மக்கள் கூட்டம்
அலைமோதும் இடங்களில்
திருமணம், கோவில், விஷேஷங்களில்
பூக்கள் அதிகம் இடம் பிடிப்பதேன் ??
பூக்கள் பிராணனை
அதிகம் வெளிப்படுத்தி
பிராணனின் பற்றாக்குறையை சரி செய்யும்
சுற்றுப்புறத்தை தூய்மைப் படுத்தும்
இது புறம்
அக நோக்கில்
ஆன்மா பிராண நிலையம்
ஆன்மா என்னும் பூ மலர்ந்துவிட்டால்
ஆன்மா என்னும் பூ விழித்தெழுந்து விட்டால்
உடலுக்கு
புறத்திருக்கும் பிராணன் அவசியமில்லை
நாம் மூச்சு விடா நிலைக்கு வந்துவிடுவோம்
இதுவே மெய்வாழ்வு – உண்மை யோகம்
ஆன்மாவாகிய பிராணன் உடலை சுத்தம் செய்யும்
ஒவ்வொருவர் உள்ளும் ” இறந்த நிலையிலிருக்கும் ஆன்மாவாகிய இயேசு கிறிஸ்து ” விழித்து எழுதலையும், உயிர்த்து எழுதலையுமே, ” இயேசு மீண்டும் வருவார் ” என்று பைபிள் குறிப்பாக கூறுகின்றது – Second coming of Christ
இதைப் புரிந்து கொள்ளாமல் , இயேசு புற உலகினில் மீண்டும் தோன்றுவார் என்று மலைகளிலும் , சுவர்களிலும் கிறிஸ்தவர் எழுதி பிரச்சாரம் செய்கின்றனர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment