Sunday, May 28, 2017

த்ரியம்பகன்

★"த்ரியம்பகன்” என்பது சிவனின் திருநாமங்களில் ஒன்று. இது மூன்றாவது கண்ணைக் குறிக்கும். மற்ற இரண்டு கண்களும் புறக்கண்கள். பார்வையில் படும் குப்பைகளையெல்லாம் அவை மூளைக்கு புகட்டிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக யாரையாவது பார்த்தால், பழைய அபிப்பிராயங்கள் உங்களுக்குள் புறப்படுகின்றன. இந்த இரண்டு கண்களும் உண்மையை பார்ப்பதில்லை.

★ எனவே அறிதலுக்கென்றே சிவனின் மூன்றாவது கண் திறக்கிறது. அதுவே ஞானக்கண். இந்திய மரபில் அறிதல் என்பது படிப்பால் பெறுவதல்ல. புத்தகங்கள் தருவதல்ல. ஆழ்ந்த புரிதலையே அறிதல் என்கிறோம். இந்த மூன்றாவது கண் திறக்கிற போதுதான் சிவனை உணர்கிறீர்கள்.

★படித்த மனிதர்கள் எல்லோருக்குமே ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த கதை தெரியும். ஆப்பிள் பழம் கீழே விழுந்தது பற்றியே அனைவரும் பேசுகிறார்கள். ஆனால், செடியாக இருந்த அந்த ஆப்பிள் மரத்தை ஒரு சக்தி மேல் நோக்கி வளர்த்திருக்கிறதே அது குறித்து யாரும் பேசுவதில்லை.
ஆனால் இப்போது ஆய்வுகளின் மூலம் மனிதனுக்கு ஒரு மூன்றாவது கண் இருப்பதாகவும் அதன் மூலம் பல அற்புதங்கள் நிகழ்த்தமுடியும் என்றும் தெரியவருகிறது. இந்த மூன்றாவது கண் பெயர் பினியல் சுரப்பி. (Pineal Gland).
பிரெஞ்சு அறிவியல் நிபுணரான Rene Descartes (René Descartes was a French philosopher, mathematician and writer who spent most of his life in the Dutch Republic (1596-1650) இதனை ஆன்மாவின் இருக்கை என குறிப்பிடுகிறார். இது இந்துக்களின் ஆக்ஞா சக்கரத்துடன் ( நெற்றி சக்கரம்) தொடர்புடையது.

★சிவபெருமானின் நெற்றிக்கண் எந்த வடிவில் எப்படி காணப்படுகிறதோ அதே மாதிரி இதுவும் அமைந்துள்ளது.
இந்த பினியல் சுரப்பி ஒளியின் மூலம் தூண்டப்படுகிறது.இது மெலெண்டொனின் எனும் திரவத்தை சுரக்கிறது. இத்திரவம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மன அழுத்தத்தை குறைக்கிறது.
நமது மதம் இந்த சுரப்பியை தூண்டுவதன்மூலம் ஞானம்/ பேரின்பம் அடையலாம் என கூறுகிறது. இந்த மூன்றாவது கண்ணை தூண்டுவதன்மூலம் முக்காலங்களை அர்யும் தன்மை,விழிப்புணர்வு, பல நல்ல சக்திகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
குண்டலினி தியானம் மூலம் இந்த மூன்றாவது கண்ணை தூண்டலாம். நம் குருமார்கள் தீட்சயளிக்கும் பொருட்டு புருவ மத்தியில் ஆசீர்வாதம் செய்வது எத்தன பொருட்டு என்பது இப்போதாவது புரிகிறதா?
தகுந்த பயிற்சியுடனும் நம்பிக்கையுடனும் இந்த ஆக்ஞா சக்கரத்தை இயங்கச்செய்து அளவில்லா ஆனந்தத்தையும் சக்தியையும் பெறலாம்.ஒருவர் தகுந்த பயிற்சி பெற்றால் நினைவுகளைக் குவித்து நெற்றிப்பொட்டின் ஊடாக வெளியேற்றி தீயை கூட வரவைக்கலாம் . (சிவன் திரிபுரங்களை எரித்த கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்).
மனதிலுள்ள தீய எண்ணங்களை எரித்து நல்ல எண்ணங்களை வளர்க்கலாம்
( சிவன் காமனை எரிந்தத கதையும் ஏன் முருகப்பெருமான் தோன்றிய கதையும் அனைவரும் அறிந்ததே )

★இதை தகுந்தபயிற்சியிடன் எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருந்தால் நாம் திறமைசாலிகளாக வாழலாம். அப்படி நாம் வாழக்கூடாது என்று நினைக்கும் சிலர்தான் இதயெல்லாம் போலி என்று கதைபரப்பினார்களோ தெரியவில்லை.
நம் முன்னோர்களின் நல்ல சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் நமது அறிவீனத்தால் போலி என்று கேலி செய்து இழந்துவிட்டோம். இனியாவது விழிப்போம்.

❄🙏❄🙏🏾❄🙏❄

No comments:

Post a Comment