சே .. இதுவும் ஒரு பொழைப்பா..?
என் நண்பர் நா.முத்துநிலவன் அவர்களின் வளரும் கவிதை
வலைத்தளத்தில் வாசித்த தகவலை அப்படியே மீள்பதிவு
செய்திருக்கிறேன்.
சே.. இதுவும் ஒரு பொழைப்பா..?
நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்..
.
அடப்பாவிகளா!! வணிகம் என்னும் பெயரில் சட்டரீதியாகவே நம்மை விற்றுவிட்ட நமது அரசுகளின் ஏமாற்று என்பதா? மனச்சாட்சியில்லாத வணிகர்களின் லாபவெறிக்கு இந்தியர்களைப் பலியிடுகிறார்கள் இந்தியத் தலைவர்கள் என்பதா ..
என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை!
அரசாங்கம் இதைத் தடுக்கவேண்டும் என, சில சட்டதிட்டங்களைப் போட்டிருந்தாலும், அதை இந்தியர்களில் 99.999%பேர் அறிந்துகொள்ளாத படியே நமது அரசுகளின் நடைமுறை லட்சணம் உள்ளது!
மாதிரிக்கு
இந்தியாவில் விற்கப்படும் பற்பசையில் உள்ள கோடுகளைப் படத்தில் தந்திருக்கிறேன்,
இதோ அந்த விவரம் -
இயற்கை முறையில் தயாரித்தது – பச்சைக்கோடு,
இயற்கை 75% செயற்கை 25% - நீலக்கோடு,
செயற்கை 75% இயற்கை 25% - சிவப்புக்கோடு
கிட்டத்தட்ட முழுவதுமே செயற்கை – கருப்புக்கோடு
பிஸ்கட், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் இவ்வாறே இருப்பது இன்னும் கொடுமையான செய்தி!
இதை நாம்தான் கண்டுபிடித்து, தவிர்க்க வேண்டும்.
“செயற்கையான ரசாயனப் பொருள்களால் செய்யப்பட்ட, ஆபத்து நிறைந்த உணவுப்பொருள் இது“ என்பதையே கருப்புக்கோடு காட்டுகிறதாம்!
ரசாயனப் பொருளும், செயற்கை மருத்துவப் பொருளும் கலந்தது என்று அடையாளம்தான் சிவப்புக் கோடு செப்புகிறதாம்!
மருத்துவப் பொருளும், இயற்கையான பொருள்களும் கலந்தது நீலக்கோடு!
பச்சைக் கோடு ஒன்றுதான் இது இயற்கையானவற்றால் தயாரித்த பொருள் என்று நமக்குப் பச்சைக் கொடி காட்டுகிறதாம்!
இவ்வளவு அர்த்தம் சொல்வதற்காகவே கோடுகளில் வண்ணவேறுபாடு குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது என்னும் செய்தி எத்தனை பேருக்குத் தெரியும்? படித்தவர்களையே ஏமாற்றும் இந்த விளையாட்டு, படிக்காத எத்தனை ஏழை இந்தியர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் என்பதை நினைத்தால் நம்மை இத்தனை ஆண்டுகளாக ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கும் தலைவர்களை-
“அடக் கொலைகாரப் பாவிகளா!” என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?
ஒரு பின்குறிப்பு-
சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கருப்புக்கோடு உள்ள உணவுப் பொருள்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன.
எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் மக்கள் வாங்கித்தின்று மருத்துவமும் இல்லாமல் வயிறுவீங்கி சாகட்டும் இந்தியநாய்கள் என்றுதான் நம் அரசு நினைக்கிறதா?
நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பர்களே!
அடுத்து,
முடிந்தவரை இந்தச் செய்தியைப் பகிருங்கள்.
முதலில் நம் குழந்தைகளுக்கு இதைச் சொல்லுங்கள்,
பொருள்களை வாங்கும்போது கவனித்து வாங்குங்கள்,
இப்போதைக்கு நம்மால் செய்யக் கூடியது இதுவே.
இதை மக்களிடம் பிரச்சாரம் செய்யாமல் விற்பனை செய்வது அறியாத மக்களுக்குச் செய்யும் அநியாயம் என்று வழக்குப் போடலாமா என்றும் முயற்சி செய்யவேண்டும்.
பி.கு.- இந்த அதிர்ச்சி தரும் செய்தியை எனக்குச் சொன்ன புதுக்கோட்டை நாணயவியல் கழகத் தலைவர் அண்ணன் எஸ்.டி.பஷீர் அலி அவர்களுக்கு எனது நன்றி
.
----------------------
No comments:
Post a Comment