Thursday, May 19, 2016

கங்கைக் கரை ரகசியங்கள்! பகுதி - 2

கங்கைக் கரை ரகசியங்கள்! பகுதி - 2

''காசி சமஸ்தானம்!''

காசி மாநகரம் என்பது இரண்டு பகுதிகளானது. ஒன்று நகர வாழ்க்கை கொண்ட பகுதி. மற்றொன்று, கங்கை நதியின் கரையோரம் அனைவராலும் வணங்கப்படும் ஆன்மீக நகரம்!

அக்காலத்தில், காசி மற்றும் அதன் சுற்றுபுற நகரங்கள் இணைந்ததாக இருந்த ''காசி சமஸ்தானம்'' பிற அரசுகளை விட ஒரு தனித்துவமாக இருந்தது.

காசி சமஸ்தானத்தில் ராணுவம் மற்றும் போர்படை என்பது இல்லை. காசி ராஜா காசியை நிர்வாகிக்கும் தன்மையை மட்டுமே கொண்டவராக இருந்தார்.

காசி மேல் யாரும் போர் தொடுக்கவோ, காசி அரசர் பிறர் மேல் போர் தொடுக்கவோ மாட்டார்!

காசி மாநகரம் கல்விக்கு பிரதானமான விஷயமாக இருந்தது. காசியில் பல கல்விச்சாலைகள் இருந்ததால் பாரத தேசத்தில் பல நாட்டு அரசர்களும், அறிஞர்களும் அங்கே வந்து பாடம் பயின்றனர்.

காசி ராஜா அங்கே இருக்கும் பல்கலைகழகத்தின் சிறந்த கல்வியாளராக தேர்ச்சி பெற்று சமஸ்தானத்தில் அறிஞர்களுடன் அலங்கரிப்பவராக இருந்தார்.

பாரத தேசத்தில் உள்ள அறிஞர்கள் தங்களின் அறிவை நிரூபணம் செய்யவும், ஆராய்ச்சிகளை வெளியிடுவதற்கும் காசிக்கு செல்லுவார்கள்.

அங்கே அறிஞர்கள் குழு ஒன்று (Senate members) ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்கும். சான்றிதழ்கள் செப்பு தகட்டில் அமைந்திருக்கும்.

காசி ராஜாவின் அரண்மனை பிரம்மாண்டமானது. காசி அரசர்களுக்கு பல கலைகள் தெரியும்; பல அறிவிப்பூர்வமான காரியங்கள் செய்தார்கள்.

காசியில் உள்ள படித்துறைகளில் பல நாட்டு ராஜாக்களுக்கு சிறிய அரண்மணைகளை கட்டுவதற்கு அனுமதித்து, இரு விரோத நாட்டு ராஜாக்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் சச்சரவு இல்லாமல் அமைதியை நிலைநாட்டுவது காசி ராஜாவின் முக்கிய பணியாக இருந்தது.

படித்துறையில் ராஜாக்களுக்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் சாதாரணமானது அல்ல..... ஒவ்வொன்றும் குட்டி அரண்மனை!

சில அரண்மனைகளில் இருந்து பார்த்தால்.... கங்கை நதியும், அதன் கரையில் உள்ள மனிதர்களும் தெரிவார்கள். ஆனால், கரையில் இருந்து பார்த்தால் அரண்மனையில் இருப்பவர்களை பார்க்க முடியாது!

இது போன்ற கலை நயங்கள் பல உள்ளன. ராஜாஸ்தான் அரசர் ராஜா 'ரஞ்சித் சிங்', தனது நாட்டிலிருந்து ஊதா நிற சலவைக் கற்களை கொண்டுவந்து இங்கே அரண்மனை கட்டி இருக்கிறார்!

சத்ரபதி சிவாஜி இங்கே ஒரு அரண்மனையும், படித்துறையும் அமைத்திருக்கிறார்! நேப்பாள் மஹாராஜாவும், சோழ அரசர்களும் இங்கே தங்கள் சந்ததியினர் வந்தால் தங்குவதற்கு அரண்மனை கட்டியிருக்கிறார்கள்!

காசி நகரம் இவ்வளவு தொன்மையான ஊராகவும், பல நாட்டு அரசர்கள் விரும்பும் ஊராகவும் இருந்தது.

---- ஸ்வாமி ஓம்கார்.

No comments:

Post a Comment