தற்போதைய மழை, குளிர் சூழலில் பலரும் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை கண்கிறோம்..!
.
செல்வம் சேர்த்து வைத்திருப்பவன் மட்டும் பணக்காரனல்ல உடல் ஆரோக்கியமாக மருத்துவ செலவு இல்லாமல் இருப்பவன்கூட பணக்காரன்தான்.
அந்த வகையில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு வடிவமைத்துக்கொடுத்த ஒன்பது நிலை பயிற்சிகள் நோய் வரும்முன் காக்கும் கவசமாகும்.
.
.
ஒன்பது நிலை பயிற்சியில் தற்போதைய சூழக்கேற்ற பிராணாயாம பயிற்சியான கபாலபதி -ஐ பற்றி சிந்திப்போம்
.
.
பிராணாயாமம் (விளக்கம்) :
.
மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது என்பதை அறிவோம்.
.
1. விண் (ஆகாசம்),
.
2. காற்று (வாயு),
.
3 நெருப்பு,
.
4. நீர்,
.
5. கெட்டிப்பொருள்.
இவ்வைந்து பூதங்களிலே வாயு எனப்படும் காற்று மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஏனெனில், மூச்சு என்னும் செயலின் வழியாகவே மற்ற பூதங்களும் உயிரொட்டமுள்ளதாக இயங்குகின்றன.
.
.
உணவு மற்றும் நீர் இல்லாமல் பல நாட்கள் வாழ முடியும். ஆனால் காற்று இன்றி சில நிமிடங்கள் கூட சீவன்கள் வாழ முடியாது.
.
உயிரானது காற்றை நம்பி உள்ளது . காற்றே உயிருக்கு ஆதாரமானா சக்தியை வழங்குகிறது. இதயம், நுரையீரல், மூளை, முதுகுத்தண்டு போன்ற அனைத்து உடல் உறுப்புகளுக்கும் இயக்க சக்தி அளிப்பது காற்றே ஆகும்.
.
பித்தம், கபம் மற்றும் உடலின் உறுப்புகள் அனைத்தும் தன்னிச்சையாக இடம்பெயர இயலாதவை. மேகமானது காற்றினால் இடம் மாறுவது போன்று மற்ற உடல் தத்துவங்கள் அனைத்தும் காற்றாலேயே இடமாற்றம் பெறுகின்றன.
.
.
காற்றை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதே பிராணாயாமப் பயிற்சியின் நோக்கமாகும். முகத்திற்கு வசீகரமும், மனதிற்கு திறனும், உடலுக்கு உணவை ஏற்றுக்கொள்ளும் சீரண சக்தியும் காற்றால்தான் ஏற்படுகிறது.
.
.
காற்றினுடைய இயற்கையான குணமே “அசைதல்” ஆகும்.
.
காற்றை அதன் செயல்பாட்டின் அடிப்படையில் ஐந்து வகையாக பிரித்திருக்கிறார்கள். அவை பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன் ஆகும். மேலும் ஐந்து உப பிராணன்களும் உள்ளன. இவ்வனைத்து பிராணன்களும் சூக்கும உடலான பிராணமய கோசத்தை சேர்ந்தவைகளாகும்.
.
.
பயிற்சி:
.
இப்பயிற்சியை தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை மூலபந்தத்திலேயே இருக்க வேண்டும். (#மூலபந்தம்_என்பது_ஆசனவாய்_பகுதியை_இறுக்கிப்பிடிப்பது)
.
.
சுகாசன நிலையில் நேராக உட்கார்ந்துகொள்ளவும். இடது கைப்பெருவிரலால் மூக்கின் இடது துவாரத்தை அடைத்துக்கொண்டு, வலது துவாரத்தின் வழியாக முதலில் மூச்சை வேகமாக வெளியே விட வேண்டும்.அதே துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளே இழுத்துக்கொள்ளவேண்டும்.
.
பிறகு அதை ஆட்காட்டிவிரலால் அடைத்துக்கொண்டு, இடது துவாரத்தின் வழியாக வேகமாக வெளியே விட்டு வேகமாக உள்ளே இழுக்கவும்.
.
.
தொடர்ந்து இதுபோல மாற்றி மாற்றி பத்து முறை செய்யவேண்டும். சுமார் ஒரு நிமிட ஓய்வுக்கு பின்னர் மேலே விவரித்தபடி பத்துமுறை பயிற்சி செய்யவேண்டும்.
இது போல மூன்று முறை செய்யவேண்டும்.
.
இந்த பயிற்சியின்போது மூச்சை உள்ளே ஒரு கணமும் நிறுத்திவைக்க வேண்டியதில்லை. மூச்சை வெளியே விடும்போது சற்று வேகமாக விடவேண்டும்.
வாய்வழியாக மூச்சை இழுக்கவோ, விடவோ கூடாது
.
.
முக்கிய குறிப்பு : உயர் ரத்த அழுத்தம் (B.P) , குடல் இறக்கம், இதய நோய், கர்பிணிப்பெண்கள் செய்ய வேண்டாம்
.
மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள மனவளக்கலை மன்றங்களை தொடர்புகொள்ளுங்கள்
.
.
பயிற்சியின் நன்மைகள்:
.
1. சைனஸ் தொந்தரவுகள் நீங்கும்
.
2. ஈசினோபோலியோ நோய் நீங்கும்
.
3. மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல்களில் படிந்திருக்கக்கூடிய தூசி முதலிய வேற்றுப்பொருட்கள் வெளியேறும்.
.
4. உடலுக்கு நல்ல சுறுசுறுப்பு வரும்
.
5. மூளைக்கு இரத்தம் நன்கு பாயும்.
.
.
பயன்படுத்தி பயன்பெறுவோம்..! நோயின்றி வாழ முயல்வோம்.!!
.
.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment