Wednesday, January 13, 2016

வாசியும் – நெற்றிக்கண்ணும்

வாசியும் – நெற்றிக்கண்ணும்

நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றானது , எல்லோர்க்கும், மூக்குத் துவாரதிற்குள் ஏறி , கீழிறங்கி நுரையீரலுக்கு வந்து விடும். அப்படி கீழிறங்காமல் . அதனை தடுத்து , மேலேற்ற வேண்டும் – இது ஒரு பயிற்சி

இதனை உணர்த்தத் தான் நடராஜர் தன் இடக்காலை மேலே தூக்கி நடமாடுகின்றார்

1. வாசி என்பது – இட கலை – சந்திர கலை ஆகும் – இதனை மேல் ஏற்றுவதற்குத் தான் உலகில் எல்லா யோகியரும் – ஞானியரும் அரும் பாடு படுகின்றனர்

இந்த வாசிக் குதிரையைத் தான் ” அகோரம் ” என்றும் , இந்த பயிற்சி செய்வோரை ” அகோரிகள் ” என்று அழைக்கின்றோம்

நெற்றிக்கண்ணைத் திறந்து , ஆன்மாவைத் தரிசனம் செய்வதற்கு இந்த வாசி என்னும் காற்று வேண்டும்.

இந்த சந்திரனின் கலைகள் மொத்தம் பதினாறு

இதனைக் கருத்தில் கொண்டே தான், நம் முன்னோர் , ஒவ்வொரு கோவில் முன்பும் , பதினாறு கால் மண்டபம் அமைத்து உள்ளனர் – அது வழியாக உள்ளே புகுந்து இறைவனை தரிசிக்க வேண்டும் என்று சொல்லாமலே சொல்லியுள்ளனர்

– அதாவது பதினாறு கலையுடைய சந்திரனைக் கொண்டு நெற்றிக்கண்ணைத் திறந்து, உள்ளே புகுந்து ஆன்மாவை தரிசிக்க வேண்டும்

நெற்றிக்கண்ணை திறப்பதற்கன திருமந்திரப் பாடல் :

மூக்கு நுனியில் கண்மூடாமல்தான் நோக்கி
காக்கு மனது கலங்காமல் நெற்றியை ஊன்றி
ஆக்கு மனதை அசையாமல் தான்
தீர்க்கமாய் நெற்றிக்கண்ணும் திறந்திடே

ஆனால் , சன்மார்கிகள் , அருட்பா உரை நடையில் வள்ளலார் ” தக்க ஆசான் கொண்டு நெற்றிக்கண்ணை திறந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார் என்று புறத்திலே இருக்கும் குருவிற்காக காத்துக்கொண்டிருக்கின்றோம்

2. கர்ப்பக்கிரகமானது , எல்லாக் கோவில்களிலும் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே அமைத்து இருப்பார்கள் = அதாவது , ஆன்மாவானது ஆயிரத்தெட்டு இதழ் கமலம் ( மூளையின் நடுவில் ஆழத்தில் ) நடுவே ஒளியாக இருக்கின்றது என்று காட்டியிருக்கின்றார்கள்

நம் ஊர் திருவிழாக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை நன்கு ஆய்ந்து – ( முதல் நாள் கொடியேற்றம் முதல் – கடைசி நாள் திருக்கலியாணம் வரை – ரத உற்சவம் வரை ) , அதில் உள்ள ரகசியங்களை தெரிந்து கொண்டால் , திருசிற்றம்பலத்திற்குள் நுழைவதற்கான வழியை அறிந்து கொள்ள முடியும்

ரகசியங்களை சாதனையில் புகுத்தி, வெற்றி கண்டால், திருசிற்றம்பலத்திற்குள் நுழையவும் முடியும்

நம் வேத காலத்து ரிஷிகள் , எல்லா ரகசியங்களையும், யோகசாதனைகளையும் இதிகாசங்களாகவும், புராணங்களாகவும், திருவிழாக்களாகவும், பண்டிகைகளாகவும் சித்தரித்து வைத்து, நம் வாழ்க்கையின் அங்கமாக்கிவிட்டார்கள்

திருசிற்றம்பலத்திற்குள் நுழையும் ரகசியங்களை திருமந்திரம் – திருவாசகம் தெரிவிக்கின்றன . அதனை நன்கு ஆய்ந்து படித்தால் தெரிந்து கொள்ளலாம்

வெங்கடேஷ்
About these ads

Occasionally, some of your visitors may see an advertisement here.

No comments:

Post a Comment