Saturday, January 9, 2016

குண்டலினி யோகம

"குண்டலினி யோகம் (Simplified Kundalini Yoga - SKY) :"
.

.
"விந்து, நாதம் இவைகளை ஆதாரமாகக் கொண்டே இந்த உடல் உருவாகி, வளர்ச்சி பெற்று, இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதேபோல் அறிவும் உடலை ஆதாரமாகக் கொண்டு இயங்கினாலும் கருவையே மூலமாகக் கொண்டு இயங்குகிறது. திரியை மூலமாகக் கொண்டே விளக்கு எரிவது போல் - வெளிச்சம் தோன்றுவதுபோல் - வித்தை ஆதாரமாகக் கொண்டே உடலியக்கம் நடைபெறுகிறது. அறிவியக்கம் நடைபெறுகிறது. அறிவின் பிறப்பிடமாகிய கருவில் ஞாபகத்தை ஒருங்கச் செய்து அங்கேயே ஒன்றி ஒன்றிப் பழக்கம் செய்துகொள்ளும் முறையே தவம் (Simplified Kundalini Yoga) எனப்படும்.
.

சம்பவக் கற்பனைகள், சம்பவ ஞாபகங்கள் என்னும் எண்ண அலைகளின் மூலம் உடலில் விளையும் உயர்தரமான காந்த சக்தி சூழ்நிலைக் கவர்ச்சியால் வீணாகிக் கொண்டே இருக்கிறது. எண்ணங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இந்தச் சக்தி உடலில் சேகரமாகி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது. அதைத் தாங்கும் வன்மையும் உடலுக்கு ஏற்படுகிறது.  அதனால் அறிவுக்கு நட்பும், உறுதி, ஆராய்ச்சி வேகம் கூடிக் கொண்டே இருக்கும்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

*****************************************

"ஒன்றி ஒன்றிப் பழகிவரும் அறிவிற்கன்பு ,
உறுதி, நுட்பம், சக்தி இவையதிகமாகும்
அன்று அன்று அடையும் அனுபவங்கள் எல்லாம்
அறிவினிலே நிலைத்துவிடும் ஆழ்ந்து ஆய்ந்து
நன்று என்று கண்டபடி செயல்கள் ஆற்றும்
நற்பண்பு புலன்களுக்கு அமைந்துபோகும்
என்றென்றும் கருவிடத்தே அறிவை ஒன்றும்
இயற்கை முறை சிறப்புடைத்து; ஈது தவமாம்."

.
எண்ணத்தில் பிரபஞ்சம் :-

"எண்ணத்தை எண்ணத்தால் ஆராய ஆராய
இயற்கை ரகசியங்கள் எண்ணத்துள் சாட்சியம்
எண்ணத்தின் இவ்வுயர்வை இயற்கையே பேசுதென்றும்
இதுவே உள்ளுணர்வென்றும் இயம்புவோர் அனுபவத்தோர்."

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment