Saturday, January 9, 2016

நெற்றிக் கண் திறக்கும் வழ

நெற்றிக் கண் திறக்கும் வழி – சொர்க்கவாசல் – பரமபத வாசல் திறக்கும் வழி

ஆன்மாவை அடையும் படிகள்/வழிகள்

1. இரு திருவடிகளும் புருவமத்தியில் இணைதல்

2. இரு கண்மணிகளும் மேலேறி, புருவமத்தியில் திருவடிகளுடன்
கலத்தல்

3 கண்மணிகள் சூக்கும நாத விந்து கலைகளை வெளிப்படுதுதல்
( நெற்றிநடுவில் நீல ஒளியாகத் தோன்றல் )

4 சூக்கும பஞ்ச பூத – இந்திரிய சக்திகள் பிரணவத்தில் கலத்தல்

5 சூக்கும நாத விந்துக்களினாலும், சூக்குமபஞ்ச இந்திரிய சக்திகளின் கூட்டுறவாலும் திருவடிகளும் மனமும் அசைவற்று நிற்றல்

6 அதனால் மூலாக்கினி உதயமாகுதல்

7 மூலாக்கினியால் மனோ நாசம் – மனம் அடங்கிப் போதல்

8 மேலும் மூலாக்கினியால் நாதம் உண்டாகுதல்

விந்து – பரவிந்துவாக மாற்றம் அடைதல் :

9. சாதனை பலத்தால் சிவக்கலை உருகுதல்

10 கண்மணிகளினால் சிவக்கலை ( விந்து ) நடு நெற்றிக்கு மேலேறுதல்

11. மூலாக்கினியால் விந்து – பரவிந்துவாக மாறுதல்

12 வாசி உருவாதல்

13 நாதத்தால் பரவிந்து வாசியுடன் கலத்தல்

14 விந்து + வாசி சுழிமுனை நாடியில் பிரமப்புழைக்கு விரைந்து ஏறுதல்

15 பிரமரந்திரம் திறப்பு – பரமபத வாசல் திறப்பு – உள் பிரவேசித்தல்

16 மூலாக்கினியின் தகிப்பால் மும்மல நாசம் – பழ வினைகளும் நாசம்

17 ஆன்ம தரிசனம் – மௌனம் – 1008 இதழ் கமலம்

இதில்

4 சூக்கும பஞ்ச பூத – இந்திரிய சக்திகள் பிரணவத்தில் கலத்தல் என்பது

திருவிளையாடற் புராணத்தில் – சிவபெருமான் – வலைஞன் போல் வந்து மீன் பிடிப்பது என்ற கதையால் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது

மீன் = பஞ்ச இந்திரிய சத்திகள்

5 சூக்கும நாத விந்துக்களினாலும், சூக்குமபஞ்ச இந்திரிய சக்திகளின் கூட்டுறவாலும் திருவடிகளும் மனமும் அசைவற்று நிற்றல் என்பது
திருவிளையாடற் புராணத்தில் – தக்ஷ யாகத்தை அழித்தும், தக்ஷனை வதம் செய்தும், அவன் தலை கொய்து அதற்கு பதிலாக ஆட்டுத் தலை வைத்தான் என்ற கதையால் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது

11. மூலாக்கினியால் விந்து – பரவிந்துவாக மாறுதல் என்பது

இராமாயணத்தில் – ஸ்ரீ ராமன் என்ற பாத்திரத்தாலும், வள்ளலார் தன் உரைனடையில், பேருதபேசத்தில், கீழிருக்கும் பச்சைத் திரை விலகினால் , இராகத் துவேஷங்கள் நீங்கி , சுத்தராகவும் , புனிதராகவும் விளங்குவார்கள் என்ற கூற்றாலும் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது

ஸ்ரீ ராமன் = புருஷோத்தமன் என்பது நினவு கூறத்தக்கது

12 வாசி உருவாதல் என்பது
திருவிளையாடற் புராணத்தில் நரியை – பரியாக மாற்றிய கதையால் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது

நரி – சூரிய கலை
பரி – சந்திர கலை இட கலை
BG Badhey Venkatesh

No comments:

Post a Comment