Saturday, January 9, 2016

சாகாத்தலை – வேகாக்கால

சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல்

1 .சாகாத்தலை : மூலாக்கினி

இரு திருவடிகளின் இணைப்பினால் நெற்றியில் தோன்றிடும் ஒரு வகையான அக்கினி
மூலம் தொடங்கி சுழிமுனை வரை ஓங்கி வளர்ந்து மலங்களையும் வினைகளயும் அழிக்க வல்லது

அருளைக் கொடுக்கின்ற ஒளி
இது தோன்ற , விந்து பர விந்துவாக மாறும்

2 வேகாக்கால் : அமுதக் காற்று – இறைச் சுவாசம்  – Cosmic breath – Cosmic Prana – Gods breath etc

பிராணன் – காரணக் காற்று – 1008 இதழ் மீதுள்ளது

சுழிமுனையிலிருந்து புறப்பட்டு உடல் முழுதும் பரவி நிற்கும்

முதலில் சூரியகலை – சந்திர ( வாசி ) கலையாக மாற்றம் பெறும். நாதம் உண்டாகும் . பரவிந்து வாசியுடன் கூடி சுழிமுனை வழியாக மேலேறி , பிரமப்புழை திறக்கப்பட்டு, துவாதசாந்தப் பெருவெளி அடையும்.
முழு நிலவு உருவாகும் – அதிலிருந்து குளிர்ந்த காற்று வீசும். இது சாகாக்கலை – அமுதக்கலை , இறைச்சுவாசம்

பசி தூக்கம் போகும், உடல் லேசாக , தக்கையாக இருக்கும் , உடல் மிதக்கும் .

3. போகாப்புனல் : அமுதம் ( அமுதமாகிய மாறிய விந்து )

பூரண சந்திரனிலிருந்து குளிர்ச்சியான அமுதம் இறங்கும். அருளமுதம்

மூன்று உளுந்து பிரமாணமுள்ள அமுதம் இறங்கும். இதுவே சுத்த கங்கை – ஆகாய கங்கை

சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் ஆகிய மூன்றும் கலந்து உருவாதலே அருளமுதம்

வெங்கடேஷ்

No comments:

Post a Comment