Saturday, March 19, 2016

உணவே மருந்து  !!

!

1) பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
2) சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3) பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
4) சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
5) வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
6) பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.
7) சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
8) பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது
9) தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்

1) செம்பருத்தி பூவை தினமும் தண்ணீர் , தேன் கலந்து தினமும் கலையில் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்
2) துளசி இலை, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசினால் தேமல் எரிச்சல் குணமாகும்
3) கஸ்தூரி மஞ்சளை வெற்றிலையில் வைத்து மடித்து நன்கு மென்று சாப்பிட வயிற்று வலி குணமாகும்
4) வெங்காயத்தையும்,கேரட்டையும் அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொண்டால் நெஞ்சு வலி வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்
5) முட்டை வெள்ளை கருவோடு தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் வயிற்று வலி நீங்கும்
6) கடலை மாவு,எலுமிச்சை சாறு, பால் மூன்றையும் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் மிருதுவாக மாறும்
7) கோதுமை கஞ்சி, கீரை,பச்சை காய்கறிகள் இவற்றை தினமும் சாப்பிட்டு வர சருமம் நிறம் குறையாமல் இருக்கும்
8) கடுக்காய் பொடியைப் பற்பொடி உடன் கலந்து பல் தேய்த்து வர ஈறுவலி, வீக்கம் , இரத்தம் கசிதல் ஆகியவை தீரும்
9) வேப்பம் பூ பொடி, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவல் கோட்டை போடி, நான்கும் சேர்த்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குறையும்
10) வெந்தையக்கீரையை அரைத்து தினமும் முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்தி பின் முகம் கழுவினால் முகப்பரு குறையும்

இரத்த குழாய் அடைப்பு நீங்க

தேனில் ஊறிய பேரிச்சம் பழங்களை சாப்பிட்டால் இரத்த குழாய் அடைப்பு நீங்கும் - இயற்கை மருத்துவம்
இயற்கையாக கிடைக்க‍க் கூடிய இந்த பேரிச்சம் பழங்களை உட்கொள்ளும் நமக்கு எண்ணிலங்டங்கா பயன்களையும் பலன்களை கொடுக்கும். நல்ல தரமான கொட்டை நீக்கிய பேரிச்சம் பழங்களை எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுவிட்டு, சுத்த‍மான அசல் தேனை, அப்பழங்கள் மூழ்கும்படி, ஊற்றி மூன்று நாட்கள் மூடி விடவேண்டும்.
மூன்று நாட்கள் வரை நன்கு ஊறியதும், தினந்தோறும் காலையில் மூன்று பழங்களும், இரவில் மூன்று பழங்களும் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாய் அடைப்புகள் கட்டாயம் நீங்கி விடும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சாப்பிட்டு வரலாம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைசதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும் மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வரவேண்டும்.

இதுதவிர  அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும். உடல் எடையும் குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.

தகவல்,நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்

No comments:

Post a Comment