Tuesday, February 9, 2016

சித்தர் நெறி

சித்தர் நெறி
------------

சித்தர் நெறி சமயம் கடந்தது. அதே சமயத்தில்
சமயத்தோடு தொடர்பு கொண்டது.
என்றாலும், சமயம் வேறு, சித்த நெறிவேறு.

சித்த நெறி சமயத்துள் இருக்கிறது. ஆனால்,
சமயநெறி சித்த நெறியில் இல்லை.

“சித்தர் நெறியை மதங்களோடு இணைத்துப்
பேசலாம். ஆனால், மதங்களில் உயர்வு தாழ்வு
காண்பது சித்தர் நெறிக்குப் பொருந்தாச்
செயல். சித்தர்கள் தங்களுடைய
இறையனுபவத்தைத் தம்மைச் சுற்றியுள்ள
மக்கள் சார்ந்துள்ள மதக் கோட்டுபாடுகளின்
வடிவமைப்பில் சொல்லி யிருக்கிறார்கள்.

மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே
நோக்கத்திற்காகத் தங்கள் அனுபவங்களைச்
சமயச் சொற்களில் சொல்லியிருக்கின்றார்கள்.

சித்தர்கள் பயன் படுத்திய சொற்களைக்
காரணம் காட்டி அவர்களையும் அச்சமய
எல்லைக்குள் அடக்க முற்படுவது சரியாகாது.

எந்த மதத்தையும் பண்பாட்டையும் சாராமல்
தனித்தியங்கும் ஆற்றலுடைய பொது நெறியே
சித்த நெறி

சித்தர்களின் குறிக்கோள்
சித்தர்கள், இந்த உலகத்திலுள்ள
பொருளியல்சார் வாழ்க்கை நெறிகளை ஏற்றுக்
கொள்ளாதவர்கள். தாங்கள் எண்ணிய ஒரு
இலக்கை நோக்கிச் சென்று அதன் பயனை
அறிந்து ஆனந்தம் கொள்பவர்கள்.

“கால இட எல்லைக்குள் அடைபடும்
இவ்வுலகையும் அதிலுள்ள
பொருள்களையும் நடக்கும் நிகழ்ச்சிகளையும்
அறிவதும் கட்டுப் படுத்துவதும் அதனால்
மகிழ்வதும் சித்தர்களின் இறுதிக் குறிக்கோள்
அல்ல. இவற்றை யெல்லாம் கடந்து மேல்
செல்வதே அவர்களின் குறிக்கோள்”. சித்தர்கள்
தங்களின் நோக்கங்களை ஒரு
எல்லைக்குள்ளேயே நிறுத்திக் கொண்டு
முடங்கிவிடாமல், மேலும் மேலும் கடந்து
சென்று புதிய புதிய அனுபவங்களைப்
பெற்று ஆனந்தம் அடைபவர்களாகக்
காணப்படுகின்றார்கள்.

“பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டு
இதமுற்ற பாச இருளைத் துறந்து
மதமற்று எனதுயான் மாற்றிவிட்டு ஆங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே"

என்னும் திருமந்திரச் செய்யுள், மூன்று
புறச்சமய நெறிகள் பழுதானவை எனக்
கண்டறிந்து, அவற்றின் நெறிமுறை களைக்
கைவிட்டு விட்டு, பாசம் என்னும்
இருளையும் விலக்கிவிட்டு, ஆணவத்தையும்,
யான் எனது என்னும் செருக்குகளையும்
கழியவிட்டு விட்டு, இதமான
வழிமுறைகளைக் கண்டறிந்து அவ்வழியைப்
பின்பற்றத் தொடங்கியவர்கள் சித்தர்கள்
என்கிறது.

சித்தர் நெறியும் உலக மதங்களும்

“சித்தர்கள் மேற்கொண்ட யோகம் ஞானம்
ஆகிய இரண்டுமே சமய எல்லைகட்கு
உட்பட்டவை அல்ல. இவை இரண்டுமே
நேர்க்கோட்டு நெறிகள். இடையில்
தடைசெய்ய எவருமில்லை. ஆலயம், உருவ
வழிபாடு, சடங்குகள் முதலியவற்றால்
சமயங்கள் வேறுபடுகின்றன. இவ்வேறு
பாடுகள் முரண்பாடுகளாகி மக்களிடையே
கசப்பையும் வெறுப்பையும் உருவாக்கிப்
பூசலையும் போரையும் விளைவித்திருக்க
ின்றன. சமய எல்லையைக் கடந்து விட்டால்
வேறுபாடுகள் இல்லாத ஒருமை நிலையைக்
காணலாம். யோகமும் ஞானமும் சமய
எல்லைக்கு அப்பாற் பட்ட நெறிகள். இவ்விரு
நெறிகளையும் பொதுப் பெயரால் சித்தர் நெறி
எனலாம். சமய எல்லையைக் கடந்து நின்று
இறையின்பம் காண முயன்றவர்கள் எல்லா
மதங்களிலும் நாடுகளிலும் உண்டு.

சித்தர்கள் உலகெங்கும் இருந்தனர்
என்பதற்கான சான்றுகள் உள்ளன. அவர்கள்
வெவ்வேறு பெயர்களை உடையவர்கள்;

வேறுபட்ட இறைக் கோட்பாடும்
பாரம்பரியமும் பழக்க வழக்கங் களும்
உடையவர்கள். அவர்களின் அடிப் படையான
உணர்வுகளும் செயல்களும் எல்லா நாட்டுச்
சித்தர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியன வாக
இருக்கின்றன. உலகியலை வெறுத்து
ஒதுக்குவது அல்லது பெரும்பான்மையோரின்
இயல்புக்கு மாறாக உலகியலை நோக்குவது
என்பது இவர்களிடையே காணப்படும் பொது
நோக்கு.

உலக மதங்களில் குறிப்பிடப்படும் சித்தர்கள்
அனைவருக்கும் உள்ள ஒற்றுமைகளை ஒப்பு
நோக்கிப் பொதுமைக் கருத்து
கண்டறியப்பட்டது.

சித்தர்களின் குறிக்கோள்
சித்தர்கள், இந்த உலகத்திலுள்ள
பொருளியல்சார் வாழ்க்கை நெறிகளை ஏற்றுக்
கொள்ளாதவர்கள். தாங்கள் எண்ணிய ஒரு
இலக்கை நோக்கிச் சென்று அதன் பயனை
அறிந்து ஆனந்தம் கொள்பவர்கள்.

“கால இட எல்லைக்குள் அடைபடும்
இவ்வுலகையும் அதிலுள்ள
பொருள்களையும் நடக்கும் நிகழ்ச்சிகளையும்
அறிவதும் கட்டுப் படுத்துவதும் அதனால்
மகிழ்வதும் சித்தர்களின் இறுதிக் குறிக்கோள்
அல்ல. இவற்றை யெல்லாம் கடந்து மேல்
செல்வதே அவர்களின் குறிக்கோள். சித்தர்கள்
தங்களின் நோக்கங்களை ஒரு
எல்லைக்குள்ளேயே நிறுத்திக் கொண்டு
முடங்கிவிடாமல், மேலும் மேலும் கடந்து
சென்று புதிய புதிய அனுபவங்களைப்
பெற்று ஆனந்தம் அடைபவர்களாகக்
காணப்படுகின்றார்கள்.

சித்த மருத்துவம் - ஓர் அறிமுகம்

தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான
திராவிட நாகரிகத்தின் வளர்ச்சியினிடைய
ே தோன்றிய மருத்துவ முறையே சித்த
மருத்துவம். முதலில் செவி வழியாகச்
சொல்லப்பட்டு வந்த மருத்துவ முறைகள்,
மரபு வழியாகப் பரவி பின் சித்தர்களால்
வளர்க்கப்பட்டு அதன் மருத்துவ, யோகா,
ஞான, வர்ம, வாத முறைகள்,
கல்வெட்டுகளிலும், ஓலைச் சுவடிகளிலும்
பாடல்களாகவும், மறைபொருள்
பாடல்களாகவும் இருந்து வந்தன. பின்பு
அவை படிப்படியாக அச்சிடப்பட்டு பல்வேறு
நூல்களாக வெளிவந்தன. இப்போதும் வந்து
கொண்டிருக்கின்றன.

நாட்டுப்புற மருத்துவம், வீட்டு வைத்தியம்,
பாட்டி வைத்தியம்,பரம்பரை வைத்தியம்,
வழக்கு மருத்துவம் என்று பல்வேறு
பெயர்களால் அழைக்கப்படுகிறது இத்தமிழ்
மருத்துவம்.

"தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி "

என்பதையே வாக்காகக் கொண்டு, சிவனையே
கடவுளாகவும், சித்தர்களின் முதல் சித்தன்
என்றும் போற்றப்படுகிற சிவனிடமிருந்தே
சித்த மருத்துவம் தோன்றியதாகப் பாடல்களும்
உண்டு.

No comments:

Post a Comment