Sunday, April 15, 2018

Varmakalai. Thilarthakalam

"வற்மகண்டி" ௩

'நெற்றிநடு புருவத்திலிருந்து தானே
நேராக நெல்லிடைக்கும் தாழ்வதாக
உற்றதொரு திலர்தவர்மம் கொண்டால் கேளு
உண்மையிலே அடிகொண்ட ஆளுதானே
அற்றதலை அண்ணாந்து நிமிர்ந்திருக்கும்
அறிந்துபார் முற்றுமே நாழிகைதான்
உற்றதொரு மூன்றே முக்காலுக்குள்
உரைத்தனென்று குருமுனி மொழிந்தார்தானே'-3

விளக்கவுரை:-
                          இரண்டு புருவங்களுக்கு மத்தியிலிருந்து ஒரு நெல் அளவு கீழே அமைந்துள்ள வர்மம் 'திலர்தகாலம்',இந்த வர்மத்தில் அடிபட்டால் மயங்கி அண்ணாந்து வானம் பார்த்து கிடப்பான்,அடிபட்டவுடன் ஒன்றரை மணி நேரத்தில் இளக்குமுறை செய்துவிடவேண்டும் இல்லையெனில் குணமாக்குவது கடினம் என்று குருமுனிவராகிய அகத்தியர் பெருமான் கூறினார்.

'தானான நாழிகைதான் கழிக்கும் முன்னே
தயவுடனே இளக்குமுறை தன்னைக் கேளு
தானான சிரசில் ஓரடியடித்து
கண்டமுடன் தடவிக் கருணைகூர்ந்து
ஈனான நெஞ்சில் ஓரடியடித்து
ஈசனை நினைத்து நீ செய்தாயானால்
ஊனான உண்டான வர்மம் தீர்ந்து
உடன் எழுந்திருக்கும் என்றுமுனி இயம்பினாரே'

விளக்கவுரை:-
                          அடிபட்ட ஒன்றரை மணிக்குள்ளே எப்படி இளக்குமுறை செய்யவேண்டும் என்று கூறுகிறேன் கேள்,ஈசனை மனதார வேண்டிக்கொண்டு அடிபட்டவரை எழுந்து அமரவைத்து தலை உச்சியில் மூன்று தட்டுதட்டி ,கழுத்திலிருந்து கீழாக தோள்பட்டை வரை தடவிவிட வேண்டும்,அதன்பின் நெஞ்சில் மூன்றுமுறை தட்டிவிடவேண்டும்,உடனே அடிபட்டவர் எழுந்துவிடுவார் என்று அகததியர் பெருமான் கூறியுள்ளார்.

நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755.

No comments:

Post a Comment