கர்மா👉👉👉👉
கர்மா என்றால் செயல் என்று பொருள். நன்மை, தீமை, நாம் செய்யும் செயல்களே கர்மா எனப்படுவது ஆகும். நமது வாழ்க்கை, நமது பிறப்பில் செய்யும் செயல்களின் கணக்கு, ஆதாவது கர்மாவின் கணக்கு. இந்த கணக்கு சரியாகும் வரை உங்களது பிறவி தொடரும்.
நம்மை அறிந்தும், அறியாமலும் நாம் நிறைய செயல்கள் செய்கிறோம். இதில் நமக்கே தெரியாமல் நன்மை விளையவும் வாய்ப்புகள் உண்டு, தீமைகள் விளையவும் வாய்ப்புகள் உண்டு.
ஒருவரது கர்மா தான் அவரது கடந்த பிறவியில் இருந்து நிகழ் பிறவிக்கும், நிகழ் பிறவியில் இருந்து அடுத்த பிறவிக்கும் கூட்டிச் செல்கிறது.
நமது கர்மா தான் நமது பிறப்பிடம், சூழல், குடும்பத்தை முடிவெடுக்கிறது என்று கூறப்படுகிறது. நமது வாழ்க்கை முழுவதிலும் ஏற்படும் இன்பம், துன்பம், வலி அனைத்தையும் கர்மா தான் தீர்மானம் செய்கிறது…..
எதிர்பார்ப்புகள் அற்ற உதவி
: கர்மாவை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டியதில் முக்கியமானது தர்மம் (அ) கடமை. யார் ஒருவர் எந்த ஒரு எதிர்பார்ப்பும், பின் விளைவின் எதிர் நோக்கமின்றி தங்களது கடமை (அ) தர்மம் செய்கிறார்களோ அதேவே உத்தமம் என்று கூறப்படுகிறது.
கர்மா வகைகள்: கார்மாவை மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள் அவை., சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா மற்றும் பிராரப்த கர்மா.
சஞ்சித கர்மா: சஞ்சித கர்மா என்பது, முற்பிறவியில் நாம் செய்த பலன்களை பொருத்து, நமக்கு வாய்க்கப்பட்ட இந்த பிறவியாகும். சஞ்சித கர்மாவின் பலன் தான் நமது இந்த பிறவி மற்றும் அடுத்த பிறவியிலும் தாக்கமாக இருக்கும்.
ஆகாம்ய கர்மா:
இந்த பிறவியில் செய்யும் பாவ, புண்ணியத்தின் கணக்கு தான் ஆகாம்ய கர்மா ஆகும். இது, உங்களது அடுத்த பிறவிகளில் தாக்கம் செய்யும்.
பிராரப்த கர்மா:
ஏற்கனவே கணிக்கப்பட்ட கர்மாவின் செயல்பாடு தான் பிராரப்த கர்மா. உங்கள் தற்போதைய பிறவியில் நடந்துக் கொண்டிருக்கும் செயல்கள் மற்றும் விதி அனைத்தும் பிராரப்த கர்மாவின் தாக்கமாக தான் இருக்கும்.
பாவப்பதை ஒழிப்பது:
நீங்கள் பாவத்தை ஒழிப்பதால், தீமையை கைவிடுவதால், உங்களது ஆகாம்ய கர்மா இரட்சிக்கப்படும். பாவ, புண்ணியத்தின் கணக்கின் படி தான் சஞ்சித கர்மா உங்களை பின் தொடர்ந்து வருகிறது. பாவங்களை நீங்கள் முற்றிலுமாக நீக்கும் போது, உங்களது சஞ்சித கர்மாவானது முடிவு பெரும்.
கர்ம யோகா:
எப்படியானாலும் உங்களது தற்போதைய பிறவியில் பிராரப்த கர்மாவின் தாக்கம் இருக்க தான் செய்யும். ஏனெனில் இது நீங்கள் சென்ற பிறவியில் செய்த செயல்களின் தாக்கம். அகங்காரம் தவிர்த்து நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள், சமன்திறன் மனநிலையில் பயணம் செய்யுங்கள். யார், எவரென்று பாராமல் நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்தல் முக்கியம்.
ஆசை துறக்க வேண்டும்:
கர்மா என்பது ஆசையுடன் பிரயாணம் செய்யும் ஒன்றாகும். இந்த ஆசைதான் உங்கள் கர்மாவை ஆட்டிப்படைக்கிறது. ஆசையை துறந்து நன்மை காரியங்களில் ஈடுபடும் போது அதில் பாவம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
மகிழ்ச்சி அகங்காரம்: இன்றி நீங்கள் பூரணமாய் ஓர் செயலில் ஈடுபடும் போது உங்களுக்கு புண்ணியம் சேர்கிறது.இதுவே உங்களுக்கு நித்திய ஆனந்தத்தையும், செம்மையான மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மற்றும் இதுவே, உங்களது வாழ்க்கை சக்கரமான பிறப்பு, இறப்பிற்கு முற்று புள்ளியாய் அமைகிறது
Monday, January 4, 2016
கர்மா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment