முதுமை ஏன் எப்படி வந்தடைகின்றது ??
நாளாக நாளாக வயது ஏறுகின்றது – வயது ஏற ஏற மூப்பு உடம்பினை வந்தடைகின்றது.
வயது ஏற ஏற, அணுக்களுக்கு கிடைக்கக்கூடிய உஷ்ணம் ( சக்தி ) குறைந்து போய், அதனால் உடலின் அணுக்களின் – வளர்சிதை மாற்றம் – ( cells meiosis and mitosis division ) படிப்படியாகக் குறைந்து போய், அவைகளின் ஆயுள் குறைந்து போய், அதனால் தோலில் திரைகள் தோன்றி, சுருக்கம் வர ஆரம்பிக்கிறது. நோய்க்கும் ஆட்படுகிறது
அதனால் , அணுக்களுக்கு, ஓயாமல் சக்தி கிடைத்துக் கொண்டே இருந்தால், அவைகளின் ஆயுள் நீடித்துக் கொண்டே போகும் – உடலும் “என்றும் பதினாறு” போல் இருக்கும்
2. நம் குணத்தினாலும் – கோபம் , பேராசை , கவலைகளினாலும் , வேற்றுமை பாராட்டுவதினாலும் – இருமைகளினாலும் – உயர்வு/தாழ்வு , நல்லது/தீயது , வேண்டும்/வேண்டாம் என்பதினாலும் உடலின் அணுக்களின் சிதைவு துரிதப்படுகிறது – உடல் ஆரோக்கியம் கெட்டு, நோய்வாய்ப் படுகிறோம்.
3. புறத்தினில் காலத்தை அளக்கும் கருவிகளாக சூரியனும் சந்திரனும் செயல்பட்டு காலகதியை ஏற்படுத்துகின்றனர். உடம்பினில் காலத்தை அளக்கும் கருவிகள் எங்கு அமைக்கப்பட்டுள்ளன ??
காலத்தின் இயக்கம் மூளையிலுள்ள பீனியல் சுரப்பியில் அமைக்கப்பட்டுள்ளன. இது செயல்பட செயல்பட , சுவாசகதி நடந்து நடந்து , நம் ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது.
” காலன் நடப்பது “கால் ” என்னும் வாசியினாலே ” – காலனும் நம் அருகே வந்து கொண்டே இருக்கிறான்.
காலனின் இயக்கத்தை ஓட்டத்தை எப்படி நிறுத்துவது ?? அதை நிறுத்தக்கூடிய வல்லமை ஒன்றே ஒன்றுக்குத் தான் இருக்கிறது.
” காலனை காலால் உதைத்தவளாம் வாலை ”
அது தான் “திருவடி”- இது மார்க்கண்டேய புராணத்தால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது
காலனை ஜெயிப்பதற்கு அரும்பாடுபட்டு, ஆராய்ந்து, காடு மலைகளில் திரிந்து , சித்தர்களால் கண்டறியப்பட்டது தான் ” காயகல்பம் ” என்னும் மூலிகையாலான ஔஷதம்.
இது உடம்பை கல்ப காலத்துக்கு நீடித்திருக்க செய்யும் அற்புத மருந்து ஆகும்.
இதனை சித்தர்கள் பலவாறாக பெயரிட்டு அழைத்தனர் – அமுரி – முப்பு – முப்பூ குரு – அமுதகலசம் – அமிர்தம் என்றெல்லாம் அழைத்தனர்.
” முப்பு கண்டார் மூப்பை வென்றார்” என்பது சித்தர்களின் வாக்கு
ஆனாலும் இவைகள் யாவும் ‘ புறம் ”
அகமுகமாக நோக்கில், எவ்வாறு சுருக்கம் நிறைந்த ஒரு சட்டையை, ஒரு இஸ்திரிப் பெட்டி, தன் உஷ்ணத்தால், சுருக்கத்தை நீக்குகின்றதோ, அவ்வாறே, ஆன்மாவும் தன் அதீத சுத்த உஷ்ணத்தால், ( கோடி சூரியப் பிரகாசத்தால் ) உடல் முழுதும் பரவியும் பாய்ந்தும், உடலின் அணுக்களை வேதித்து, சுத்தம் செய்து நரை, திரை, மூப்பை நீக்கி விடுகின்றது.
உடல் காயசித்தி அடைகிறது
ஆன்மவொளி உடல் முழுதும் பரவ பரவ , பசி – தூக்கம் – சோர்வு எல்லாம் படிப்படியாக குறைந்து போய், அதனால் மலஜல உபாதிகள் குறைந்து போய், உடலுக்கு புறத்திலிருந்து உணவு – ஓய்வின் தேவை அற்றுப் போய், அதனால் உடலில் அசுத்தம் உற்பத்தியாவது அற்றுப் போய், உடல் ஆன்மவொளியால் பொன்னொளி வீசும்.
இது ஆன்மதேகமாகிய சுத்த தேகம் – சுவர்ண தேகம்
இது ” கஜேந்திர மோட்சம் ” என்னும் புராணத்தால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது
கஜேந்திரன் – உடலோடு கூடிய ஜீவன்
முதலை – காலன்
பெருமாள் / மஹாவிஷ்ணு – ஆன்மா
காலன் வந்து ஜீவனைக் கவர்ந்து செல்ல முற்பட, அது ஆன்மாவின் உதவியை நாட, ஆன்மா வந்து காலனை கொல்கிறது
புராணங்களின் உண்மைப் பொருளைத் தெரிந்து கொண்டாலே, ஆன்மாவை அடைவதற்கான பயிற்சியை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் வள்ளலார் புராணங்கள் /இதிகாசங்கள் எல்லாம் பொய் என்று கூறியதால் , சன்மார்க்கிகள், அதைப் புறக்கணித்து , பயிற்சி/சாதனை என்னவென்று தெரியாமல் இன்னமும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள் .
வள்ளலார் என்ன சாதனைகள் செய்து முத்தேக சித்தி அடைந்திருப்பார் என்று யூகிக்க முடியாமல் இருக்கிறார்கள்
புறத்திலே மூலிகைகளை தேடி அலையாமல் , அகத்திலே ஆன்மாவை சரணடைந்து , சாதனைகள் பயின்று, இதனை ஆற்றின், அதுவே என்றும் அழியா நித்திய உடம்பை நல்கும் என்பது திண்ணம்
வெங்கடேஷ்படி வந்தடைகின்றது ??

வெங்கடேஷ்
No comments:
Post a Comment