Wednesday, November 7, 2018

மூலிகை இரகசியங்கள் " -பாகம் 2. Varma madter Gopalakrishsn

"

16.நற்சீரகம் பாலில் கொள்ள வாயு,கண்ணோய்,வெட்டை ,காங்கை, மூல கொதிப்பு அகலும்.

17. கடுக்காயை பாலில் கொள்ள காயசித்தியாகும் ,சயம் ,காசம், ஈளை, இருமல் ,சீதகடுப்பு ,மலபந்தம் தீரும்.

18. சுக்கை பாலில் கொள்ள பசியுண்டாகும், குன்மம், சூலை, மூலவாயு ,உருத்திர வாயு தீரும்.

19. மிளகை பாலில் கொள்ள குளிர்சுரம், பாண்டு, கபம் ,கிராணி, குன்மம் ,வாயு ,அரோசிகம் ,பித்தம், மூலம் ,பிரமேகம் ,வறட்டு இருமல், வாதம், குய்ய நோய் ,வாதசோணிதம், கண்ணோய், அஜீரணம், செவிவலி, இரத்தகுன்மம் ,வெட்டை தீரும்.

20. சாதிபத்திரியை பாலில் கொள்ள சுரம் ,கிராணி ,மந்தபேதி தீரும், சுக்கிலம் பெருகும் ,உடலில் வாசமுண்டாகும்.

21. கிராம்பை பாலில் கொள்ள பித்த சோபம் ,அதிசாரம் ,உதிர கிராணி, கடுப்பு தீரும்.

22. சாதிக்காயை பாலில் கொள்ள பேதியை கட்டும், விந்து கட்டும், இளைப்பு ,வாதம் ,கிராணி தீரும்.

23. இஞ்சியை பாலில் வேகவைத்து வடித்து  குடிக்க நெஞ்சடைப்பு, இருமல் ,இளைப்பு ,சூலை ,வாதம், குன்மம், தாபசுரம் ,சோபம், மயக்கம், வாயு மந்தம் ,பித்தம் தீரும்.

24. வெள்ளைபூண்டை பாலில் அவித்து கொள்ள நெஞ்சடைப்பு, வாயு, மூலம், குன்மம் ,பீலிகை, உதிரநோய் ,வெட்டை ,சயம் தீரும்.

25. வெள்ளை குங்கிலியத்தை பாலில் கொள்ள பிரமேகம் ,வெட்டை, சூலை ,புண் ,மேகம் தீரும்.

26. வெள்ளரி விதையை பாலில் கொள்ள நீர் அடைப்பு, கல்லடைப்பு, நீர்க்கட்டு ,சிறுநீரக தசை அடைப்பு, நீர்த்தாரை விரிவு ,நீர்ச்சுருக்கு நீங்கும்.

27. நீர்முள்ளி விதையை பாலில் கொள்ள மேகம் ,நீர் வீக்கம், இளைப்பு, இருமல் தீரும், இரத்த விருத்தி உண்டாகும்.

28. துத்தி விதையை பாலில் கொள்ள கை காலில் படருகின்ற கருமேகம், குஷ்டம் ,வெப்பு அகலும்.

29. சாரப்பருப்பு சாலாமிசிரி இவைகளை தனித்தனியாக பாலில் கொள்ள விந்து கட்டும் ,வெள்ளை விழுதல் ,நீர்க்கடுப்பு நீங்கும்.

30. திப்பிலி அரிசியை பாலில் கொள்ள சிலேத்துமம் ,கபம் ,வயிறு உப்புசம் ,மேகம் ,வாத சுரம், கப சுரம் தீரும் ,தாது விருத்தியாகும்.

(தொடரும்)

நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755
8883883303.

No comments:

Post a Comment