Monday, February 27, 2017

சிவவாக்கியர்

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்
🌸 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.
சிவவாக்கியர் முறம் முடைந்து கொண்டிருந்தார்.

சிவனடியார்கள் சிலர் அவருகே வந்து...."சுவாமி,...உங்களால் எங்களுக்கு ஒரு காரியம் கூடவேண்டும் என ஏக்கமாக கேட்டனர்.

கேளுங்கள்!......

*சித்தர்கள் தரிசனம் கோடி பாவங்ககள் நாசமாகுமாமே!*அதனால் எங்கள் பாவங்கள் ஒழிந்தொலைய, உங்களைப்போல சித்தரொருவரை  தரிசித்து வணங்கிக் கொள்ள விழைகிறோம். ஏற்றுக் கொணர்வீர்களாக! என வேண்டினார்கள்.

சிவவாக்கியர்க்கு இவ்வடியார்களின் எண்ணக்குமுறல் எண்ணவென்று உணரப் பெற்றார்.

ஐயா!...அடியார்களே!,,,சித்தர்கள் தெய்வமயமானவர்கள். அவர்களை நீங்கள் பார்க்க நினைப்பது, காணக்கிடைக்கக்கூடியதாக தெரியவில்லை. நீங்களோ ஆசாபாசங்களுடன் உழன்றழைகிறீர்கள். இவ்வாசைகளுடன் நீங்கள் பார்க்க நேர்ந்தாலும், அவர்கள் செய்யச் சொல்லும் செயல்பாட்டை உங்களால் கடைப்பிடிக்க முடியாதே!... அதைத் தவறாகப் பட்டால், அவர்கள் சாபம் கொடுத்து விடுவார்கள். ரிஷிகள், முனிவர்கள் சாபத்திற்குக் கூட விமோசனம் கேட்டுப் பெறலாம்! ஆனால் சித்தர்களின் சாபத்திற்கு விமோசனமே கிடையாது.....என்றார்.

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். அது எங்களுக்கும் தெரியும். இருந்தாலும் நாங்கள் சித்தர்களை தரிசிக்க விரும்புவதெல்லாம் அவர்கள் செய்யும் சித்துவிளையாட்டைக் காண்பதற்காகத்தான். மேலும் தங்கம் உருவாக்குதல் அறிந்து, அதனைக் கொண்டு உலக வறுமையனைத்தையும் ஒழிக்க விழையப் போகிறோம் என்றார்கள் அவர்கள்.

சிவவாக்கியருக்கு இவர்களின் நோக்கம் தெளிவாக புரிந்து போனது. இறைவனையும் அவனால் படைக்கப்பட்ட பஞ்சபூதங்களையும் உள்ளபடி உணர்ந்த சிவவாக்கியருக்கு அவர்களது உள்ளத்தில் உள்ளது தெரியாமல் போகுமா?...........

"ஐயா!,...உங்களைப் போன்றவர்கள் அதிகம் பேர்கள் வந்து தங்கரகசியத்தை அறிய முற்படுவதினால்தான், சித்தர்கள் உங்களின் கண்களுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள்.

மேலும்.... தங்கமே... தங்கமே......
என்று, தங்கத்தின் மீது மோகப்பட்டவர்களிடம் தங்கம் அடைக்கலமாகாது. மீறினால் கெடுதல்தான் மிகுந்து,  குடும்பம் பிரிவினை ஏற்படும். ஒற்றுமையான குடும்பம் குலையும்.  வழக்கு ஏற்பட்டு அலைவர். நிறைய பாவங்கள் கணக்கிலேற்றப்படும். களவு இகழ்வு நிலை உறுதிப்படும். இவையெல்லாம்  சாதாரணமாக நடக்கும். இந்தப் பாவங்களுக்கெல்லாம் நீங்கள் ஆட்படுவீர்களென எண்ணியே சித்தர்கள் உங்களுக்குக் காணப்படுவதில்லை என்றார்.

இரசவாத வித்தைத் தனங்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் தங்கம் உருவாக்குதல் செய்யலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு வந்தவர்கள், சிவவாக்கியர் முன்வந்து, அவர் தந்த அறிவுரைகளைக் கேட்டு தலை குனிந்து நின்றார்கள்.

அன்பானவர்களே! எனவே உங்களின் பொன்னாசையை ஒழியுங்கள். பொருளாசையை அழியுங்கள். சித்தத்தை சிவன்பால் வையுங்கள். இவ்விதமாகும்போது, நீங்களே தங்கமாக மாறியிருப்பீர்கள்! இதுதான் தங்கத்தை நாடசிறந்த சுலபவழி என அவர்களுக்கு மீண்டும் உபதேசத்தருளி அவர்களை அனுப்பி வைத்தார்.

ஞான மார்க்கத்தில் திகழ்ந்த சித்தரான சிவவாக்கியரைத் தேடி நாளும் புதிய புதிய சீடர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

அவரிடம் சேர்ந்தவர்கள் திரும்பத் திரும்ப இரசவாத வித்தை செய்ய விரும்புவதிலேயே ஆர்வம் காட்டினார்களே தவிர ஆன்மார்த்தமான அறிவைத் தேடிப்பெற எவரும் முன்வரவில்லை.

தேடி வந்தவர்கள் எல்லாம், அவரிடம் ஞானம் தேடுவதை விட தங்கத்தைத் தேடுவதற்காகத்தான் வந்து சேர்ந்தனர். இச்செயல் சிவவாக்கியர்க்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியது.

இந்நிலையில் சிவவாக்கியரை சந்திக்க கொங்கணவர்க்கு ஆவல் உண்டானது. அப்போது சிவவாக்கியரின் சீடர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. வரும் கொங்கணவரை சந்தித்து இரசவாதம் பற்றி அறிந்து கொள்ள விரும்பினர்.

இதையெல்லாம் அறிந்துணர்ந்த சிவவாக்கியர் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார். தங்கத்தின் மீது எவரொருவர்க்கு பற்றில்லாதிருக்குமோ, அவர் உருவாக்கும் இரசவாதந்தான் சித்தியாகும். சித்தர்கள் பலரும் இரசவாதம் அறிந்தவர்கள்தான்.  அவற்றையெல்லாம் பற்றி தாமறிந்த அனுபவங்களை இந்த பிரபஞ்சத்துக்கக் காணிக்கையாக்கி விட்டுப் போயிருக்கின்றனர்.

யோக நெறியில் நின்று இரசவாதம் செய்பவர்கள் தேவர்களுக்கு நிகர் நிகர் அவர்களே! அத்தகைய தவ வலிமையும், யோகநெறியும் உடைய சித்தபெருமான்களுக்குத்தான் இரசவாதம் சித்தித்து வந்தது. மேலும் அவர்கள் கண்களுக்கு மட்டுந்தான் தென்படுவார்கள்.

பற்றற்ற சித்தர்களுக்கு அந்த சித்தியினால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். தமது கடுந்தவத்தாலும் யோகத்தினாலும் பெற்ற சித்திகள் அனைத்தையும் பலவீனமான மனிதர்களுக்கே அர்ப்பணம் செய்துள்ளனர்.

சித்தரைப் போல் நாம் மேன்மை நிலை அடைய விரும்புகிறோமா?, அல்லது பலவீன மனிதர் நிலையே போதும் என நினைக்கிறோமா?.

சிவவாக்கியர் இறைவனது எண்ணத்தில் ஆழ்ந்தார். உள்ளம் உருகியது. தன் அனுபவங்களை.எல்லாமா பாடல்களாக ஆக்கினார். சிவவாக்கியரால் உருவான அப்பாடல்கள் அனைத்தும் சிவவாக்கியம் என அழைக்கப்பட்டது.

சிவவாக்கியர் கும்பகோணத்தில் சித்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் பெளர்ணமி நாட்களில் கும்பகோணத்தில் அவர் சமாதி பூஜை நடைபெற்று வருகிறது.

ஞானத்தை அடைவதற்காகத் தவம் மேற்கொண்ட சிவனடியார் ஒருவர் தவம் முடிவதற்குள் இறந்து போய் விட்டார். அவர்தான் சிவவாக்கியராக வந்து பிறந்தார் என்ற ஒரு வரலாறும் பேசப்படுவதுண்டு.

இத்துடன் சிவவாக்கியர்.தொடர் மகிழ்ந்து நிறைந்தது.

*நாளை திருமூலர் வருவார்.*

           திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment