Thursday, January 7, 2016

மனிதனுக்கு வரும் 4 கண்டங்கள் திருமூலர்

👉🏻மனிதனுக்கு வரும் 4 கண்டங்கள் விளக்குகிறார் திருமூலர்:

மனிதன் வாழ்நாள் காலத்தில் 4 விதமான உயிர் போகும் கண்டத்தை சந்திக்கிறான். அதை பற்றி
திருமூலர் தெள்ள தெளிவாக விளக்குகிறார்:

“அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சும்
மூன்றும்,
மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்பது ஆகும்
கிழிகின்ற காலஅறு பத்திரண்டு என்பது
எழுகின்றது ஈரைம்பது எண்அற்று
இருந்தே” (திம 742)

பொருள்:

முதல் கண்டம்:
25 - 28 வயது வரை (இந்த
கால கட்டத்தில்தான் மனது அலைபாயும்
காலகட்டம். மனிதன் உடம்பை பேண மாட்டான்.
காம இச்சை மிகுந்திருக்கும். முதியோர்களை
மதியா தன்மை இருக்கும்)

இரண்டாம் கண்டம்:

30 - 33 வயது வரை (இந்த
கால கட்டத்தில் குடும்ப பாரம் மிகுதியால்
உடலை பேண மாட்டான். மனம் எப்போதும்
கணத்திருக்கும், வாழ்க்கை பற்றி பயம் கலந்த
சிந்தனை மிகுதிருக்கும்)

மூன்றாம் கண்டம்:
60 - 62 வயது வரை (இந்த
காலகட்டத்தில் மனிதனுக்கு தனது
சந்ததியினர் குறித்த கவலைகள் மேலோங்கி
இருக்கும். முதுமை குறித்த பயம் இருக்கும்,
ஆளுமை தன்மை மேலோங்கி இருக்கும்
அதனால் ஏற்படும் அழுத்த காரணத்தால் தனது
உடலை பேண மாட்டான்)

நான்காம் கண்டம்:

மேல் கூறிய 3 கண்டங்களை
ஒரு மனிதன் கடந்துவிட்டால் தீர்க்க ஆயுள்
பெறுவதற்கு சித்தி உண்டு. இதற்கு மேல்
எல்லை இல்லை.

இதைத்தான் இன்றைய அறிவியல் அறிஞர்கள்
Human Life Cycle Psychology என்கின்றனர்.

No comments:

Post a Comment