பயம் எப்போது வருகிறது...?
தன் மீதும், தன் செயல்திறன் மீதும் நம்பிக்கை இல்லாதிருக்கும் போது வரும்.
பிறர் கூறுவதை சிந்திக்காமல், அப்படியே ஏற்கும் போதும் வரும்.
பிறர் கூறுவதை ஆழ்ந்து சிந்திக்காமல், அகன்று சிந்திக்கும் போது குழப்பம் ஏற்படும் நிலையிலும் வரும்.
"நான் யார்" என்ற தெளிவு இல்லாத போதும் வரும்.
சமுதாயத்தால் எங்கெ நம் முகமூடிகள் கழற்றப்பட்டு விடுமோ என்று எண்ணும் போதும் வரும்.
நோய், மரணம் இவற்றை அறியாதிருக்கும் போது வருவதை விட, அதன் நுணுக்கங்களை அறிந்து கொண்ட பிறகு அதிக பயம் வரும்.
ஆக, எல்லா சூழ்நிலைகளும் நம்மை பயம் என்ற பாதாளத்தில் தள்ளி விடுவதற்கு தயாராக இருக்கிறது.
இதை எப்படி வெல்வது....?
எதுவும் என்னுடையது அல்ல,
ஆகையால் எதுவும் என்னை பாதிக்காது என்ற திண்ணிய எண்ணம் பயத்தை பயந்து ஓடச் செய்யும்.
சமுதாயப் பார்வையில் பயம் இல்லாத மனிதன் எதற்கும் பயன் பட மாட்டான் என்ற முத்திரை இருக்கு.
அந்த முத்திரையையும் நம் முகத் திரையாக கொள்ளாமல், தூக்கி எறிய துணிவு இருந்தால் பயத்தை வெல்லலாம்.
பயத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட,
நேருக்கு நேர் சந்திக்க துணிந்தால் தானாகவே ஒழிந்து போகும், கடந்தும் போகும்.
ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் போது கடுமைத் தனம் கை கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
கடக்க வேண்டும் என்று எண்ணும் போது இங்கேயும் பயம் கவ்விக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
அதை சந்திக்க வேண்டும் என்ற துணிவே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை குடுக்கும்.
பக்குவம் வந்துவிட்டால் எல்லாம் சாத்தியமாகும்.
மகரிஷி ஏன் "கவலை ஒழித்தல்" என்று பெயர் சூட்டி இருக்கிறார் என்றால் கவலையின் தன்மை மிக மிக மோசமான நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதால் தான்.
மேலும் ஒழிப்பதற்கு ஆயுதமாக சிந்திக்கக் கூடிய வழிமுறையும், அதை சந்திக்கக் கூடிய ஆற்றலையும் தானே கூறி இருக்கிறார்.
சந்தித்து, சிந்தித்தாலோ, அல்லது,
சிந்தித்து சந்தித்தாலோ,
தானே ஓடிவிடும்.
ஒழிப்பதும், கடப்பதும் தானாய் நிகழும்.
மாற்றுக் கருத்து இருப்பினும் பகிரலாம்.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment