Saturday, August 12, 2017

ஆழ்மனத்தின் அற்புத சக்தி"

Dr ஜோசப் மர்பி  அவர்கள் எழுதிய   "ஆழ்மனத்தின் அற்புத சக்தி" என்ற ஒரு காலத்தால் அழியாத மாபெரும் காப்பியத்திலிருந்து  அத்தியாயம் வாரியாக இரத்தினசுருக்கமாக பதிவு செய்வதில்  மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்..

ஆழ்மனத்தின் அற்புதமான சக்திதான்  வாழ்வின் சக்தி அதுதான் ஈர்ப்பு சக்தி ..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மாபெரும் புதையல்

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மாபெரும் புதையல்

1. "புதையற்களஞ்சியம் உங்களுக்குள்தான் இருக்கிறது. உங்கள் இதயத்தின் விருப்பத்திற்கான விடையை உங்களுக்குள் தேடுங்கள்.

2. கடந்த காலத்தில் வாழ்ந்து வந்த மாபெரும் மனிதர்கள் தங்கள் ஆழ்மனத்தைத் தொடர்பு கொண்டு அதன் சக்தியை விடுவிக்கும் இரகசியத்தை அறிந்திருந்தனர். உங்களாலும் அதைச் செய்ய முடியும்.

3. உங்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வு உங்கள் ஆழ்மனத்தில் உள்ளது. நீங்கள் உறங்கச் செல்லுமுன், உங்கள் ஆழ்மனத்திடம், “நான் காலை ஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டும்,’’ என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றால், அது உங்களைச் சரியான நேரத்தில் எழுப்பிவிடும்.

4. உங்கள் உடல் வளர்ச்சியின் காரணகர்த்தாவான உங்கள் ஆழ்மனத்தால் உங்களை குணப்படுத்த முடியும். ஒவ்வோர் இரவும், பரிபூரண ஆரோக்கியம் என்னும் கருத்தை மனதிற்கொண்டு உறங்கச் செல்லுங்கள்; உங்கள் நம்பிக்கைக்குரிய பணியாளனான உங்கள் ஆழ்மனம் உங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்.

5. ஒவ்வோர் எண்ணமும் ஒரு காரணம்; ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு விளைவு.

6. நீங்கள் ஒரு புத்தகத்தை எழுதவோ, ஓர் அற்புதமான நாடகத்தைப் படைக்கவோ, அல்லது உங்கள் பார்வையாளர்களுக்குச் சிறப்பான ஒரு சொற்பொழிவாற்றவோ விரும்பினால், அக்கருத்தினை உங்கள் ஆழ்மனத்திடம் அன்பாகவும் உணர்வுபூர்வமாகவும் தெரிவியுங்கள். அது அக்கருதிற்கு ஏற்றார்போலச் செயல்படும்.

7. நீங்கள் ஒரு கப்பலை வழிநடத்திச் செல்லும் தலைவர் போன்றவர். அத்தலைவர் சரியான கட்டளைகளை அளிக்க வேண்டும்; இல்லையேல் கப்பல் சேதமடைந்துவிடும். அது போலவே, உங்களுடைய அனுபவங்களைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்தும் உங்கள் ஆழ்மனத்திற்கு, நீங்கள் உங்களுடைய எண்ணங்கள் மூலமாகவும் மனக்காட்சிகள் மூலமாகவும் சரியான கட்டளைகளை இட வேண்டும் .

8. “இதனை வாங்கும் பண வசதி எனக்கு இல்லை,’’ அல்லது “என்னால் இதைச் செய்ய இயலாது,’’ போன்ற சொற்றொடர்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். உங்கள் ஆழ்மனம், வார்த்தை பிறழாமல் அவற்றை ஏற்றுக் கொள்ளும். நீங்கள் விரும்புவதைச் செய்வதற்கான பணமோ வலிமையோ உங்களிடம் ஒருபோதும் இல்லாதவாறு உங்களது ஆழ்மனம் பார்த்துக் கொள்ளும். “என் ஆழ்மனத்தின் சக்தி கொண்டு என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்,’’ என்று தொடர்ந்து கூறி வாருங்கள்.

9. நம்பிக்கை விதிதான் வாழ்வின் விதி. நம்பிக்கை என்பது உங்கள் மனத்தில் தோன்றும் ஓர் எண்ணமே. உங்களைப் பாதிக்கும் அல்லது துன்புறுத்தும் பொருட்களின் மேல் நம்பிக்கை கொள்ளாதீர்கள். உங்கள் ஆழ்மனத்தின் சக்தி உங்களை குணப்படுத்த வல்லது, உத்வேகமூட்ட வல்லது, பலப்படுத்த வல்லது, வளமாக்க வல்லது என்று நம்புங்கள். நீங்கள் நம்புவதைப் போன்றே உங்கள் வாழ்வில் நடக்கும்.

10.  எண்ணங்களை மாற்றுங்கள்; உங்கள் தலைவிதியையே மாற்றி அமைத்து விடலாம்.

நன்றி .நன்றி..நன்றி...

படியுங்கள் ..உணருங்கள்.
RAJAJI JS 13-8-17

No comments:

Post a Comment