Friday, January 8, 2016

ஓஷோ

***‪#‎OSHO‬#*********
*************‪#‎கேள்வி‬ பதில்கள்#***********
#கேள்வி : - ' ஓஷோ , இந்த உலகத்தில் எண்ணற்ற கோவில்களும் , மசூதிகளும் , சர்ச்சுகளும் உள்ளன . அங்கே பூஜைகள் , பிரார்த்தனைகள் நடக்கின்றன . நீங்கள் அறிந்தவரையில் இவையெல்லாம் வீண்தானா ? '
‪#‎பதில்‬ : - " ஆமாம் . வீண்தான் ! அப்படி வீண் இல்லை என்றால் , இத்தனை பூஜைகள் , இத்தனை பிரார்த்தனைகள் , இத்தனை கோவில்கள் , மசூதிகள் , சர்ச்சுகள் எல்லாம் உண்மையானதாக இருந்தால் மிகச்சரியாக இருந்தால் , மக்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்திருந்தால் இப்பொழுது இந்தப் பூமி சொர்க்க பூமியாக மாறி இருக்கும் . ஆனால் , இது நரகமாக அல்லவா இருக்கிறது ? எங்கேயோ நிச்சயம் தவறு ஏற்பட்டிருக்கிறது .
ஒன்று கடவுள் பரமாத்மா என்று யாரும் இருக்கமாட்டார்கள் . அதனால்தான் பிரார்த்தனைகள் வீணாகிப் போய்க்கொண்டிருக்கின்றன . பிரார்த்தனைகள் உண்மையானதாக இல்லாது இருக்கலாம் . அதில் இணக்கம் இருந்திருக்காது . மக்கள் இப்படி தங்கள் நேரத்தை வீண்டிக்கிறார்கள் .
என்னைப் பொறுத்தவரையில் பரமாத்மா என்பவன் இருக்கிறான் . பிரார்த்தனைதான் சரியில்லை . இந்தியாவில் பூசாரிகளும் , குருக்களும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள் . உங்களுக்காக இவர்கள் கடவுளிடம் சிபாரிசு செய்கிறார்கள் . எங்குமே இது ஒரு தொழிலாக இருக்கிறது . ஆனால் , பூசாரிக்கும் பிரார்த்தனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு தொழில் . சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் . நீங்கள் ஒரு 100 ரூபாய் கொடுத்து , " என் பகைவனுக்கு எதிராக ஸ்லோகம் சொல் ' . என்றால் அவன் சொல்லுவான் !
நீங்கள் கோவிலுக்குச் சென்று என்ன செய்கிறீர்கள் ? ' எனக்குக் குழந்தை இல்லை . ஒரு குழந்தையைக் கொடு , ' எனக்குப் பணம் இல்லை , பணம் கொடு , ' என் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது . அதை எனக்குச் சாதகமாக முடித்துக்கொடு " - இப்படி கேட்கத்தான் கோவிலுக்குச் செல்கிறார்கள் . இதற்குப் பெயர் பிரார்த்தனை இல்லை . கடவுள் என்ன உங்கள் வேலைக்காரனா ? நீங்கள் சொல்லுவதையெல்லாம் கேட்டு உங்களுக்கு அடிபணிந்து இட்ட வேலையைச் செய்ய ! ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் .
எங்கே ' வேண்டுதல் ' உள்ளதோ , அங்கே பிரார்த்தனை இல்லை .
ஆக மக்கள் பிரார்த்தனை செய்வதில்லை . பிரார்த்தனை செய்பவன் கோவிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை . உங்களுக்குப் பிரார்த்தனை உணர்வு ஏற்பட்டு , நீங்கள் எப்போது , எங்கே உங்கள் கண்களை மூடினாலும் கோவில்கள் தானே திறந்துகொள்ளும் . எங்கே உங்கள் தலை சாய்கிறதோ , அங்கே அவனுடைய உருவம் நிற்கும் .
கடவுள் , சிலைகளில் இல்லை . அவர் உங்கள் பணிவான கருணைமிக்க உள்ளத்தில் இருக்கிறார் . உங்கள் உணர்வுமிக்க உள்ளத்தில் இருக்கிறார் . உங்கள் ஆனந்தக் கண்ணீரில் இருக்கிறார் .
ஒரு உண்மைச் சம்பவம் .........
விவேகானந்தரின் தந்தை இறந்துவிட்டார் . இருக்கும்பொழுது அவர் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார் . அவர் தாராள மனம் படைத்தவர் . பலபேர்களுக்கு உதவி செய்து கடன்பட்டுவிட்டார் . வீட்டில் ஒன்றுமே இல்லை .
அப்பொழுது தன் குருவான இராமகிருஷ்ணரிடம் சென்று , தனக்கு உதவி செய்யும்படி வேண்டினார் . அப்பொழுது ராமகிருஷ்ணர் அவரிடம் , ' நீ ஒன்றும் கவலைப்படாதே . நீ அன்னையிடம் ( காளி ) சென்று முறையிடு . அவள் பார்த்துக் கொள்வாள் ' என்றார் . இராமகிஷ்ணர் கோவிலுக்கு வெளியே உட்கார்ந்திருந்தார் . விவேகானந்தர் உள்ளே சென்று சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தார் . அவர் கண்களில் நீர் நிரம்பியிருந்தது .
இராமகிருஷ்ணர் அவரிடம் , ' என்ன கேட்டாயா ? ' என்று கேட்டார் .
விவேகானந்தர் , " மறந்துவிட்டேன் " என்றார் .
மீண்டும் ராமகிருஷ்ணர் அவரிடம் , ' சரி இப்பொழுது சென்று முறையிடு ' என்றார் . இதைப்போல மூன்று தடவை நடக்கிறது . கடைசியில் விவேகானந்தர் , ' என்னால் இது முடியாத காரியம் . தாங்களே எனக்காக கேட்டு அருளுங்கள் ' என்று சொல்லிவிட்டார் . அந்த பராசக்தியின் முன்னால் , தான் சின்ன சின்ன விஷயங்களுக்காக எப்படி கேட்பது என்ற தயக்கம் ஒருபுறம் . அடுத்து ' வேண்டுதல் ' அவருக்குப் பிடிக்காத விஷயம் .
பிறகு இராமகிஷ்ணர் சிரித்துக்கொண்டே அவரிடம் , ' எனக்குத் தெரியும் . இது உன்னால் முடியாத காரியம் என்று . ஏனெனில் எங்கே வேண்டுதல் இருக்கிறதோ , அங்கே பிரார்த்தனை இருக்காது . இது உனக்குத் தெரிகிறதா என்றுதான் பார்த்தேன் . சரி , இனிமேல் உன் குடும்பம் அத்தியாவசியமான தேவைகளுக்குக் கஷ்டப்படாது ' என்று அருளுகிறார் .............
Like

No comments:

Post a Comment