Sunday, February 14, 2016

சரணாகதி

சித்தர்கள் தள பேரன்பாளர்களே !சித்தர்தாசனின் முழுநிறை வணக்கம் !
இறைவழியில் பயணிக்க பக்திமார்க்கமானலும் சரி,சித்தமார்க்கமானாலும் சரி சரணாகதி இன்றி வெற்றி சாத்தியமும் இல்லை நிரந்தரமில்லை.சரணாகதி இறைவனை(முக்தி,சமாதி,உன்னதம்etc) அடைவதற்கு  மிக எளிமையான பாதை.ஆனால்,
மனம்(ஆணவம்) அதை சிக்கலாக்குகிறது.
சரணடைந்தால் என்ன கிடைக்கும் என்று கணக்கு
போடுகிறது மனம்.ஆனால்
கிடைத்திருப்பதை ஒப்படைப்பதே சரணாகதி.
நாம் ஒப்படைக்கும் முன் நிபந்தனை விதிக்கிறோம்,
கொடுப்பதை இரட்டிப்பாக திருப்பிதர வேண்டும் என்று.
அங்கே,சரணாகதியும் வியாபாரமாக்கப்பட்டு விடுகிறது.உண்மையில் சரணாகதிஎன்பது,கொடுத்துவிடுவதுதான்ஆனால் நாம் கொடுத்தது திரும்பக்கிடைக்கும்போதுஅது ஏற்றுக்கொள்ளப்படவில்லை
என்பதே அதன் பொருள்.எதிர்பார்த்து செய்யும்பூஜை,தொண்டு,காணிக்கை,யோகம்,குருபக்தி எப்படி  உன்னதமான சரணாகதியாகும்?உங்களைத்தவிர(பிறப்பிற்கு பின்,இறப்பின் போது கொண்டு செல்ல முடியாதவை)
கொடுக்க உங்களிடம் ஒன்றும் இல்லை
என்று உணரும்போதுதான் உண்மையான சரணாகதி
நிகழ முடியும்.அது ஒன்று மட்டுமே இறைவனால்
ஏற்றுக்கொள்ளப்படுகிறது.மற்ற எல்லாவற்றையும் இறைவன்
உங்களிடமே திருப்பிக்கொடுத்து விடுகிறான்.நம்முடைய பயணத்தில் சரணாகதியுடன் செல்கிறோமா?என்ற எண்ணம்தான் தேவை,அதைவிட்டு விட்டு ஆன்மீக நூல்கள்,கோயில்கள்,தேவாலயங்கள்,பள்ளிவாசல்கள்,குருநாதர்கள்,மாகன்கள்,மற்ற ஆன்மீக அன்பர்கள்,பயணம் சரியானதா?என்று ஆராய்ந்து காலத்தையும்,மனத்தையும்,வீணாக்கும் எண்ணமல்ல?தை பிறந்தால் வழி பிறக்கும் ,மனம் இருந்தால் மார்க்கமும் சிறக்கும் பேரன்பாளர்களே !

No comments:

Post a Comment