Saturday, October 7, 2017

சிறுகச்சிறுகப்பயின்றால் சித்திக்கும் உண்மை நெறி*". .

*

"மனிதப் பிறப்பில் அமைந்துள்ள நோக்கமானது அறிவறியும் பேறு, மற்றொன்று இறையுணர்வு என்கிற முழுமைப்பேறு - மனிதப் பிறவியின் பரிணாமச் சரித்திரத்தின் சிறந்த நிலையாகும். இறைநிலையிலிருந்து மனிதனான வரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அத்தனையும் தனது அனுபவமாகவே உணருகின்ற பேறு பெற அகத்தவமாகிய "குண்டலினியோகம்" (Simplified Kundalini Yoga) சிறந்ததாகும். தொடர்ந்து  (ஆரம்பத்தில் காலை மாலை குறைந்தது பத்து அல்லது பதினைந்து நிமிடங்களாவது) குண்டலினியோகம் செய்து வர, இதுவரையில் வாழ்வில் ஏற்பட்ட மயக்க நிலைகள் அனைத்தும் மாறிவிடும். இந்த மன நிலையில், தான் செய்த தவறுகளின் பயன்களை ஒரே பிறவியில் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

இந்தப் பேறு பெறுவதற்கு எல்லாருடைய அடிப்படை அமைப்பும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. எண்ணம் செயல் இவற்றில் தடமாற்றங்களுக்கு ஏற்பத் தலைமுறைகள் தலைமுறைகளாகப் பிறவித் தொடர் நீளும். அந்தப் பிறவித் தொடர்ச் சக்கரத்தை முறித்து விட்டு, இறை நிலையோடு ஆன்மாவை இணைத்துக் கொள்வதற்கு, முழுமையாகக் களங்கத்தைப் போக்கித் தூய்மை செய்து கொள்வதற்கு அகத்தவப்
பயிற்சியாகிய "குண்டலினியோகம்" (Simplified Kundalini Yoga - SKY) இன்றியமையாததாகும்".

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment