Saturday, November 9, 2019

Maharishi thought. N0v"7

*வாழ்க்கை மலர்கள்: நவம்பர் 7*

*பிறவித் தொடர்பு*

எரியும் விளக்கிலிருந்து தோன்றும் வெப்பமும், வெளிச்சமும், விளக்கை நிறுத்திய உடனே எங்கே போகின்றன? சுற்றிலும் தொடர்பாக உள்ள அணுக்களில் அவ்வெளிச்சம் பிரதிபலித்துக்  கொண்டே இருக்கிறது. அணுவில் காந்தமாகிறது. அந்த அணுக்கள் தாங்கும் அளவு போக மீதம் சூனியம் என்ற ஈர்ப்புச் சக்தியில் சேர்ந்து விடுகிறது. சூன்யமாகி  விடுகிறது, வெளிச்சம் தோன்றிக் கொண்டே பிரதிபலித்துக் கொண்டே, சூனியமாகிக் கொண்டே இருக்கிறது.

ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது; போய்க் கொண்டேயும் இருக்கிறது. ஆனால், பார்வைக்கு ஆறு நிலையான வடிவமாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. வரவு நின்று விட்டால் பார்க்கும் நீரானது ஓடி மறைந்துவிடும், ஆறு காலியாகத் தெரியும். இது போன்றேதான் விளக்கின் ஒளியும் நிலையானது அல்ல. விளக்கை நிறுத்திய உடனே ஒளி மறைந்து விடுகிறது. இதுபோன்றே, உடலில் சுவாச ஓட்டம், இரத்த ஓட்டம் நின்றவுடன், அதனால் உற்பத்தியாகி இயங்கிக் கொண்டேயிருந்த காந்த அலைகளின் உணர்ச்சிச் செயல்பகுதி செயலற்றதாகி விடுகிறது. அலை அடங்கின நீராகும் தன்மை போலவும், நீராவி குளிர்ந்து விட்டால் தண்ணீராகிவிடும் தன்மை போலவும் அறிவு (Consciousness) என்ற உணரும் சக்தியும் ஆதி என்ற மௌன சக்தியாகி விடுகிறது.

எழுச்சி, இயக்கம் என்னும் நிலையில் எல்லையுடையதாக இருந்த சக்தி இயக்கம் நிற்க எல்லையற்று நிரவி நிர்விகற்ப நிலையாகி விடுகிறது. உயிரைப் பற்றிக் கற்பனையாக எழுதப்பட்டவற்றை மறந்து, அறிவை நிறுத்தி ஆராய்ந்துபார்த்தால் இது நன்றாக விளங்கும்.

நாத விந்துவின் சேர்க்கையே எல்லாப் பிறவிகளுக்கும், முன் தொடர்பும் பின் தொடர்பும் ஆகும். அதாவது தாய் தகப்பன் முன்பிறவி, மக்கள் பின் பிறவியாகும்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

No comments:

Post a Comment