மனிதனுக்கு எட்டுவித பந்தங்கள் இருக்கின்றன. அதை வெட்கம், வெறுப்பு, அச்சம், ஜாதிச்செருக்கு, வம்சவழிச்செருக்கு, சீலம், துயரம், உள்ளத்தில் ஒளித்துவைத்தல் என்பனவாகும். குரு கடாட்சமின்றி இவற்றை யாரும் விட்டு விட முடியாது.
மலத்தில் உதித்து மலத்திலேயே வாழ்ந்துவருகிற புழு ஒன்று, சந்தனத்தில் எடுத்துவைத்தால் அது செத்துப்போகும். அதுபோன்று கலகப் பற்றுடைய ஒருவனை நல்லார் இணக்கத்தில் சேர்த்துவைத்தால் அவன் பெருந்துன்பத்துக்கு ஆளாவான்.
உலக வாழ்க்கையில் சத்து ஒன்றும் இல்லை. ஆயினும் உலகப் பற்றுடையவன் அதைத் தெரிந்திருந்தும் அதை விட்டுவிடமாட்டான்.
கயமையில் உழல்பவர்களுக்குக் கடவுள் விசுவாசம் வருவதில்லை. அவர்கள் எப்பொழுதும் சந்தேகப் பேர்வழிகள். ஆனால் சந்தேகம் யாருக்குமே அடியோடு அகன்று போவதில்லை. பிரம்மஞானம் அடைய பெற்றவனுக்குத்தான் சந்தேகம் ஒன்றும் வருவதில்லை.
உலகில் பெரும் பற்றுதல் வைத்து சுக ஜீவனம் செய்து வருபவர்களிடம் உலகிலுள்ள கஷ்ட நஷ்டங்களைப்பற்றி மிகைபடப் பேசலாகாது.
கடவுளை நேசிப்பவன் போன்று அவன் பாசாங்கு பண்ணுகிறான். உண்மையின் சகலப் பொருள்களிடத்துதான் அவன் பற்றுதல் வைத்திருக்கிறான். ஈசனே அனைத்துக்கும் இறைவன் என்னும் மெய்ஞ்ஞானம் வரும் வரையில் மனிதனுக்குப் பிறவிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
\ஒருவனுக்கு தேகாத்ம புத்தி இருக்கும்பொழுது பிறப்பு, இறப்பு, பிணி, துயரம், இன்பம், துன்பம் ஆகியவைகளைப் பற்றிய உணர்வு இருக்கிறது. ஆனால் ஆத்மாவோ இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.எனவே அழிவுள்ள அனைத்திலும் பற்றற்று அழிவற்ற ஆன்ம நேய ஆன்மாவை பெற முயற்சிப்போம்.இன்றைய நற்சிந்தனைகளின் வழி நடப்போம்...அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
No comments:
Post a Comment