Wednesday, December 5, 2018

Breath methods

குருவே சரணம்.🙏

🌷 *மூச்சே உயிர் மூச்சே*

மனிதர்களின் உடலில் ஏற்படும் பல உபத்திரவங்களுக்கு மூச்சுக் காற்றின் தரமும் மூச்சு விடும் முறையும் முக்கிய காரணியாக அமைகிறது.

ஆரோக்கியமாக வாழ மூச்சுக் காற்றின் தரம் அவசியம். அதிலும் சுத்தமான காற்றோட்டம் (ஒருமுறை சுவாசித்த காற்றை மறுமுறை சுவாசிக்காத சூழல்) உள்ள இடத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல் நாம் வேலைப்பார்க்கும் இடங்களிலும் சுத்தமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் உடலில் ஏற்படும் பல இன்னல்களுக்கு அடிப்படை காரணமே அசுத்த காற்று நிறைந்த இடத்தில் அதிக நேரம் இருப்பதால்தான்.

கொசு தொந்தரவு இருக்கும் பட்சத்தில் ரசாயன கொசுவிரட்டிகள் பயன்படுத்தாமல் காற்று வந்துபோகக்கூடிய கொசு வலைகளை பயன்படுத்தி ஜன்னல்களை திறந்து வைத்து தூங்க வேண்டும்.

🌷 *மூச்சு விடும் முறை*

ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பின்னர் மூன்று விநாடி கழித்து இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்தக் கை மேலே உயருகிறது? அடிவயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதான். இதுதான் உண்மையாக மூச்சை இழுத்துக்கொள்ளும் முறை.

எந்த வயதுக்காரரும் தரையில் தலையணை எதுவுமின்றி படுத்துக் கொண்டு இப்படி வயிற்றிலும் நெஞ்சிலும் கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால், நுரையீரல்களின் கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.

ஆனால், 100 க்கு 99 பேர் நெஞ்சினால்தான் சுவாசிக்கிறார்கள். வியர்வை நாற்றம், புகைப் பிடிப்பவர் விடும் மூச்சு நாற்றம் முதலியவற்றைக் தடுக்க மூச்சையும் மூக்கையும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறோம் அல்லவா, அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்குச் செல்வதே இல்லை. அசுத்த காற்றை சுவாசிக்க நேர்ந்தால் இவ்வாறு நிகழும். அதனால்தான் இவர்கள் மூச்சுவிடுதல் தொடர்பான நோய்களைப் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். சுத்தமான காற்றை சுவாசிக்காததால் தான் உடம்பில் அங்கங்கே வலிகள் எட்டிப் பார்க்கிறது.

பிராணாயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் சுத்தமான காற்றோட்டம் உள்ள இடத்தில் காலையில் 5 நிமிடங்கள் மாலையில் 5 நிமிடங்கள் என்று தரையில் படுத்துக்கொண்டு ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்.

நாம் தூங்கும்போது நேராக படுத்துக்கொண்டு ஆழ்ந்து சுவாசிக்கிறோம். அப்போது நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்கும் நன்கு ஆக்ஸிஜன் கிடைக்கும். அவ்வாறு கிடைத்தால் மனம் உற்சாகமாக இருக்கும். எனவே *தூங்கும் இடத்தில் சுத்தமான காற்றோட்டம்* இறுக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் *இனிமையாகப் பழகும் அரிய மனிதர்* என்று பெயர் பெற்றுவிடுவீர்கள்.

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

அன்புடன்
போகர் வசீகரன்
போகர் சித்தாந்தசபை
பழநி.
9488008816

No comments:

Post a Comment