Friday, January 8, 2016

திருநீற்றின் மகத்துvam

***{ ஓம் நமசிவாய }***
------------------
திருநீற்றின் மகத்துவம்!
அருகம்புல்லைச் சாப்பிடும் பசுஞ்சாணத்திலிருந்தே திருநீறு தயாரிக்கப்படுகிறது. அருகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றிலும் அதிர்வுகள் இருக்கின்றன. நம்மால் உணர முடியாத அந்த அதிர்வுகளின் மத்தியில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது உடலும் இவ்வதிர்வுகளை ஏற்றுக்கொள்கிறது.
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து மதத்தவர்களிடம் காணப்படுகிறது.
இருபுருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகள் உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி, மனவசியம் லகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க இந்த இடத்தில் திருநீறு, சந்தனம், குங்குமம் போன்றவை இடப்படுகின்றன. இந்த உண்மையைச் சாதாரணமாகக் கூறி விளங்க வைக்க முடியாத மக்களுக்கு, நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கிறார்கள்.
விபூதி இட்டுக் கொள்வதன் பலன்கள்
புருவ மத்தி: (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
தொண்டைக் குழி: (விசுத்தி சக்கரம்) சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
நெஞ்சுக்கூட்டின் மையம்: தெய்வீக அன்பைப் பெறலாம்.
விபூதியை எடுக்கும்போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. நம் உடலின் பவித்தரமான பாகம் என்று இதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது....

No comments:

Post a Comment