Tuesday, November 24, 2015

யோகத்திற்கு எதிரி புகை

புகை பிடித்தலை விடுதல், வேண்டாத பேர்களின் சினேகத்தை விடுதல், வேண்டாத பொருள்களை விடுதல், வேண்டாத அனுபவங்களை விடுதல், இதெல்லாம் ஆன்ம தூய்மைக்கும், அறிவு மேம்பாட்டிற்கும் உரிய முன் நிபந்தனைகள் ஆகும்.

புகையிலையிப் புகையில் உள்ள நச்சுப் பொருள் ஜீவ வித்துக் குழம்பின் சுரப்பினை வறட்சியுறச் செய்து, மனித உடலின் மொத்த இயக்கத்தையும் பழுதுறச் செய்து விடுகிறது. எனவே மனவளக்கலையும் பயில்வது, புகையும் பிடிப்பது என்பது எப்படிப்பட்டது என்றால், ஓட்டை உள்ள ஒரு பாத்திரத்தில் நீர் சேமிப்பது போல் ஆகும்.

மனவளக்கலைஞர்கள் மனவளக்கலையின் உயர்வைத் தெரிந்து, தங்களுடைய எண்ணம், சொல், செயல்களின் தரத்தை மாற்றிக் கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment