Saturday, March 12, 2016

#ஓம் #என்னும் #பிரவணம்

#ஓம் #என்னும் #பிரவணம்
--------------------------

[ஓங்காரம் பற்றி #சித்தர்கள் #சொன்ன #உண்மை #ரகசியங்கள் .]

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு
மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த
ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத்
திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை
வெளியிடும்போது
‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது.
அவ்வொலியின் கடைசியில் வாயை
மூடும்போது
‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.

இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரவணம்
என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு
முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது
என்றும் , பிரணவத்திலிருந்து விந்துவும்,
விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும்
உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத்
தோன்றின எனத் தத்துவ நூல்கள்
கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்
இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின்
இணைப்பே ‘ஓம்’.
மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை
வடிவான ஓங்கார வடிவத்துடன்
அமைந்திருக்கிறது.
மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரவணன்
"அ" என்பது எட்டும்
"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ்
வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து
உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித
வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண்
அளவுடையது.

மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள்
மூச்சு வெளி மூச்சு ]
" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு
வெளி மூச்சு.
" ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால்
எற்படும் இன்பத்தை அது குறிக்கும்
அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96
தத்துவத்துடன் விளங்கும்.

அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும்
பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்: அ
என்பது முதல்வனான சிவனையும்
உ என்பது உமையவள் எனப்படும்
சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த
சிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி
வடிவில் " ஓ " என பிள்ளையார்
சுழியாகவும் , "உ" எனவும் உள்ளது.

வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ,
ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம்,
பிரணவம் என்று ஆன்றோர்களும்,
சான்றோர்களும் சொல்கிறார்கள்.
இதனை திருமூலர், திருமந்திரத்தில் :
" ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே "
முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும்
பொழுது ஒரே சொல்லாகவும்,
இரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில்
பிண்டம் தரிக்கும் பொழுதும்
அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம்
என்றே தோன்றும் ,
மூன்றாம் வரிக்கு ஒரே உச்சரிப்பாயினும்,
மூன்றெழுத்தையும் அதன்
விளக்கத்தையும் , பேதங்கள் பலவாறாகவும் ,
நான்காவது வரிக்கு இதை
சதா உச்சரித்து தியானிப்பதால் முக்தி -
உயர்ந்த சித்தியும் கிட்டும்
என்பதை பாடல் நமக்கு உணர்த்துகிறது.

முதல் எழுத்து:
"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து
அறியலாம்.
சட்டை முனியும் தனதுசூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும்
ஓங்கார மந்திரத்திற்க்கும்
முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது.
அத்துடன் எழுத்துக்களைக்
குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் ,
மலையாளம் , சமஸ்கிருதம்
முதலிய மொழியிலும் இதுவே முதல்
எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,
அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான
சுத்திரத்தில் ,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
- ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
"அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு
அறியலாம்.

உருவமும்- உடலும்.
உடம்பை உருவைக் குறிக்கும் போது
ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக்
காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய்
உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது
சூத்திரம் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்
"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய்
மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை"
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.
மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு ,
அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய்
பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும்
இயற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய
சிந்தாமணி 800 - ல்
"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "
என்று கூறியுள்ளதன் மூலம் உருவம்
உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து
ஒலிகட்கும் முதலாக விருந்து
அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும்
ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி
நிற்கும். இதை விளக்கும்படி திருமூலர்,
" ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று
கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம் , அ , உ , ம் எனமித்து
ஒலி எழுப்புவது.

அகாவொலி முதற்பிரிந்து படைத்தற்
தொழிலையும், உகாரவொலி பின்
தோன்றிக் காத்தல் தொழிலையும் ,
மகாரவொலி முடிவாதலின் அழித்தற்
தொழிலையும் ஆக முத்தொழிலையும்
ஒருங்கே
இணைத்து அடக்கி நிற்கும்.

"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக
இருந்து ஏகாந்த தியானம்
செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின்
தொழில்கள் இயக்கம்
அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக்
கதவு அடைபடும். தன்னையும்,
உலகையும் மறந்து நிற்க , சாபாசங்கள் மறந்து
மனம் நிலைப்படும்.
குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெ
ய்ஞான விசாரணை விளைந்து,
அதனால் வாழ்க்கையும் வேதனைகளும்
இல்லாத ஒன்றாகிவிடும்.
இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்
"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள்
கைகூடும். அதனால்
ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு
இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும்.

இதன் மூலம் ஒளியை தரிசித்து
மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில்
ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு
உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும்
தன்மை நீங்களும் காணலாம்.
பிரணவ மந்திரத்தின் மகிமைகள் ..
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள்
உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே!

ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது
இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம்
என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே,
சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா
என்றெல்லாம் அவரவர் இஷ்ட தெய்வத்தை
அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா,
ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும்
போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை
உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள்
தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம்.
காலம் வரும்போது, இந்த மந்திரம்
சொன்னதற்குரிய பலன் உறுதியாகக்
கிடைக்கும். பிறப்பற்ற நிலையும்
பரமானந்தமும் ஏற்படும்.

ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி
கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான
விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய
ருத்திரனும் அடக்கம்.ஓம் என்னும் மந்திரம்
ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும்
சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த
நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர
்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி
ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது
முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த
நிலையை அடையலாம்.

வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”,
“ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும்
மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து
கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி
வீட்டில் இருந்து ஜபித்தால் பலன்
கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல
மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க
ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு
ஏற்றியபின் தான் பலன் கிடைக்க
ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும்
காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன்
ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.

வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்”
என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்த
மான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என
எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக
சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க
வேண்டும்.பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம்
முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க
வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள
வேறுபாடு நன்கு தெரியும்.

ஒற்றைச் சொல் தியான முறை என்பது ஒரு
எளிய பிராணயாம பயிற்சி. இதில் மூச்சை உள்
இழுக்கும் போதும், வெளிவிடும் போது
மிகுந்த நிதானம் தேவை. மெதுவாக
படிப்படியாக மூச்சை உள் இழுத்து பயிற்சி
செய்யும் போது நுரையீரல் பிராண வாயுவால்
நிரம்புகிறது. பிறகு ஓ……ம் என்ற ஒலியுடன்
மூச்சை வெளிவிடும் போது உடலில்
தேங்கியிருக்கும் கெட்ட கரியமில வாயு
வெளியேறுவதுடன் உடலெங்கும் ஒரு வித
அதிர்வு பரவுகிறது. இதை இந்த ஒற்றை
சொல் பிராணயாம பயிற்சியை செய்யும்
போது நன்றாக உணர முடியும்.
அவரவர் பக்குவம், வயது, திறன், உடல் நிலை
இவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு வித
ஒலிப்பயிற்சிகள் (ஓம் என்பதற்கு பதிலாக
ஆமென், அல்லா என்று கூட அவரவருக்கு
பிடித்த வார்த்தைகளை பயன்படுத்தலாம்.

ஆனால் ம்என்ற முடியும் ஒலிக்கு அதிர்வு
அதிகம்). இதை முறைப்படி பின்பற்றினால்,
அளவிடற்கரிய நன்மைகளை அடையலாம்.
இந்த பயிற்சியால்நரம்பு மண்டலம், சுவாச
மண்டலம் இவற்றிலும் மனநிலையிலும்
மிகுந்த மாற்றங்கள் தோன்றுவதை உணர
முடியும்.

பொதுவாக பத்மாசனத்தில் அமருவதும்,
மனதை ஒருமுகப்படுத்துவதும்
எல்லோருக்கும் எளிதல்ல. மனம் என்பது
கட்டுப்பாடற்றது. அது அலைபாயும்
இடத்திற்கு எல்லாம் நம்மை இழுக்கும்.

ஆனால் அதன் போக்கை நாம் புரிந்து கொண்டு
அதை கட்டுப்படுத்த முயன்றால் அது பதுங்க
தொடங்கி விடும். குறிப்பிட்ட காலத்தில்
தப்பிக்க முடியாது என்று தெரிந்த நிலையில்
அது கட்டுப்பாட்டுக்குள் வர தொடங்கும்.

இந்த மனதை அடக்க ஓம் ஒற்றைச் சொல்
தியான முறை எளிதான ஒரு தந்திரம். இது
நிச்சயமாக பலன் தருகிறது. இந்த பயிற்சியால்
உடலும், மனதும் நெகிழ்ந்து போகிறது.

வேண்டாத தளர்ச்சியும், சோர்வும்நீங்குகிறது.
வாரத்தில் ஒரு மூன்று நாட்கள் மிகுந்த
சிரத்தையுடன் குறிப்பிட்ட நேரத்தில்
(குறிப்பாக அதிகாலை பிரம்ம முகூர்த்தம்
என்று சொல்லப்படும் 3 மணி முதல் 4
மணிக்குள்) இதனை பயிற்சி செய்ய
தொடங்கினால் விரைவில் தொடர் பயிற்சி
எளிதாகி விடும்.

என்னிடம் ஆஸ்துமா நோய்க்காக
வைத்தியத்திற்காக ஒருவர் வந்தார். அவரிடம்
இந்த ஒற்றைச் சொல் தியான முறையை
கடைப்பிடிக்க சொன்னேன். மிகவும்
அதிசயமாக,ஒரே வாரத்தில் அவருக்கு நல்ல
முன்னேற்றம் ஏற்பட்டு ஆஸ்துமாவின்
தொந்தரவு வேகமாக குறைந்து நின்று
போனது. மருந்துகளால் கட்டுப்படாத
ஆஸ்துமா ஒற்றைச் சொல் தியான முறைக்கு
அடங்கி போனதில் ஆச்சரியமில்லை.

அவ்வளவு பலனுள்ளது. இதே
போல்மனச்சோர்வுக்காக வைத்தியத்திற்காக
வந்த நோயாளிகள் பலரும் ஒற்றைச் சொல்
தியானத்தில் பலனை அடைந்திருக்கிறார்கள்.

எத்தனையோ மனச்சோர்வுகள் வந்த போதும்
அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே
கருதவில்லை. அந்த அளவுக்கு ஒற்றைச்
சொல் தியான முறை எதையும் தூள்தூளாக்கி
மனதுக்கும், உடலுக்கும் வலிமை தரும்.

ஒற்றை சொல் தியான முறையால் நரம்புத்
தளர்ச்சி நீங்குகிறது. உடல்
தசைகள்வலுவடைகிறது. நினைவு திறன்
பெருகுகிறது. முக்கியமாக தன்னம்பிக்கை
பெருகுகிறது. நமக்குள் இருக்கும் மன உறுதி
வலுவடைந்து விடுகிறது. உடலின் நோய்
எதிர்ப்பு மண்டலம்சிறப்பாக செயல்படுகிறது.

இந்த பயிற்சியால் நமக்கே தெரியாமல்
இருக்கும் தேவையில்லாத மனஇறுக்கம்,
சோர்வு, அச்சம், கனவு தொல்லை, உடல்வலி
உள்பட பல நோய்கள் நீங்கிவிடும். நம்மிடம்
காலம் காலமாக மறைந்து கிடக்கும்
திறமைகளை நமக்கு முற்றிலும் உணர
வைக்கும் ஒரு பயிற்சி இது என்பதை
கண்கூடாக காணலாம். ஒற்றைச் சொல் தியான
முறையை 3 மாத காலத்திற்கு
கடைப்பிடித்தவர்கள் அபார பலன்களை
கண்டிருக்கிறார்கள். செய்து பார்த்தாலே பலன்
தெரியும்.

முந்தைய காலங்களில் இந்தியாவில் சர்க்கரை
நோய் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக
இருந்ததாக சொல்வார்கள். ஆனால் பசுமை
புரட்சி என்ற பெயரில் பயிர்களுக்கு
என்றைக்கு ரசாயனத்தை தெளித்தார்களோ
அன்றைக்கே நோய்களின் ஆதிக்கமும் தொடங்கி
விட்டது என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது
இப்போது. பயிர்களுக்கு ரசாயனம் அடித்த
காரணத்தால் இப்படி நோய் வருகிறது என்றால்
இன்றைக்கு வரும் நோய்களுக்கு ஆங்கில
மருந்துகள் தான் தீர்வு என்ற நிலையில்
புரியாத ரசாயனங்களை எல்லாம் உடலுக்கும்
கொண்டு செல்கிறோம். இதன் விளைவு….?!

எனவே, மருந்துகளும் அதனால் வரும் பக்க
விளைவுகளும் மலிந்து போன இந்த
காலகட்டத்தில் உடலையும், மனதையும்
ஆரோக்கியமாக வைக்க ஒற்றைச் சொல் தியான
முறையிலிருந்து புது வாழ்க்கையை
தொடங்குவோம்.

பிள்ளையார் சுழி (உ): அ-உ-ம(Aum) விளக்கம்:
எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே
பிள்ளையார் சுழி போட்டுதான்
ஆரம்பிக்கிறோம். நாம் எழுதுகிற விஷயம்
”சுழித்து”ப் (உ)போகாமல் இருப்பதற்காகவே
பிள்ளையார் சுழி போடுகிறோம். “ஒம்” என்ற
பிரணவ ஸ்வரூபமும் பிள்ளையார்தான்.

சுழி என்பது வளைசல், ’வக்கிரம்’.
பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து
சுருட்டிக்கொண்டு இருக்கும் அதனால்
‘வக்கிரதுண்டர்’ என்ற பெயரும்
பிள்ளையாருக்கு உண்டு.சுழி பூரணமாகி
விட்டால் முழுவட்டம். ‘அண்டம்’ என்றாலே
முட்டை என்றுதான் அர்த்தம்.
பூர்ணமும்,சூனியமும் பிள்ளையார்தான்.
பிள்ளையாருக்கு படைப்பதும் பூர்ணம்தான்.

வலைசலான கொம்போடு(உ) ‘பிரம்ம பூர்ணம்’
ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட
வளையாத நேர்க்கோட்டோடு ‘பிரபஞ்ச
பூர்ணம்’ முடிகிறது.

அ-உ-ம(Aum) என்ற மூன்றும் சேர்ந்ததே
‘ஒம்’ (om)காரமான பிரணவம்
அ- பிரம்மா (சிருஷ்டி)
உ –விஷ்ணு (பரிபாலனம்): சிவ-சக்தி, சைவ-
வைணவ சமரசம்.
ம- ஈஸ்வரன் (சம்ஹாரம்)
‘உமா’(உ-ம-அ)- அம்பாளுடைய பிரணவம்
“கோடாயுதத்தால் கொடுவினை களைந்ததே!”
என்றாள் அவ்வை பாட்டி.

கோடு-தந்தம் : கொடுவினை-கர்மா.
நம் ‘தலைச்சுழி’ யை கழித்து விடுவதும்
பிள்ளையார் சுழிதான் .

உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து
ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத
மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித்
துதிப்பதையும் நன்கு அறிவோம்;இந்த நவீன
யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று
புதிய ஒரு ஆய்வின் முடிவில்
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது
வியப்பின் எல்லைக்கு அளவில்லை;அமராவத
ியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என்
ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில்
பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில்
குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த்
லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய
ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம்
நாளுக்கு நாள் வணிகம் செய்வோர்,தொழிற்
சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர்
உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும்
தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால்
ஏற்படும் வேதனைகளும் அவர்களைப்
படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான
மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று
ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர
உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று
சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம்
உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை
தூண்டப்படுவதையும் மனதின்
வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த
மந்திரஒலியால் மீறப்படுவதையும் அவர்கள்
உறுதிப்படுத்துகின்றனர்.இதைக் கண்டுபிடிக்க
அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும்
டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet
Transforms,Time- frequency Analaysis) ஆகிய
உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில்
மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில்
ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள்
ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள்
மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.ஈஈஜி
சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு
முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில்
ஏற்படும் மாறுதல்களை அவர்களால்
கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள்
மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான
நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன
என்கிறார்கள்.

ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற முப்பெரும்
தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்
ஆகியோர் செய்வதை இந்து தர்மம்
கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள
அகார,உகார,மகாரங்கள் “பிரம்மா,விஷ்ணு
,ருத்ரனை”க் குறிப்பதையும் அனைவரும்
அறிவர்.

ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச
ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக
நமது உடலில் நுழைகின்றன.வாயின்
பின்புறம் உதிக்கும் “அ” சுவாசிப்பு
அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது.

வாயின் நடுவில் பிறக்கும் “உ”
மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
.குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம”
தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச
அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட
ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து
முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது
.ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண
ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு
இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக்
கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது
வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர்
கொண்ட ஒரு குழுவிடம் ஆறுவருட காலம்
தனது ஆராய்ச்சியை நடத்தினார்.அமைதியான
ஒரு அறையில் 44.1 ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங்
வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு
மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை
ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன்
மூளையிலும் நரம்புமண்டலத்திலும்
ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக
ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,
1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன
அழுத்தம்குறைகிறது.
2.எதன் மீதும் செய்யப்படும்
கவனக்குவிப்புஅதிகரிக்கிறது.
3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின்
ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு
பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை
ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸீம்(hert
z),ஸ்வாதிஷ்டானத்தில் 288
ஹெர்ட்ஸீம்,மணிபூரத்தில் 320
ஹெர்ட்ஸீம்அனாகதத்தில்(இதயம்) 341.3
ஹெர்ட்ஸீம்,விசுத்தாவில்(தொண்டை) 384
ஹெர்ட்ஸீம், ஆக்ஞாவில்(மூன்றாவது கண்)
426.7 ஹெர்ட்ஸீம் ,சஹஸ்ராரத்தில் 480
ஹெர்ட்ஸீம் அளக்கப்பட்டு உடலின் ஏழு
சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை
ஆய்வு நிரூபித்தது.

ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும்
நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா
மூலமாக உடலின் திசுக்களை
இணைக்கிறது.நமது உடலின்
தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை
அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம்
உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத்
தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக
உள்காது,இதயம்,நுரையீரல்,வயிறு,
கல்லீரல்,சிறுநீரகப்பை,சிறுநீரகங்கள்,
சிறுகுடல்,பெருங்குடல் ஆகிய அனைத்து
உறுப்புக்களையும் இணைத்து நன்மையை
நல்குகிறது.

நம் நாட்டில் மிகவும் பக்தியுடன்
உச்சரிக்கப்படும் புனித மந்திரம் 'ஓம்'. இதை
பிரணவ மந்திரம் என்றும், இந்த பிரணவ
மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன்
எங்கும் நிரம்பியிருந்ததாகவும், 'ஓம்' என்பது
இறைவனின் ஒலி வடிவமாகவும் வேத
முனிவர்கள் கருதினார்கள். வேதங்களின் சாரம்
அனைத்தும் 'ஓம்' என்ற மந்திரத்தில்
அடங்கியுள்ளன.

இந்த 'ஓம்' மந்திரம் உச்சரிப்பவர்களின்
உள்ளத்திற்கு அமைதியையும், அறிவிற்கு
கூர்மையையும் ஏற்படுத்தும்,
நன்மை தரும் மின் அதிர்வுகளை
உண்டாக்குகிறது. நம் நாட்டில் பெரும்பாலான
மந்திரங்களும், வேதப் பிரார்த்தனைகளும் 'ஓம்'
என்ற ஒலியுடன் தான் தொடங்குகின்றன.

எல்லா மங்கள நிகழ்ச்சிகளும் 'ஓம்' என்ற
ஒலியுடனே தொடங்கப்படுகின்றன.

'ஓம்' மனதை அமைதிப்படுத்தி
ஒருமுகப்படுத்துவதால் தியானம் செய்யும்
பொழுதும் 'ஓம்' எனும் மந்திரம் மனதுக்குள்
உச்சரிக்கப்படுகிறது. 'ஓம்' எனும் எழுத்து
வடிவமும் பக்தியுடன் வணங்கப்படுகிறது.

'ஓம்' ஒரு மங்களச் சின்னமாகப்
போற்றப்படுகிறது. 'ஓம்' என்பது இறைவனின்
பொதுப் பெயர். இச்சொல் 'அ', 'உ' மற்றும் 'ம்'
என்ற மூன்றெ ழுத்துகளால் உருவாகிறது.

'அ' என்னும் ஒலி நம் தொண்டையின்
அடிப்பாகத்தில் உள்ள குரல் நாண்களிலிருந்து
தோன்றுகிறது. உதடுகளைக் குவித்து 'உ'
சொல்லப்படுகிறது. உதடுகள் சேரும்போது
'ம்' எனும் ஒலியில் அது முடிவடைகிறது.

இந்த மூன்று எழுத்துகளும் விழிப்பு நிலை,
கனவு நிலை மற்றும் ஆழ்ந்த உறக்க நிலை
ஆகிய மூன்று உணர்வு நிலைகளையும்,
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று
தெய்வங்களையும் ரிக், யஜுர் மற்றும் சாம
என்ற மூன்று வேதங்களையும் குறிப்பதாக
சொல்லப்படுகின்றன.

பகவத்கீதையில் கிருஷ்ணர் எட்டாவது
அத்தியா யத்தில் பதின்மூன்றாவது
சுலோகத்தில் கூறுகிறார்...

'எவனொருவன் பரம்பொருளாகிய 'ஓம்' என்ற
ஓரெழுத்துச் சொல்லை உச்சரித்துக்கொண்டும், என்னை மனதில் கொண்டும் இப்பூத
உடலை விட்டுப்புறப்படுகின்றானோ அவன்
எல்லாவற்றிற்கும் மேலான கதியை
அடைகிறான்'.

'ஓமெனு ஓங்காரத்துள்ளே ஒரு மொழி ஓமெனு
ஓங்காரத்துள்ளே உருவம் ஓமெனு
ஓங்காரத்துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம்
ஒண்முத்தி சித்தியே' என்று திரு மந்திரத்தில்
திருமூலர் பாடியுள்ளார்.

'ஓம்' என்பதை உச்சரிக்கும் பொழுது முதலில்
ஒரு சொல்லாகவும், பின் உருவமாகவும்,
அதன் விளக்கங்கள் பலவாகவும், அதை
உச்சரித்து தியானிப்பதால் முக்தியும்,
சித்தியும் கிட்டும் என்றும் திருமூலர்
கூறுகிறார்.

No comments:

Post a Comment