என்னிலே இருந்த ஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர்காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டெனே!!!
பொருளுரை:
எனக்குள் இருந்த ஒன்றை (இறைவனை) யான் பல காலங்களாக அறியாமல் இருந்தேன். எனக்குள் இருக்கும் இறைவனைப் பின்பு யான் அறிந்து கொண்டேன். என்னுள் இருக்கும் இறைவனை, என்னைத் தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள முடியாது. பின்பு என்னுள்ளேயே யோகம் இருந்து எனக்குள் இருக்கும் இறைவனை யான் உணர்ந்து கொண்டேன்.
-சிவவாக்கியர்
No comments:
Post a Comment