Friday, November 27, 2015

திருவண்ணாமலை

***உலகின் பெரிய எரிமலயாக இருந்த ....

*** பற்றிய
புவியியல் பதிவெடுகளை புரட்டி
பார்க்கும் பொழுது மிக
ஆச்சரியமான தகவல்கள் அறிய
முடிந்தது. திருவண்ணாமலை பல
லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு
எரிமலை (volcano) யாக இருந்து
இன்று ஒரு குளிர்ந்த எரிமலை
(extinct volcano) யாக கருதப்
படுகிறது. அதில் இருந்து
வெளிப்பட்ட நெருப்பு குழம்பு பல
சதுர மைல்கள் பரவி இருந்தது.
பத்தாயிரம் ஆண்டுகள் எரிமலையில்
இருந்து நெருப்பு குழம்புகள்
வராமல் இருந்தால் இன்றைய
ஆராய்ச்சி விதிகளின் படி extinct
volcano என்று கருத படுகிறது.

எரிமலை வெடித்து
திருவண்ணாமலை உருவான விதம்
அமெரிக்காவில் உள்ள நார்த்
கலிபோர்னியாவில் உள்ள சியர்ரா
நிவேதா (Sierra Nevada) மலை
தொடரில் உள்ள மவுன்ட் ஷஸ்தா (Mt.
Shasta) வோடு ஆராய்ச்சியாளர்களால்
ஒப்பிடப் படுகிறது,
திருவண்ணாமலை மிகப்
பழமையான எரிமலைகளில் ஒன்றாக
இருந்து பின்னர் குளிர்ந்து
விட்டது.
திருவண்ணாமலை
மவுன்ட் ஷஸ்தா (Mt. Shasta)
திருவண்ணாமலை ஒரு குளிர்ந்த
எரிமலை, அக்னி ஸ்தலம் என்பதை
மக்களுக்கு நினைவூட்ட மலையின்
மேல் ஒரு குறிப்பிட்ட நாளில் தீபம்
ஏற்றும் பழக்கம் இருந்திருக்க
வாய்ப்புண்டு. இது மக்களை
எச்சரிக்கை படுத்தவும்,
திருவண்ணாமலை ஒரு ஆதி
எரிமலை, மீண்டும் எரிமலை
வெடித்து சிதறலாம் என்று
மக்களுக்கு காலம்காலமாக
நினைவூட்டவும் இந்த பழக்கம்
இருந்திருக்க கூடும். இது சைவநெறி தத்துவசான்றாகவும் அமையப்பெற்றுள்ளது.

எரிமலையில் இருந்து அக்னி
வெளியேறி இயற்கையான
அக்னிஸ்தம்பமாக (நெருப்பு தூண்)
தோன்றும் காட்சி.
அண்ணாமலை தீபம் ஏற்றும் காட்சி
இந்த நெருப்பு குழம்புகள்
குளிர்ந்து மணற்பரப்போடு
பாறைகளாக உருமாறியது. இவை
மிக கெட்டியான பாறையாக
இருபதால் இந்த பகுதிகளில்
தாவரங்கள் பெருமளவு வளர
முடியவில்லை. லட்சக் கணக்கான
வருடங்கள் கழிந்துபின் இந்த இடங்கள்
தாவரங்கள் வளர கூடிய இடமாக
மாற்றியது. எரிமலையில் இருந்து
புதிதாக வந்த நெருப்பு குழம்பு
குளிர்ந்து பாறையான இடங்களில்
தாவரங்கள் பெரிதாக
வளருவதில்லை. இங்கு தாவரங்கள்
வளர பல ஆயிரம் அல்லது லட்சம்
வருடங்கள் ஆகிறது.
இங்கு வளர்ந்த தாவரங்கள் மண்ணில்
உள்ள உலோகங்களையும்,
தாதுக்களையும் எடுத்து மருத்துவ
குணம் உள்ள மூலிகையாக இரண்டு
கட்டங்களாக மாற்றுகிறது. முதல்
கட்டமாக உலோகங்களையும்,
தாதுக்களையும் உறிஞ்சி எடுத்து,
அதை நச்சு தன்மை தன்னை
பாதிக்காத வகையில் பிரித்து
பலவேறு பாகங்களில் சேமித்து
வைக்கிறது (Phytoremediation).
தாவரங்கள் நச்சு தன்மை உடைய
உலோகங்களையும்,
தாதுக்களையும் தனக்குள்
சேமிக்கும் திறணை உலகம்
முழுவதும் இன்றும் பல்வேறு நவீன
விஞ்ஞான முறைகளை பயன்
படுத்தி பெரிய அளவில் ஆராய்ச்சி
செய்து வருகின்றனர்.
இரண்டாவது கட்டமாக பல்வேறு
வகையில் சேமிக்கப் பட்ட
உலோகங்களையும்,
தாதுக்களையும் தனக்குள்ளே
கொண்டு மருத்துவ குணம் உள்ள
மூலிகைகளாக மாறும் விந்தை
தாவரங்களின் உள்ளே நடை
பெருகிறது. இந்த விந்தையை
இன்றும் நம்மால் அறிந்து கொள்ள
முடியவில்லை. ஆனால் சித்தர்கள்
இந்த உண்மையை உணர்ந்து
கொண்டு இந்த தாவரங்களை
மூலிகைகளை மருந்தாக பயன்
படுத்தினர்.
இது போன்ற பகுதிகளில் உள்ள
பல்லாயிரக் கணக்கான தாவரங்களில்
சில நூற்றுக்கணக்கான
தாவரங்களையே சித்தர்கள்
மூலிகைகளாக உறுதி படுத்தினர்.
இந்த பகுதியில வளரும் அனைத்து
தாவரங்களும் மருத்துவ குணம்
உள்ளவையா என்று ஒரு முழு
அளவில் ஆராய்ச்சி நடத்தப்படாமல்
போயிருக்கலாம்.

சித்தர்கள் எதன் அடிப்படையில் ஒரு
சில நூற்றுக்கணக்கான
தாவரங்களை மட்டும் அடையாளம்
கண்டு அதில் உள்ள மருத்துவ
குணத்தை ஆராய்ச்சி செய்து
உறுதி படுத்தி மருந்துகளாக பயன்
படுத்தினர் என்ற ரகசியம் இன்று வரை
நம்மால் முழுமையாக அறிந்து
கொள்ள முடியவில்லை.

நாடு எங்கும் லட்சக் கணக்கான
தாவரங்கள் இருக்கும் போது
மருந்துவ குணம் உள்ள தாவரங்களை
தெரிந்து எடுக்க முதற் கட்டமாக,
எரிமலையாக இருந்து, நெருப்பு
குழம்பு வெளியே வந்து பின்னர்
குளிர்ந்து அந்த இடங்களில் வளரும்
தாவரங்களை ஆராய்ச்சி செய்தனர்.
நெருப்பு குழம்பு வெளி வந்து
பரவும் போது அதில் உள்ள
உலோகங்களும், தாதுக்களும் அதிக
அளவில் அங்கேயே, அருகிலேயே
சில தூரம் வரை இருக்கும்.
நெருப்பு குழம்பு வெகு தூரம்
பரவ, பரவ அதில் உள்ள உலோகங்களும்,
தாதுக்களும் அளவில் குறைந்து
கொண்டே போக வாய்ப்பு
இருக்கிறது. எனவே தான் சித்தர்கள்
நெருப்பு குழம்பு வெளியான
இடங்களை சுற்றிய பகுதிகளில்
தங்கள் மூலிகை ஆராய்ச்சியை
தொடர்ந்தனர்.

No comments:

Post a Comment