சித்தர்கள் தள பேரன்பாளர்களே!சித்தர்தாசனின் சித்தர் நெறி வணக்கம்!நேரடி குரு இன்றி கோடியில் ஒருவரே இறைவனை அடைய முடியும்.குருவின்றி அடைய முடியும் என்று சொல்பவர்கள் நிச்சயமாக உணர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்,அவர்களால் சித்தர்களின்,மகான்களின் கருத்துக்களை கடன் வாங்கி விமர்சனம் பண்ணதான் முடியும்.இனியும் காலம் விரையம் செய்யாமல்,குருவை நாடு.நீ விரும்பும் அடையாளத்துடன் இருப்பவர் உன் குருவல்ல.ஆணவமும்,அதை சார்ந்த அறிவும் ஆபத்தானது.நீ கற்றவைகள்,புரிந்து கொண்டுடவைகள்,ஆசைகள் எல்லாம் உன்னுடையவிருப்பு வெறுப்பை சார்ந்தவை.தன்னுடைய விருப்பு வெறுப்பிற்கு குரு இருக்க வேண்டும்,தன்னுடைய பொருள் ,ஆரோக்கியம்,செல்வாக்கு உடனே பெருகிவிட வேண்டும்,பிரச்சினைகள் உடனே விலகிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் என பல்வேறுபட்ட கருத்துக்களை கொண்டுஇருப்பதால்,ஆன்மீகத்தில் தன்னை தானே ஏமாற்றி கொள்ளுகிறவர்கள் அதிகமாக இருப்பதால்,அவர்களால் சார்ந்து இருப்பவர்களுக்கு சங்கடமும்,அவருக்கு கால,மன,பொருள்விரையமும்,உறவுகளில் சிக்கலும்,குருநாதர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது.இதை தவிர்க்க,"இறைவனின் இராஜ்ஜியத்தை முதலில் தேடுங்கள்,உங்களுக்கு அனைத்து ஐஸ்வர்யங்களும் பின்பு சேர்த்து கொடுக்கபடும்"-சித்தர் இயேசு நாதர்.உயர்ந்தை தேடினால்,தாழ்ந்தது தானே வரும்-இஸ்லாமிய சித்தர் சீனியப்பா.உயர்ந்தது இறைவனே என்ற உண்மையை உணர்த்துவதே சித்தர்கள் தளத்தின் நோக்கம்;ஆன்மீக அன்பர்கள் சமுதாயத்திலும்,தொழிலிலும் இல்லத்திலும்,உள்ளத்திலும்,உடலிலும்ஆரோக்கியமாக வாழ,சித்தர்கள் தளம் மூலம் சித்தர்நெறி குருகுலம் நடத்தும் சிவகிரியா தீட்சை மற்றும் பயிற்சி வரும் ஞாயிறு 7.2.2016அன்று நடைபெற உள்ளது. நேரம் காலை 8:30 முதல் 10:30 வரை, பிற்பகல் 3:30 முதல் 5:30 வரை(பயிற்சி 1மணி நேரம் மட்டுமே )அன்பர்கள் தீட்சை பெறுபவர்கள் மட்டும் வரவும் , பயிற்சிக்கு,தீட்சைக்கு கட்டணம் கிடையாது . முன் பதிவுக்கு what's app எண் 93444 66675 இந்த எண்ணில் உங்கள் போட்டோ, ஜதகம் இரண்டையும் பதிவு செய்யவேண்டும். விவரங்களுக்கு 9952851512- சிரவன். வருபவர்கள் ருத்திராட்சமாலை, மல்லிகை பூ, எலுமிச்சை பழம், சாம்பிராணி ( கம்ப்யூட்டர் சாம்பிராணி அல்ல ), சிறிய விளக்கெண்ணெய் குருதட்சணை ( உங்கள் விருப்பம் போல் ) இடம் :சித்தர்கள்தளம் (சித்தர்நெறி குருகுலம் ) 12-4-2, சாஸ்தா நகர் முதல் தெரு, ஆணையூர் மெயின் ரோடு, மதுரை-17. குறிப்பு;தினந்தோறும் இரவு 6 முதல் 8 வரை மேற்படி விலாசத்தில் சந்திக்கலாம்.
No comments:
Post a Comment