வள்ளலாரை ஏன் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை ??
வள்ளலாரின் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவில்ல – அவர் கூறினார்
தயவு தான் என்னை ஏறா நிலைக்கு மேல் ஏற்றியது – அது தான் எல்லா அனுபவத்துக்கும் அடிப்படையாக அமைந்தது – அதனால் சமய மதங்களால் அடைய முடியாத நிலைகள் எல்லாம் நான் கண்டேன் அனுபவித்தேன் என்றார்
இங்கு தயவு என்று வள்ளலார் குறிப்பிடுவது ” ஆன்மாவைத் தான் அல்லாது வேறெதுவுமில்லை ” என்பதை எல்லா சன்மார்க்க சங்கத்தவர்கள் உணர வேண்டும்
இதனை கருத்தில் கொள்ளாமல் சோறு போடுவது தான் தயவு , ஜீவகாருண்யம் – அது எல்லா பேற்றையும் நல்கும் என்று எல்லா சங்கங்களும் அன்ன தானத்தை பிரதானமாக செய்து வருகின்றன – அது மட்டும் செய்து வருகின்றன – அதை தாண்டி சிந்திப்பதுமில்லை – சிந்திப்பதற்கு நேரமுமில்லை
சோறு போடுவது தான் சன்மார்க்கம் ஜீவகாருண்யம் என்று வள்ளலார் நினைத்திருந்தால் வள்ளலார் தருமச்சாலையோடு நிறுத்திக் கொண்டு வேறெதனையும் கட்டியிருக்கக் கூடாது – ஞான சபை – சித்தி வளாகம் என்று சென்றிருக்ககூடது அல்லவா ??
அவர் வெறும் அன்னதானம் மட்டும் செய்து கொண்டு இருந்திருக்கலாம் அல்லவா ??
அவர் திருவடிகளைக் கொண்டு தவம் செய்தார் – அதனால் வந்த விளைவாக ” ஒருமை ” என்னும் ஆன்ம நிலைக்கு வந்தார் வளர்ந்தார் – பின்னர் மேலும் ஏறி சிவ நிலை – சுத்த சிவ அனுபவம் பெற்றார் என்பது உண்மை
வள்ளலார் கூற வருவது :
1. அசுத்த ஜீவனாக இருக்கும் நீங்கள் – கீழ் பச்சைத் திரை நீக்கி சுத்த ஜீவனாக மாறுங்கள்
2. ஜீவனாக இருக்கும் நீங்கள் முதலில் – ஆன்மாவாக மாறுங்கள் – ஆன்மாவை சரணடைந்து – அதன் சகாயத்தினால் , உதவியினால் மாயை மற்றும் கன்ம மலங்களை வெல்லுங்கள் – வென்று விட்டால் ஆன்மாவாக மாறிவிடுவீர்கள்
3 இதற்கு சாதனமாக கண் பயிற்சி வலியுறுத்துகின்றார் – திருவடியின் சகாயம் மிகவும் அவசியம் – கண்மணிகளில் திருவடி விளங்குகின்றது – அதனை பயன்படுத்தும் விதத்தில் பிரயோகப்படுத்தி திருவடிகளை ஒன்றாக்கி – அதில் வரும் அனுபவத்தினால் ஆன்ம நிலைக்கு உயருங்கள் என்று வழி காட்டுகின்றார்
சன்மார்க்க சங்கத்தவர்களுக்கு திருவடி பற்றிய விழிப்புணர்வும் இல்லை அதனைச் சார்ந்த பயிற்சியை அறிந்தவருமில்லை
அறிந்தவர் அதனை ஏற்றுக்கொள்வதுமில்லை
அதனால் சன்மார்க்க சாதனம் என்பது எதுவும் இல்லாமல் போயிற்று – சன்மார்க்கம் என்றால் சோறு போடுதல் என்ற நிலையில் வழங்கியும் வளர்ந்தும் நிற்கின்றது
இது மிகவும் மோசமான நிலை ஆகும்
4. ஆன்ம நிலைக்கு வளர்ந்து விட்டால் , அதன் மேல் சத்தினிபாதம் என்னும் அருள் பதிந்தால் மூன்றாவது ஆணவ மலமும் கழிந்து ஆன்மா சிவத்திற்கு சமமாகும்
5 இதன் மேல் வரும் அனுபவங்கள் எல்லாம் சுத்த சிவ அனுபவம் ஆகும் – ஆன்மா சிவத்திடம் கலப்பதாகும்
6 இதையெல்லாம் சன்மார்க்க சங்கத்தவர்கள் நினைப்பதில்லை – சோறு போட்டால் எல்லாம் கிடைத்து விடும் என்று நினைக்கின்றனர் – அது உண்மையாக இருந்திருந்தால் இன்னேரம் நிறைய பேர் முத்தேக சித்தி அடைந்திருக்க வேண்டும் அல்லவா ?? நடக்க வில்லையே
வெங்கடேஷ்
http://www.facebook.com/badhey.venkatesh
No comments:
Post a Comment