Wednesday, November 18, 2015

பிராணாயாமம்

[08:55, 18/11/2015] GK REVATHI: KARMIC HEALING MEDITATIONS: பிராணாயாமம் என்கிற வாசியோகம்! - நமது உடலிலுள்ள 72000 நரம்புகளும் பத்து நாடியில் அடங்கும். இதனை தச நாடி என்பர். இந்த பத்தும் மூன்று நாடியில் ஒடுங்கும். சந்திர நாடி மூக்கின் இடது பக்கத்தில் பொருந்தி உள்ளது. சூரிய நாடி மூக்கின் வலது பக்கம் பொருந்தி உள்ளது. சுழுமுனை நாடி புருவ நடுவில் அமைந்துள்ளது.

சந்திர நாடியை இடகலை என்பர். சூரிய நாடியை பிங்கலை என்பர். சந்திர நாடி - சக்தி, சூரிய நாடி சிவம், பூரணம், சூன்யம்.

பிராணாயாமத்தில் வெளி வாயுவை உட்கொள்வது பூரகம். அவ்வாயுவை உள்ளே நிறுத்துதல் கும்பகம், கும்பித்த வாயுவை வெளி விடுதல் ரேசகம் எனப்படும்!

"ஏற்றி இறக்கி இரு காலும் பூரிக்கும் கணக்கரிவாரில்லை
காற்றை பிடிக்கும் கணக்கரிவார்க்கு கூற்றை
உதிக்கும் குறியதுவாமே"

என்கிறார்.

நமது உடலை சித்தர்கள் மூன்று பகுதிகளாக பிரிக்கின்றனர். அவை, ஆதவன், அக்னி, சந்திரன் என்பவை.

த்யானத்த்தால் அக்னியை மூலாதாரத்தில் நிறைய செய்து, குண்டலினியை எழுப்புகின்றனர். இதற்கு வாசி யோகம் நிறையவே உதவி பண்ணுகிறது. குண்டலினியை உசுப்பி நாகமாக படமெடுக்க செய்து அதன் சஞ்சாரத்தை மேல் நோக்கி அனுப்பிட வாசி யோகம் உதவி செய்கிறது. இப்படி மேல் எழும்பும் குண்டலினி இந்த பயணத்தின் போது பல இதழ்களையுடைய ஆறு ஆதாரங்களிலும் ஒவ்வொன்றாய் பொருந்தும்போது ஏற்ப்படும் அதிர்வு காரணமாக ஒலி தோன்றுகிறது. இந்த ஒலியை கேட்ட பின்னரே குண்டலினி சஹஸ்ராரத்தை அடைகிறது. சஹாஸ்ராரத்தில் உள்ள சிவம் எனப்படும் விந்துவுடன் நாத தத்துவமாகிய குண்டலினி அல்லது வாலை (சக்தி) இணையும். இந்த நிலையே சிவசக்தி ஐக்கியம் எனப்படும். இந்த நிலையில் சுரக்கும் ஊற்றை வானாறு என்றும், சந்திர அமிர்தம் என்றும், மாங்காய் பால் என்றும் கூறுவார். இந்த சந்திர வட்டத்து அமுத தாரையை உண்டார்க்கு உணவு தேவை இல்லை. உடம்பு உணவின்றியே அழியாமல் இருக்கும�
[08:55, 18/11/2015] GK REVATHI: KARMIC HEALING MEDITATIONS: பிராணாயாமம் என்கிற வாசியோகம்! - இந்த நிலையில் சுரக்கும் ஊற்றை வானாறு என்றும், சந்திர அமிர்தம் என்றும், மாங்காய் பால் என்றும் கூறுவார். இந்த சந்திர வட்டத்து அமுத தாரையை உண்டார்க்கு உணவு தேவை இல்லை. உடம்பு உணவின்றியே அழியாமல் இருக்கும் என்று சாகா கலைக்கு சாதனமாக இந்த குண்டலி யோகத்தை கூறுகின்றனர்.

தூய காற்றை போலவே தூய நீரும் உடலை வளர்த்தும். நாளும் விடிகாலை பொழுதில் மூச்சு பயிற்சிக்கு முன் வெறும் வயிற்றில் எவ்வளவு தண்ணீர் அருந்த இயலுமோ அவ்வளவு அருந்த வேண்டும். தொடக்கத்தில் சிறிது சிறிதாக ஆரம்பித்து மூன்று அல்லது ஐந்து குவளை அளவு வரை அருந்தவேண்டும். இவ்வாறு விடிகாலை பொழுதில் ஒரே காலத்தில் அருந்தும் நீர் அமுதமாகி உடலை நோயின்றி நீண்ட நாள் வாழ வைக்கும். நீர் அருந்துகின்ற அளவிற்கும் நீர் அருந்துகின்ற காலத்திற்கும் ஏற்ப பொருந்தி அமுத தன்மை மிகும்.

இவ்விதம் செய்யும் நீர் பயிற்ச்சியால் குட்ட நோய் கூட மருந்தின்றி குணமாகும் என்று சித்த வைத்தியத்தில் கூறப்படுகிறது.

வாழ்க்கை/உணவு முறை உடலின் நோயற்ற தன்மையை நிறைய அளவுக்கு பாதிக்கிறது. அரை வயிறு உணவு, கால் வயறு நீர், கால் வயிறு காற்று உலவிட சிறிய இடம் என்ற முறையில் உண்ணுதலே சிறந்தது. வயதுக்கு தக்க அளவு, செரிமான அளவு அறிந்து அரை வயிறு உண்ணுவதையே அளவறிந்த உணவாக கூறுகின்றனர்.

உண்ட பின்னே உறங்குவதும், நீராடுவதும், உடலுறவு கொள்வதும் உடல் கேட்டிற்கு வழிவகுக்கும். உணவில் கல், மயிர், உமி சேர்வதாலும் நோய் வரும். பனியில் திரிவதாலும், மிகுந்த உணர்ச்சிகளாலும், பால் தயிர் ஒரு சேர உண்பதாலும் நோய் வரும்.
[08:55, 18/11/2015] GK REVATHI: KARMIC HEALING MEDITATIONS: பிராணாயாமம் என்கிற வாசியோகம்! - மலம், சிறுநீர் அடக்காமல், புணர்ச்சியை அதிகம் கொள்ளாமல், உண்ணும் நீரை காய்ச்சி வடித்து அருந்தலாம். நெய்யை உருக்கியே உணவில் சேர்த்தல் வேண்டும். மோரை மிகுதியாக அருந்த வேண்டும். இதை கடைபிடித்தால் நோய் நம்மை அணுகாது.  சித்தர்கள், இந்த பிராணாயாம யோகத்தை நன்கு கவனமுடன், அதி ச்ரத்தையுடன் பயில வேண்டும் என்று உபதேசிக்கின்றனர். காரணம் எல்லா யோக சித்தியையும் அடைவதற்கு இதுவே முதல் படி.

பிராணாயாமத்தில் முதலில் மன அமைதியுடன் பத்மாசனத்தில் அமர்ந்து பழக வேண்டும். ஆணிற்கு வலது பக்கமும் பெண்ணிற்கு இடது பக்கமும் ஆளுமை உடைய பக்கங்களாகும். முதலில் இரு நாசியிலும் மூச்சை இழுத்து விடல் வேண்டும். நான்கு அல்லது ஐந்து முறை செய்து இதயத் துடிப்பைச் சமநிலைக்கு கொண்டு வருதல் வேண்டும். பின் பிரணாயாமத்தை தொடங்க வேண்டும்.

சூரிய நாடியாகிய பிங்கலையில் பிராணனை இழுத்து மெல்ல நிரப்பி, விதிப்படி பந்த பூர்வமாகிய கும்பகம் செய்து மறுபடியும் சந்திர நாடியாகிய இடைகலையில் ரேசிக்கவேண்டும். பின்னர் சந்திர நாடியாகிய இடைகளில் பிராணனை பூரித்துக் கும்பிக்கபட்ட பிராணனை பிங்கலையில் ரேசிக்கவேண்டும்.

சூரிய சந்திர கலைகளில் பிராண வாயு செல்லுங்கால் பிரிதிவி, அப்பு, தேயு, வாயு என்னும் நன்கு தத்துவங்களும் வந்து விலகும். இவை அனைத்தும் ஆகாய தத்துவத்தில் சென்று அமரும். அந்த நேரத்தில் சுவாசம் குறைந்து வரும். இதை சுவாச பந்தனம் என்பர்.
[08:55, 18/11/2015] GK REVATHI: KARMIC HEALING MEDITATIONS: பிராணாயாமம் என்கிற வாசியோகம்! - ஒன்பதாவதில் தேகம் சூரிய பிரகாசமாய் அஷ்டமா சித்தியும் கைவல்யமாய் தேவர்கள் ஏவல் புரிவர். பத்தாவதில் தேகம் தீபம் போல பிரகாசிக்கும். பதிநோன்றாவதில் தேகத்தை வெட்ட கத்தி ஓடும். பன்னிரெண்டாவதில் சொருஒப சித்தி, அண்டத்தில் மௌனம், நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் ஏற்படாது!

சுடரான சுழுமுனையில் சந்திரன் சேரில் பஞ்ச பூதமும் அறிவும் ஒடுங்கும். சூரியன் சேரில் ஐம்பூபுலனும் அறிவும் ஒடுங்கும். சூரியன் சந்திரன் ஒன்றாய் கூடி சுழு முனையில் ஒடுங்கில் அறிவும் தச வாயுவும் ஒடுங்கும்.

இந்த வாயுவை நடுநிலையிலும், மூலத்திலும், நாபியிலும், கண்டத்திலும், சுழியிடமும் சதா நிற்கப் பெற்றவர்களே மெய் ஞானியர்!

இந்த பிரணாயாமத்தை அருணோதயம் முதல் மூன்று நாழிகை வரையிலும், மத்தியானத்திலும், அஸ்தமனத்துக்கு முன்னும் பின்னுமாக இரு முகூர்த்தமும், அர்த்த ராத்திரியிலும் பிரதி தினம் நான்கு முறை செய்ய வேண்டும்.

திருமந்திரத்தில் இந்த பிராணாயாம சுற்றை, 16 வினாடி இழுத்து, 64 வினாடி இருத்தி, 32 வினாடி விடுதல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தச வாயுக்களில் ஒன்றான "பிராணன்" என்ற வாயுவை (உயிர் காற்றை) வெளியில்விடாதவாறு கட்டுபடுத்துவதே பிராணாயாமம்!
[08:55, 18/11/2015] GK REVATHI: மிக நீளமான பதிவு. வாசியோகம் பற்றி தேடியபோது கிடைத்தது. அன்பர்கள் தயைகூர்ந்நு படித்து அறிய வேண்டுகிறேன். மிகவும் நல்ல பதிவு. வாழ்க வளமுடன்!!

No comments:

Post a Comment