OSHO, OUR MASTER (TAMIL WORLD)
ஒரு இறந்த மனிதனைச் சுற்றி நிறைய விஷயங்கள் நிகழ துவங்குகின்றன.
அவர் ஒருவரை நேசித்திருப்பார் எனில் அவரது வாழ்வு ஆற்றலின் ஒரு பகுதியை நேசிக்கப்பட்டவருக்கு வழங்கியிருக்கிறார் என்பதாகிறது.நேசிக்கப்பட்டவருக்கு
வழங்கப்பட்ட வாழ்வாற்றல் பகுதி ,இவர் இறக்கும் போது நேசிக்கப்பட்டவரிடமிருந்து இவரைத் தேடி உடனடியாக திரும்ப வந்து விடுகிறது.
நீங்கள் இங்கே இறந்தால் ,உங்களது காதலி ஹாங்காங்கில் வாழ்கிறாள் எனில் ,அவளிடமிருந்து ஏதோ ஒன்று அவளை விட்டு உடனடியாக விலகுகிறது.ஏனெனில் வாழ்வின் ஒரு பகுதியை அவளுக்கு கொடுத்திருக்கிறீர்கள்.அந்த வாழ்வாற்றல் பகுதி உங்களிடம் திரும்ப வருகிறது.
நீங்கள் நேசிக்கிற ஒருவர் இறந்து போனால் ,உங்களிடமிருந்து ஏதோ ஒன்று இழந்தது போல உணர்கிறீர்கள். ஏதோ ஒன்று உங்களிடமும் மரணித்துப் போகிறது.ஒரு ஆழமான பசுங்காயம் ,ஒரு ஆழமான இடைவெளி உங்களில் ஏற்பட்டு நிற்கிறது.
நேசிக்கிறவர் இறந்து போகும் போது ,நேசிக்கப்படுபவரிடமும் ஏதோ ஒன்று இறந்து போகிறது.அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஆழமாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
.
நீங்கள் ஆயிரக்கணக்கான மக்களால் லட்சக்கணக்கான மக்களால் நேசிக்கப்பட்டிருக்கிறீர்கள் எனில் ,உதாரணமாக Dogoவோ புத்தனோ இறக்கும் போது ,பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலிருந்தும் அவரது மையத்தை நோக்கி ,அவர் வழங்கிய ஆற்றல்கள் திரும்புகிறது.
இது ஒரு பிரபஞ்ச செயலாகி விடுகிறது.ஏனெனில் அவர் பல பல வாழ்வுகளில் ,மில்லியன் கணக்கான வாழ்வுகளில் சம்பந்தப்பட்டிருப்பதால்- பிரபஞ்சம் முழுதும்அவர் வழங்கியிருக்கிற ஆற்றல்கள் அவரை நோக்கி திரும்பி வருகின்றன.
அந்த ஆற்றல்கள் தோன்றிய மூலத்துக்கே திரும்பி வருகின்றன. அவை மறுபடியும் உடல் மையத்துக்கே குவிக்கப்படுகிறது.அந்த ஆற்றல்கள் வட்ட அதிர்வுகளாக மீள்பெயர்ச்சி ஆகிக் கொண்டிருப்பதை ,நீங்கள் கவனித்தீர்களானால் உணர முடியும்.
ஒரு பிரமாதமான ஆற்றலை ,பிரமாதமான ஒளி விசையை உங்களால் உணர முடியும்.பிறகே ,அந்த மையம் -உடலை விட்டு விலகுகிறது.
ஒரு மனிதன் 'இறக்கிறான் '..அங்கே சுவாசம் நின்று போன போது -அவன் இறந்து விட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.அவர் சாகவில்லை.முழுமையாக செத்துப் போக ,இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஒருவர் பல மில்லியன் வாழ்வுகளில் சம்பந்தப்பட்டிருந்தார் எனில்-அவர் 'இறப்பதற்கு 'பல நாட்களாகிறது.
அதனால்தான் சாதுக்களையும் யோகிகளையும் இங்கே இந்தியாவில் புதைக்கிறார்கள்.எரிக்கப்படுவதில்லை.
மற்றவர்கள் எரிக்கப்படுகிறார்கள் எனில் மற்றவர்களுடனான அவரது வாழ்வியல் சம்பந்தம் மிகக் குறைவாக இருக்கிறது.மற்றவர்களுக்கு அவர் தந்த ஆற்றல் ,அவரது இறப்பிற்கு பின்பாக வெகு சில நிமிடங்களில் திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது.அதற்கு மேல் அவர்கள் இந்த இருப்பில் ஒரு பகுதி அல்ல.
ஆனால் ,யோகிகளுக்கு அந்த ஆற்றல்களைப் பெற்றுக் கொள்ள அதிக காலமாகிறது.அவ்வளவு ஆற்றல்களை வழங்கியிருப்பதால் அவை திரும்ப வர அதிக காலமாகிறது.அவை வந்து கொண்டே இருக்கிறது.
அதனால்தான் ,சாயிபாபா வாழ்ந்த ஷீரடியில் நீங்கள் செல்கிறீர்கள் எனில் ,மீண்டு வந்து கொண்டிருக்கிற அதிர்வுகளை இன்னமும் நீங்கள் உணர முடியும்.இப்பவும் இந்த வாழ் ஆற்றல் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன.
சாயிபாபாவின் கல்லறை இறந்து போயிருக்கவில்லை.இது உயிரோடே இருந்து கொண்டிருக்கிறது.ஆற்றல் திரும்பிக் கொண்டே இருக்கிறது.
இந்த உணர்வை பிற பல கல்லறைகளுக்கு அருகில் உங்களால் உணர முடியாது-ஏனெனில் அவை 'இறந்து விட்டன '
'இறந்து விட்டன' என்கிற என் வார்த்தையின் அர்த்தம் -அவர்கள் பிறர் வாழ்வில் அளித்திருந்த வாழ்வியல் ஆற்றலை ,முழுமையாக திரும்ப பெற்றுக் கொண்டார்கள் என்பதாக இருக்கிறது.அவர்கள் மறைந்து விட்டார்கள்.
-ஓஷோ
நூல் :And the flowers showered
மொழிபெயர்ப்பு :கே.சாரதி
Many things start
happening around a dead man.
If he loved a person
very deeply, that means
he had given
a part of his life energy
to that person,
and when a person dies,
immediately that part
that he had given
to another person
leaves that person
and moves to the dead man.
If you die here
and your lover
lives in Hong Kong,
something will leave
your lover immediately --
because you have given
a part of your life and
that part will come back to you.
That's why when
a loved one dies
you feel that something
has left you also,
something in you has died also.
A deep wound,
a deep gap will exist now.
Whenever a lover dies,
something in the
beloved also dies,
because they were deeply
involved with each other.
And if you have loved
many, many people --
for example,
if a person like Dogo dies,
or a buddha --
from all over the universe
energy moves
back to the center.
It is a universal phenomenon
because he is involved
in many many lives,
millions of lives,
and from everywhere
his energy will come back.
The vibrations that he has
given to many will leave,
they will move to the original source,
they will become again
a concentration near the navel.
If you watch you will feel
ripples coming back
in a reverse order,
and when they are
totally concentrated
in the navel,
you can see
a tremendous energy,
a tremendous light- force.
And then that center
leaves the body.
When a man 'dies',
that is simply a
stopping of the breath,
and you think he is dead.
He is not dead;
that takes time.
Sometimes, if the person
has been involved in
millions of lives,
it takes many days for him to die --
that's why with sages,
with saints, particularly in the East,
we never burn their bodies.
Only saints are not burned;
otherwise everybody is burned,
because others' involvement
is not so much.
Within minutes
the energy gathers,
and they are no more
part of this existence.
But with saints,
the energy takes time.
Sometimes it goes on and on --
that's why if you go to Shirdi,
to Sai Baba's town,
you will still feel
something happening,
still the energy goes on coming;
he is so much involved that
for many people he is still alive.
Sai Baba's tomb is not dead.
It is still alive.
But the same thing
you will not feel
near many tombs --
they are dead.
By 'dead' I mean
they have accumulated
all their involvement,
they have disappeared.
OSHO -
No comments:
Post a Comment