நமக்கு பசிக்கிறது என்று வயிறு சொன்னால், நமக்கு பசிக்கும்.உடல் நோயடைந்ததாக சொன்னால், நாம் நோயாளியாகி விடுகிறோம்.நம் காம மையம் ஆசைபட்டால், நமக்கு காம இச்சை எழுகிறது.
வயதாகி போய் விட்டதாக உடல் சொன்னால் ,நாம் கிழவனாகி விடுகிறோம்.
உடல் உத்திரவிடுகிது, நாம் கீழ்ப்படிகிறோம். ஆயிரம் விதங்களில் அடிமையாக
இருக்கிறோம்.
ஆனால், ஆத்ம சக்தி மையமான மூன்றாம் விழி மையத்தை தூண்டி உடல் ஆனையிடுதை நிறுத்தனும்! மாறாக அதை அடங்கி போகவும் செய்யனும்.
ஒருவேளை மூன்றாம் உலக போர் வந்து உலகம் அழிந்தால், "விலை மதிப்பில்லாதது என்று சொல்லப்படும் கோகினூர் வைரக்கல்லும், ஆற்றிலுள்ள கூலாங்கல்லும் ஒன்றுதான்".
பொருள் கடந்த பூரணத்தை அறிய விரும்பினால், மூன்றாம் உலக போர் தேவையில்லை, மூன்றாம் விழியின் உதவி தேவை.
நம் நெற்றிக்குள் இருக்கும் இந்த கண்,உலகு கடந்த, பொருள் கடந்த,அப்பால் பிரதேசத்திற்கான கதவாக செயல்படுகின்றது.
"மூன்றாம் விழி நமக்கு கிடைத்த அபூர்வமான பரிசு".
No comments:
Post a Comment