Thursday, November 22, 2018

Zen story. Tamil

*ஒரு சீடன் தன குருவிடம் கேட்டான்,
”நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளான்.அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன?’*
*‘குரு சிரித்துக் கொண்டே,”அது அவரவர் விருப்பம், ”என்றார். பகல் உணவு வேலை வந்தது. அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான்.ஒரு கிண்ணத்தில் பாலும் மறுகிண்ணத்தில் பசு மாட்டு சாணமும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது. சீடன் விழித்தான்.குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார், ”பால்,சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது.பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?” என கேட்டார்.. சீடன் விழித்தான்..*
*குரு தொடர்ந்தார் பால் போன்ற நல்லவை நாம் மகிழ்வாய் வாழ... அதனை அப்படியே ஏற்கலாம்...*
*சாணியை விலக்கி மண்ணில் புதைத்து உரமாக்குவது போல தீயவைகளை விலக்கி புதைத்து அது தரும் பாடத்தை வாழ்விற்கு உரமாக்கி உயரும் வல்லமை கற்க வேண்டும் என்றார்...*
படித்ததில் பிடித்தது பகிர்கிறேன் வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment