தியானத்தை விடு.. ( 24-03-2016 )
ஞானத்தைப் பெறு.. ( சுருக்கம் )
அத் ( 14 )..அனுபவங்களின் ஆயுள்..
-------------------------------------------------------
நம்முடைய பிரச்னைகள் இருக்கும் இடம் எது..?
மனோநாசம் செயல்படும் இடத்தில் பிரச்னைகள் உள்ளனவா..?
அல்லது..
மனோலயம் செயல்படும் இடத்தில் பிரச்னைகள் உள்ளனவா..?
மனோலயம் மட்டுமே .. இன்பத்தையும்.. துன்பத்தையும் கொண்டு வருகிறது..
மனோலயம் செயல்படும் போது..
ஒன்று துன்பம் வெளிப்படலாம்..
அல்லது இன்பம் வெளிப்படலாம்..
மனோலயம் தான் பிரச்னைகளைக் கொண்டு வருகிறது..
நமது மனம் ஏதாவது ஒரு அனுபவத்தில் பொருந்தி இருப்பதை மனோலயம் எனக் கூறுகிறோம்..
அப்படி.. ஏற்பட்ட மனோலயம்..
கலைந்து போவதற்கு..
கால அவகாசம் ஏற்படும்போது..
அங்கு ஒரு வித உறைநிலையும் ஏற்பட்டு விடுகிறது..
மனோநாசம் என்பது.. எந்த லயத்திலும் நிலை கொள்ளாமல்.. திரவ நிலையில் இயங்கும் மனதைக் குறிக்கிறது..
மனோலயத்தில்தான் இன்பமும்.. துன்பமும் ஏற்படுகிறது..
நமக்கு ஏற்படும் துன்ப அனுபவம் நம்மை விட்டு.. போய்விட வேண்டும் என்று நாம் எண்ணும்போது...
நமக்கு ஏற்பட்ட துன்ப அனுபவத்தை எதிா்த்து நாமே போராடுகிறோம்..
நமக்கு ஏற்பட்ட இன்ப அனுபவம் நீடிக்க வேண்டும் என்று நினைக்கும் போதும்..
அந்த இன்பத்தை சுவைப்பதற்காக..
அப்போதும் ஒரு போராட்டத்தில் ஈடுபடுகிறோம்..
இன்ப.. துன்ப.. அனுபவம் எப்படி மனோலயத்தினால் ஏற்பட்ட நிகழ்வுகளோ..
அப்படித்தான்.. அது சம்மந்தமான போராட்டங்களும்..
மனோலயத்தினால் ஏற்பட்ட விளைவுகளே..
பிரச்னைகள் ஏற்பட்டது மனோலயத்தினால்தான்..
இப்போது..
பிரச்னைகளை தீா்க்க வேண்டும் என முயற்சி செய்வதும் மனோலயமே..
மனோலயத்தின் எல்லா முயற்சிகளும் மனோலயத்தையே உறுதி செய்கின்றன..
அப்படியானால்..
நமது பிரச்னைகளுக்கான தீா்வுதான் என்ன..?
தீா்வு வேண்டும் என்ற கோாிக்கையே..
நம்முடைய பிரச்னையை மேலும் பலமுடையதாகச் செய்துவிடுகிறது..
இராமாயணத்தில்..
வாலியை எதிா்த்துப் போாிடுபவாின் பலத்தில் பாதி வாலிக்குச் செல்லும்..
இப்போது.. வாலியின் பலம் + எதிராளியின் பலம் என .. வாலியின் பலம் எதிராளியின் பலத்தைவிடக் கூடுதலாகி விடும்..
இந்நிலையில்.. வாலியை ஜெயிப்பது எவ்வாறு..?
இந்நிலையில்.. மனோலயத்தினால் ஏற்பட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதுதான் எவ்வாறு..?
நமது பிரச்னைகளுக்கெல்லாம் மூல காரணம் இன்ப நாட்டமே..
இன்பத்தை நாடும் நிலையில்தான் முரண்பாடுகளும் போராட்டங்களும் வருகிறது..
இன்ப நாடாத நிலையில் நாம் இருப்போமாயின்.. முரண்பாடுகளும்.. போராட்டங்களும் இல்லாமல் போய்விடும்..
ஆகவே.. இன்ப நாட்டம் இல்லாத நிலையில் நாம் செயல்படுவதுதான் நல்லது..
ஆகவே.. இன்ப நாட்டமில்லாத நிலை வேண்டும்..
இப்படி.. இன்ப நாட்டமில்லாத நிலை வேண்டும் என்ற கோாிக்கையையும்..
இன்பத்தை நாடும்...
மனநிலைதான் கோருகிறது..
இப்படி.. எதையோ வேண்டும் என்று கேட்டு.. தன்னைத்தானே நமது மனது பிரச்னைக்குள் ஆழ்த்தி விடுகிறது..
இப்போது நாம்..
நமது பிரச்னைகளிலிருந்து விடுபட வழிகள்தாம் ஏதாவது உள்ளனவா..?
நாம் என்னதான் செய்வது..?
( தொடரும் )
No comments:
Post a Comment