Monday, August 22, 2016

காலை உணவைத் தவிர்க்காதீர்: மாரடைப்பு வருமாம்

காலை உணவைத் தவிர்க்காதீர்: மாரடைப்பு வருமாம்

காலையில் ஏதேனும் ஒரு உணவை சாப்பிடுபவர்களை விட, காலை உணவை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்றவர்களை விட, காலை உணவை எப்போதுமே தவிர்த்து விடும் நபருக்கு 27 சதவீதம் அளவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.

இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால், சிகரெட் பழக்கம், முழு நேர பணியாற்றும் நபர்கள், திருமணமாகாதவர்கள், உடல் இயக்கம் குறைவாக இருப்போர், அதிகமாக குடிப்பவர்களை விட, காலையில் உணவை தவிர்ப்பவர்களின் உடல்நிலை மிக மோசமாவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

காலை உணவை தவிர்ப்பதால் மாரடைப்பு மட்டும் வருவதில்லை. மேலும், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, நீரிழிவு போன்ற நோய்களும் தாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை நேரத்தில் பணிக்குக் கிளம்பும் அவசரத்தில், சாப்பிடாமல் செல்வோர், இனி சற்று நேரம் ஒதுக்கி காலை உணவை சாப்பிட்டுவிட்டு செல்வது நலம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.

ஆரோக்கியத்தைத் தொலைத்துவிட்டு நாம் தேடப்போகும் பொருள் தான் என்ன?

No comments:

Post a Comment