கரப்பான்,தொழுநோய்புண், வெளிமூலம், ஆசனக்குத்தல் தீரும்
29. ஆவாரங்கொழுந்தை,வி.எணணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க மூலமுளை கருகி,கடுப்பு,ஊறல் தணியும்
30. வேப்பம்பருப்பை எலுமிச்சையளவரைத்துப்பில்லை தட்டி,3இரவுக்கட்ட புழுக்கள் செத்துவிழும்.முளை கரையும்
31. பாகல்இலையை வி.எண்ணையில் வதக்கி 40நாள் கட்டிவர வெளிமூலம் தீரும்
32. சிறுகருணைகிழங்கை தோல்நீக்கியரிந்து,3முறை தயிரிலூறவைத்துலர்த்தியது 200கிராம்,சுக்கு40கிராம்,இந்துப்பு40கிராம்,தனித்தனியே பொடித்து எலுமிச்சைசாற்றிலரைத்து, பனங்கற்கண்டுப்பொடி சேர்த்துப்பிசைந்து,நெல்லிக்காயளவு, காலைமாலை,6மாதம் சாப்பிட்டுவர நவமூலமும் தீரும்
33. பொடுதலைஇலையை,உ.பருப்புடன் நெய்யில் வதக்கித்துவையல் செய்து பகல் உணவுடன் கொள்ள இரத்தமூலம்,உள்மூலம்,பவுத்திரம் தீரும்
34. குப்பைமேனி செடியை வேகவைத்த தண்ணீரை குடித்துவர மூலம்,பவுத்திரம் குணமாகும்
35. கருப்புஎள், கடுகு, திப்பிலி, சுக்கு வகைக்கு 40கிராம், வெதுப்பி, பொடித்து, திரிகடி, காலை மாலை வெந்நீரில் 5நாள் கொடுக்க சீழ்மூலம் தீரும்.
36. திரிகடுகு, கோஷ்டம் சமன்பொடித்து, சமஅளவு வெள்ளைசர்க்கரை, முந்திரிப்பழம் சேர்த்து. பசுநெய்யில் லேகியம்செய்து, கொட்டைப்பாக்களவு 2வேளை, 5நாள் கொடுக்க இரத்த மூலபாண்டு குணமாகும்.
37. பிரண்டைக்கொழுந்தையரைத்து,ந்எண்ணயில்குழப்பிஉண்ணஇரத்தமூலபாண்டுதீரும்.
38. எருக்கம்பட்டை,வெள்ளுள்ளிவகைக்கு20கிராம்மைபோலரைத்து,பாக்களவு,2வேளை5நாள்,எருமைதயிரில்கொள்ளமுளைவேர்அற்றுவிழும்.
39. புளியங்கொட்டையின்மேல்தோலைபசும்பாலில்,எலுமிச்சையளவுஅரைத்து5நாள்சாப்பிடமூலமுளைநீங்கும்.
40. பிரண்டைசூரணத்துடன்சமன்சர்க்கரைகலந்து,திரிகடி,ஆவின்நெய்யில்மண்டலம்கொள்ளநவமூலமும். தீரும்.
41. மாவிலங்கு இலையை அரைத்து பாக்களவு, எருமைதயிரில் கொள்ள நவமூலமும் தீரும்.
42. வெள்ளுள்ளி 80 கிராம்அரைத்து, 6 உருண்டைசெய்து, வேளைக்கு 1 உருண்டை புளியந்தனலில் போட்டு புகைபிடிக்க முளை கரையும்
43. திப்பிலி 10 கிராம் அரைத்து, 100 கிராம் கோதுமைமாவில் கலந்து, திருகுகள்ளியை நறுக்கி 2 படி தண்ணீரில்போட்டு வேடுகட்டி, அதில் மாவைபிட்டவியல் செய்து நல்லெண்ணையும் வெல்லமும் கலந்து 7 நாள் சாப்பிட உள்மூலம் குணமாகும்.
44. ஈருள்ளி 200 கிராம் அரிந்து பன்றி நெய்யில் பொரித்து 5 நாள்கொடுக்க சீழ்மூலம் குணமாகும்
45. எருமைத்தயிரை துணியில் முடிந்து தொங்கவிட்டு நீர்வடிந்தபின் எடுத்து, வெள்ளைப்பூண்டு பாக்களவரைத்து அதில்கலந்து கொள்ள மூலவாயுநீங்கும்.
46. குப்பைமேனி, திப்பிலி சமன்பொடித்து திரிகடி, ஆவினெய்யில்மண்டலம் கொள்ள பவுத்திரம் நீங்கும்.
47. எருமைத்தயிரைதுணியில்முடிந்துதொங்கவிட்டுநீர்வடிந்தபின்எடுத்து,வெள்ளைப்பூண்டுபாக்களவரைத்துஅதில்கலந்துகொள்ளமூலவாயுநீங்கும்.குப்பைமேனி,திப்பிலிசமன்பொடித்துதிரிகடி,ஆவினெய்யில்மண்டலம்கொள்ளபவுத்திரம் நீங்கும்.
No comments:
Post a Comment