Wednesday, January 6, 2016

அறிவே தெய்வம்"

கேள்வி : ஐயா, "அறிவே தெய்வம்" என்று சொல்லுகின்ற தாங்கள். சுத்தவெளியில் நிலைத்து தவம் செய்ய கற்றுக் கொடுப்பதின் பொருளென்ன?

மகரிஷியின் பதில் : சுத்தவெளியே அனைத்தடக்கப் பூரணமாகவும், பேராற்றலாகவும், பேரறிவாகவும் இருப்பதால் சுத்தவெளியே எங்கும் ஊடுருவி நிறைந்து சீவன்களுக்குள் அறிவாகவும் இயங்குகிறது.

அதனையே நோக்கித் தவம் செய்து வரும்போது அதுவாகி முடிவில் அதுவே தானுமாக, தனது அறிவுமாக உள்ள உண்மை வி...ளங்கும்.

மேலும் மன அலைச்சுழல் குறைய வேண்டும் என்றால், மனம் பீட்டா அலை வேகத்தில் இருந்து குறைந்து ஆல்பா, தீட்டா, டெல்டா அலை வரை வர வேண்டும். சுத்தவேளியோடு மனம் ஒன்றியிருக்கும் பொழுது தானும் அதுவாக, சுத்தவெளியாக, மாறுகிறது.

மனம் ஆழ்ந்து எதை நினைக்கிறதோ அதுவாகவே மாறும். அது இயல்பூக்க நியதி.

இறைவெளி வெளியில் நிலைக்கும்போது தானும் - மனமும் இறைவெளியாக மாறுகிறது.

இதுவரை வாழ்வில் பொருள், புகழ், அதிகாரம், புலனின்பத்தில் எல்லைக்கட்டிப் பழகிய மனத்தை விரித்து, பேரியக்க மண்டலம் முழுவதையுமே, தனக்குள் அடக்கிக் கொள்ளும் வகையில் மனம் விரிந்து, பின்னர் அதையும் கடந்து சுத்தவெளியாகிய தனது மூலத்தோடேயே நிலைபெறப் பழகப் பழக மனத் தூய்மையும், வினைத் தூய்மையும் மனிதனுக்குக் கிடைக்கின்றன.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment