Wednesday, January 6, 2016

சிம்' கார்டு

#'சிம்' கார்டு இல்லாமல் எந்த ஒரு மொபைல் போன் சேவையின் நெட்வொர்க்குடனும் தொடர்பு கொள்ள முடியாது. சிம் உள்ள போனில் எண்களை அழுத்தியதும், என்ன விதமான மொபைல், அதன் தொடர்பு எண் என்ன, யாருக்கு அழைப்பு போகிறது. அது எந்த மொபைல் சேவை, எந்த இடத்திலிருந்து அழைக்கப்படுகிறது போன்ற தகவல்களை பதிவு அறிய சிம்கார்டு உதவுகிறது. 'சிம்'கார்டுக்குள் ஒரு சிலிக்கன் சில்லு இருக்கும். அதை ஒரு கெட்டி பிளாஸ்டிக் அட்டையில் பதித்திருப்பார்கள். சில்லுடன் பதிக்கப்பட்டுள்ள உலோக, 'சர்க்யூட்' மொபைல்போனின் தொடு முனையுடன் பட்டதும் தொடர்பு ஏற்படும். 'சிம்' கார்டுகள், மினி (25 மி.மீ., நீளம், 15 மி.மீ., அகலம், 0.76 மி.மீ., தடிமன்), மைக்ரோ (15 மி.மீ., நீளம், 12 மி.மீ., அகலம், 0.76 மி.மீ., தடிமன்) மற்றும் நேனோ (12.30 மி.மீ., நீளம், 8.80 மி.மீ., அகலம், 0.67 மி.மீ.,தடிமன்) ஆகிய மூன்று அளவுகளில் வருகின்றன.சிம் கார்டில் ஐ.சி.ஐ.சி.டி., என்ற அடையாளம் காட்டும், 'சர்க்யூட்' இருக்கும். இதில் முதன்மை கணக்கு எண் என்ற 19 இலக்க எண் உள்ளது. மேலும், மொபைல்போன் சேவையைத் தரும் நிறுவனத்தின் அடையாள எண், பயன்படுத்துவோரின் அடையாள எண் ஆகியவை பதிந்திருக்கும்.இது தவிர, ஐ.எம்.எஸ்.ஐ., என்ற சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாள எண்ணும் உண்டு. இந்த 19 இலக்க எண்ணில், முதல் மூன்று இலக்கங்கள், ஒரு தேசத்தை குறிக்கும், அடுத்த மூன்று இலக்கங்கள் மொபைல்போன் சேவை நெட்வொர்க்கின் எண்ணை குறிக்கும். அடுத்து சந்தாதாரரின் அடையாள எண் இருக்கும். மேலும், மொபைல்போன் நெட்வொர்க்கில் சிம்கார்டு முறையாக வாங்கப்பட்டது தான் என்பதை அடையாளம் காட்டும், 'ஆத்தென்டிகேஷன்' எண்ணும், 128 'பிட்'தகவலாக பதிவாகியிருக்கும்.தவிர, குறிப்பிட்ட அளவுக்கு குறுஞ்செய்திகள் மற்றும் நீங்கள் பதிந்து வைக்கும் பிறரது மொபைல்போன் எண்கள்ஆகியவையும் இதில் சேமிக்கப்படும்.

No comments:

Post a Comment